• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In

விஜய்குமாரிடம் தப்பிய அப்பு!

By Staff
|

சென்னை:

Appuதமிழகத்தின் மிகப் பெரிய தாதாவாக திகழ்ந்த அப்பு, இத்தனை காலமாக போலீசாரின் முழு ஆதரவுடன் தான் தனது ரெளடி ராஜாங்கத்தைநடத்தி வந்துள்ளான்.

சென்னையில் வெளியில் தெரிந்த தாதா வீரமணி உள்ளிட்ட கடத்தல்-கொலைக் கும்பல்களை விட அப்புவின் அதிகாரமும் பலமும் பலமடங்கு அதிகமானது என்கின்றனர்.

இந்த அப்பு குறித்து போலீஸ் ரெக்கார்டுகள் தரும் தகவல்:

சொந்த ஊர்: ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் வெங்கனபள்ளி கிராமம்

தந்தை பெயர்: கோபால் ரெட்டி

தாயார் பெயர்: ஆதிலட்சுமி

சென்னையில் வசித்தது: மகாகவி பாரதி நகரில்

படித்தது: முத்தியால்பேட்டை அரசுப் பள்ளியில்

ரெளடியாக ட்ரெனிங் எடுத்தது: வெள்ளை ரவியில் சாராய கடத்தல் கோஷ்டியில்

அடுத்த படி: ரோஸ் வுட் கடத்தல் புள்ளியுடன் தொடர்பு

அடுத்தது: மான், புலி, பாம்பு தோல் கடத்தல்.. போதைப் பொருள் கடத்தல்

முதல் கொலை: 1993ம் ஆண்டில் சக கடத்தல்காரன் ஒருவரைக் கொன்று ரூ. 6 கோடியை அவனிடம் இருந்து சுட்டது. பணத்துக்காக அப்புசெய்த முதல் கொலை அது.

2வது கொலை: முதல் கொலை விஷயத்தை அறிந்த ஒரு இன்ஸ்பெக்டர் இதையே காரணமாக வைத்து அப்புவை மிரட்டி பணம் பறிக்கஆரம்பிக்க, திருப்பதி அருகே அவர் போன காரை லாரியை விட்டு ஏற்றினான் அப்பு. அதில் இன்ஸ்பெக்டர் ஸ்பாட் அவுட்.

3வது கொலை: இவனது ரோஸ்வுட் மற்றும் விலங்குகள் தோல் கடத்தலை அறிந்த ஒரு வனத்துறை அதிகாரியை ஏமாற்றி தனதுஇடத்துக்கு வரவழைத்த அப்பு, அவரைக் கொன்று உடலை பாதாள சாக்கடையில் போட்டான்.

இப்படியாக ஆரம்பித்த அப்புவுக்கு பின்னர் கொலைகள் சாதாரணமாகிப் போயின. தனது தொழிலுக்கு இடைஞ்சலாக இருந்தவர்களைமட்டுமே முதலில் கொல்ல ஆரம்பித்தவன், பிற்பாடு பணத்துக்காக ஆளைத் தீர்க்கும் வேலையையும் ஆரம்பித்துவிட்டான்.

Appuபைவ் ஸ்டார் ஹோட்டல்களில் வைத்தே இவன் பெரும்பாலான கிரிமினல் வேலைகளுக்குத் திட்டம் போட்டுள்ளான். கட்டப் பஞ்சாயத்தில்இருந்து ரோஸ் வுட் கடத்தல் வரை, கொலைகள் முதல் கோடிக்கணக்கான பண விவகார செட்டில்மெண்ட்கள் வரை அப்புவின் கை எல்லாபக்கமும் நீண்டுள்ளது.

வெளியுலகுக்கே தெரியாமல்:

இவனுடைய பலமே வெளியுலகுக்குத் தெரியாமல் அண்டர்கிரவுண்டில் இருந்து கொண்டே தனது தாதா கோஷ்டியை இயக்கியது தான்.

இவனது பணத்துக்கு பல முக்கிய அதிகாரிகள் முதல் அரசியல்வாதிகள் வரை பணிந்திருந்தாலும், ஒரு சில நேர்மையான அதிகாரிகள்இவன் கதையை முடிக்க முயற்சிகளையும் அவ்வப்போது எடுக்கத்தான் செய்தனர்.

ஆனால், இந்த விவரங்களை தன் மூலம் காசு வாங்கிய உயர் போலீஸ் அதிகாரிகள் மூலம் உடனுக்குடன் அறிந்து, தனது அரசியல்செல்வாக்கை வைத்து அந்த முயற்சிகளை ஆரம்பத்திலேயே முறியடித்து வந்துள்ளான் அப்பு.

