• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

அப்பு- நடிகைகள் குஜால் தொடர்பு

By Staff
|

சென்னை:

சங்கரராமன் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியான அப்புவுடன் பிரபல நடிகைகளுக்கும் தொடர்பிருந்தது போலீஸ் விசாரணையில்தெரிய வந்தது.

Appuசங்கரராமன் கொலையில் முக்கிய பங்கு வகித்த கூலிப்படைத் தலைவன் அப்பு தற்போது தலைமறைவாக உள்ளான். கடத்தல், கட்டப்பஞ்சாயத்து என கோடிக்கணக்கில் பணம் புரண்டதால் ராஜ வாழ்க்கை வாழ்ந்து வந்தான் அப்பு. எந்த ஊருக்குச் சென்றாலும் நட்சத்திரஹோட்டல்களில் தங்குவது, நீச்சல் குளத்துடன் கூடிய பங்களாக்கள் என அப்புவுக்கு எதுவும் கம்மி இல்லை.

செய்வது அண்டர்கிரவுண்ட் தாதா வேலை தான் என்றாலும் தனது வசதி காரணமாக மூத்த மகனை அமெரிக்காவில் படிக்க வைத்துக்கொண்டிருக்கிறான் அப்பு. அவ்வப்போது மகனைப் பார்த்துவிட்டு வர அமெரிக்காவுக்கும் சென்று வந்துள்ளான்.

இது தவிர முக்கியமான கடத்தல் வேலைகள், ஆட்களைக் காலி செய்யும் வேலைகளை முடித்த பின் 2 வாரங்கள் ஏதாவது எக்ஸாடிக்லோகேசனில், பெரும்பாலும் வெளிநாட்டில் ஓய்வெடுப்பது இவன் வழக்கம் என்கிறது போலீஸ். இதெல்லாம் போலீசுக்கு இப்போது தான்தெரியுமா என்று கேட்காதீர்கள்.

அப்பு குறித்த போலீஸ் ரெக்கார்டுகளில் இதெல்லாம் ஏற்கனவே ரிஜிஸ்டர் ஆன விஷயங்கள் தான். ஆனாலும் அப்புவின் பண பலம் எல்லாமுக்கிய கட்சிகளிலும் ஆளமாய் பாய்ந்திருக்கிறது. இந்தக் கட்சிகளில் பணத்தால் வாங்கப்பட்ட விஐபிக்கள் அப்புவின் பாக்கெட்டில்,கூடவே முக்கிய போலீஸ் அதிகாரிகளையும் வளைத்தே வைத்திருந்தான் அப்பு.

குறிப்பாக வட சென்னைப் பகுதி காவல்துறை அதிகாரிகளில் சிலருக்கு அப்பு அட்சய பாத்திரம்.

Appu சங்கரராமன் கொலை வழக்கை விசாரிக்கும் எஸ்.பி.பிரேம் குமார் தலைமையிலான சிறப்புப் படை, அப்பு குறித்த பின்னணி விவரங்களைதோண்டியபோது, அவனுக்கு முக்கிய விஐபிக்கள், காக்கிச் சட்டைகள் மத்தியில் இருந்த அதிகாரத்தைக் கண்டு முதலில் அதிர்ந்ததாகசொல்கிறார்கள்.

இதையடுத்து அந்தக் காக்கிகளையும் தங்களது விசாரணை வளையத்துக்குள் கொண்டு வர இந்தப் படை திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.

மேலும் அப்பு குறித்த சிறப்பு விசாரணையில் வெளி வந்துள்ள இன்னொரு தகவல், அவனுக்கும் பிரபல நடிகைகளுக்கும் இருந்த குஜால்தொடர்பு குறித்தது.

சென்னை மகாலிங்கபுரத்தில் உள்ள ஒரு நடிகை, அப்புவுடன் கிட்டத்தட்ட குடும்பமே நடத்தியிருக்கிறார் என்கிறார்கள். சில வருடங்களுக்குமுன்பு கதாநாயகியாக ரவுண்டு வந்த அந்த நடிகை, இப்போது பல ரவுண்டு சுற்று பெருகி விட்டார். இதனால், அம்மா வேடங்களில் நடிகைநடித்து வருகிறார்.

இந்த அம்மா நடிகை மூலம் மற்ற நடிகைகளிடமும் அப்புவுக்குத் தொடர்பு ஏற்பட்டுள்ளது.

ஆழ்வார் திருநகரில் வசித்து வரும் ஒரு முன்னணி நடிகையுடன் அப்புவுக்கு தொடர்பு இருந்துள்ளது. தமிழில் அறிமுகமாகி, இந்திக்கு போய்மீண்டும் தமிழ் திரை உலகுக்கு வந்த அந்நடிகைக்கு அண்மையில் தான் திருமணம் நடந்தது.

Appu and Jayendrarதிருமணத்திற்கு அப்பு பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள வைர நெக்லஸ் பரிசு வழங்கியிருக்கிறான். திருமணத்துக்கு பிறகும் அந்த நடிகையுடன்அப்புவின் நட்பு தொடர்ந்திருக்கிறது. அந்த நடிகையுடன் பல தடவை அப்பு வெளிநாடுகளுக்கு சென்றுள்ளான்.

அந்த நடிகைக்கு ஆந்திராவில் ஒரு சொகுசு பங்களா உள்ளது. இதையும் அப்பு தான் வாங்கித் தந்ததாக சொல்கிறார்கள்.

அந்த பங்களாவில் அப்பு பதுங்கி இருக்கலாம் என்று சந்தேகம் ஏற்பட்டுள்ளதால் ஒரு தனிப்படைப் போலீஸ் அங்கும் விரைந்திருக்கிறது.

இதைத் தவிர சென்னை, மும்பை, ஹைதாராபாத்திலும் சந்தேகப்படும் இடங்களில் எல்லாம் அப்புவைத் தேடி அலைந்துகொண்டிருக்கின்றன தமிழக போலீசின் சிறப்புப் படைகள். ஆனாலும், இதுவரை சிக்காமல் கண்ணா மூச்சி ஆடிக் கொண்டிருக்கிறான் அப்பு.

Mail this to a friend  Post your feedback  Print this page 

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X