சங்கராச்சாரியாரை சிக்க வைத்தானா ரவி?
சென்னை:
சங்கரராமன் கொலை வழக்கில் கைதாகியுள்ள சங்கராச்சாரியார் போலீசாரிடம் கொடுத்த வாக்குமூலம் குறித்த தகவல்கள் கசியஆரம்பித்துள்ளன.
3 போலீஸ் எடுக்கப்பட்ட சங்கராச்சாரியாரிடம் காஞ்சி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வைத்து அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
அப்போது, பல தகவல்களைத் தந்துள்ளார் சங்கராச்சாரியார்.
அதன் விவரம்:
சோமசேகர கனபாடிகள் என்ற பெயரில் தொடர்ந்து தனக்கும், அரசுக்கும், மடத்தின் பக்தர்களுக்கும், பத்திரிக்கைகளுக்கும் கடிதங்கள்வந்ததால் வெறுத்துப் போன சங்கராச்சாரியார், இது குறித்து தனக்கு நெருக்கமான காண்ட்ராக்டர் ரவி சுப்பிமணியத்துடன்சொல்லியிருக்கிறார்.
மடம் தொடர்பான கட்டட வேலைகளை காண்ட்ராக்ட் எடுப்பது இவன் தான். இவனை ஆர்.எஸ். என்று தான் சங்கராச்சாரியார்குறிப்பிடுவாராம்.
இப்படி மொட்டை பெட்டிசன் வருவது மன உளைச்சலாக உள்ளதாக சங்கராச்சாரியார் கூற, கொஞ்சம் பணம் கொடுத்தால் லெட்டரே வரவிடாமல் செய்துடலாம் என்று கூறியிருக்கிறான் ரவி சுப்பிரமணியம்.
இதையடுத்து மடத்தின் நிர்வாகிகளிடம் ஆர்.எஸ். கேட்கும் பணத்தை கொடுங்க என்று சங்கராச்சாரியார் கூறியிருக்கிறார்.
ஆனால், அந்தப் பணத்தைக் கொண்டு கூலிப் படை அமைத்து யாரையும் கொலை செய்வார்கள் என்று நான் நினைக்கவேயில்லை என்றுசங்கராச்சாரியார் கூறியிருக்கிறார்.
பணத்தைக் கொடுத்து லெட்டர் எழுதும் சங்கரராமனை வளைப்பார்கள், அல்லது மிரட்டி, அடக்கி வைப்பார்கள் என்று தான்நினைத்திருக்கிறார் சங்கராச்சாரியார்.
ஆனால், தனக்கே தெரியாமல் ஆளைப் போட்டுத் தள்ளிவிட்டதாக சொல்லியிருக்கிறார் சங்கராச்சாரியார்.
சங்கராச்சாரியார் தந்த இந்த விவரத்தை வைத்து இப்போது போலீசாரின் விசாரணை இன்னொரு கோணத்திலும் நடத்தப்பட்டு வருகிறது.
சங்கராச்சாரியாருக்கு வேண்டாத மடத்து நிர்வாகிகள், அவரை சிக்க வைக்க, ரவி சுப்பிரமணியத்துடன் உதவியுடன் இந்தக் கொலையைநடத்தியிருக்கலாமோ என்ற கோணத்திலும் விசரைணை நடக்கிறது.
சங்கராச்சாரியார் கைதான உடனே ரவி சுப்பிரமணியம் தலைமறைவாகிவிட்டான். தி.நகர் ராமேஸ்வரன் தெருவில் வசிக்கும் சியாமளாஎன்ற ஆசிரியையுடன் கள்ளத் தொடர்பு வைத்திருந்த ரவி சுப்பிரமணியம், சியாமளாவின் வீட்டுக்கு பூஜைக்காக ஒருமுறைசங்கராச்சாரியாரையே அழைத்து வந்திருக்கிறான்.
அந்த அளவுக்கு சங்கராச்சாரியாரிடம் அதிகாரம் செலுத்தியிருக்கிறான் ரவி சுப்பிரமணியம். அவனை முழுமையாக நம்பியிருக்கிறார்சங்கராச்சாரியார். சங்கர மடத்தின் டிரஸ்ட்கள் சார்பில் நடக்கும் எல்லா கட்டட வேலைகளும் இவனுக்கே காண்ட்ராக்ட் தரப்பட்டுள்ளன.
இதில் சங்கராச்சாரியார் மட்டுமில்லாமல் இளையவரின் தம்பி ரகுவின் கைங்கரியமும் இருந்துள்ளது. ரகுவுக்கு மது, மாது சப்ளைகளையும்ரவி சுப்பிரமணியம் செய்து கொடுத்து வந்துள்ளான்.
சியாமளாவிடம் பல முறை விசாரணை நடத்திவிட்ட போலீசாரிடம் ரவி இன்னும் சிக்கவில்லை. அவன் சிக்கினால் தான் முக்கியமான மர்மமுடிச்சுக்கள் அவிழும் என்கின்றனர் போலீசார்.
சங்கராச்சாரியாரை குறியெல்லாம் வைத்து நாங்கள் வழக்கை நடத்தவில்லை. நியாயமாக எல்லா கோணங்களிலும் தான் விசாரணைநடக்கிறது என்கின்றனர். அவரை சிக்க வைத்தார்களா என்ற கோணத்தில் தீவிரமாகவே விசாரணை நடக்கிறது.
ஜெயேந்திரர் உதவியாளரிடம் விசாரணை:
இதற்கிடையே சங்கராச்சாரியாரின் உதவியாளர் பாபுவிடம் போலீசார் 2 மணி நேரம் விசாரணை நடத்தியுள்ளனர்.
காஞ்சி மகளிர் காவல் நிலையத்துக்கு வரவழைக்கப்பட்ட அவரிடம் இந்த விசாரணை நடந்தது.