விஜய்குமார் போட்ட திட்டம்:

அப்புவின் அட்டகாசங்களை அறிந்து டென்சனான சென்னை போலீஸ் கமிஷ்னராக இருந்த விஜய்குமார், அவனை குண்டாஸ் சட்டத்தில்பிடித்து உள்ளே வைக்க முடிவு செய்தார்.

அப்பு தப்ப முயற்சித்தால் சுட்டுப் பிடிக்கவும் திட்டமிடப்பட்டது.

ஆனால், இதையும் தனது விசுவாசமான போலீஸ் அதிகாரிகள் மூலம் அறிந்த அப்பு, சங்கர மடத்தைத் தொடர்பு கொண்டு, அங்கிருந்துநெருக்குதல் தந்து தப்பியுள்ளான். தான் சிறிதும் எதிராபாராத இடத்தில் இருந்து இப்படி பிரஷர் வந்ததால் அப்புவை அப்போதைக்கு விட்டுவைத்தார் விஜய்குமார்.

இது நடந்தது 2 ஆண்டுகளுக்கு முன்பு.

அன்று விஜய்குமார் இருந்த கோபத்தில், அவரிடம் அப்பு சிக்கியிருந்தால் சின்னா பின்னாவாகியிருப்பான் என்கிறது காவல்துறை.

முத்துக்கருப்பனின் டென்சன்:

இதே போல முத்துக்கருப்பன் கமிஷ்னராக இருந்தபோது அவருக்கும் அப்புவுக்கும் பிரச்சனை வந்தது.

ஜீவஜோதி கணவர் கொலை வழக்கில் அண்ணாச்சியிடம் காசு கறக்க முயன்றார் முத்துகருப்பன். ஆனால், பண பேரம் படியாததால்,அண்ணாச்சியா இருந்தாலும் கைது செய்வேன் என்று முண்டா தட்டினார் முத்து. அப்போது அண்ணாச்சிக்கு ஆதரவாகக் களத்தில்குதித்தான் அப்பு.

அண்ணாச்சியிடம் பெரும் பண பேரம் பேசிய அப்பு, அவரை இந்த விவகாரத்தில் இருந்து காப்பதாக உறுதி தந்தான். இதை அறிந்தகோபமான முத்துக்கருப்பன், அப்புவைத் தூக்கி உள்ளே போட முயல, ஆள் எஸ்கேப்.

நடிகைக்கு உதவி:

K.R.Vatsalaஇதே போல நடிகை கே.ஆர்.வத்சலாவுக்கு ஆதரவாகக் களமிறங்கி, அவருக்குச் சொந்தமான நிலத்தை ஒரு தொழிற்சாலைப் புள்ளியிடம்இருந்து மீட்டுத் தந்துள்ளான்.

இதே மாதிரி மதுரை உள்பட பல இடங்களில் சங்கரமடத்துக்குச் சொந்தமான இடங்கள் சிலரால் ஆக்கிரமிப்புக்கு ஆளான போதெல்லாம்அங்கு தனது படைப் பரிவாரங்களை அனுப்பி, இடத்தை மீட்டு சங்கராச்சாரியாரிடம் ஒப்படைத்துவிட்டு அதற்குரிய கமிஷன் வாங்கிக்கொண்டுள்ளான்.

தனது கொலை, கொள்ளை வேலைகளுக்கு அரசியல்வாதிகளின் ஆதரவு இருந்தாலும் சங்கர மடத்தின் உதவியும் இருந்தால் ரொம்பநல்லது என்று நினைத்திருக்கிறான் அப்பு. இதனால் தான் அவனே வலியப் போய் மடத்துடனான உறவை வலுப்படுத்தியுள்ளான்.

எந்தக் கட்சி ஆட்சியில் இருந்தாலும் அதில் பலம் வாய்ந்தவர்களை தனது பண பலத்தால் மடக்கிவிடும் சூட்சுமம் தெரிந்தவன் அப்பு.

அமெரிக்கா.. சிங்கப்பூர்:

கோடிக்கணக்கிலான லேவா தேவி பணப் பிரச்சனை, பல கோடி மதிப்புள்ள நிலத் தகராறுகள் இவற்றையெல்லாம் 5 நட்சத்திரஹோட்டல்களில் வைத்து தீர்த்து வைத்திருக்கிறான் அப்பு. அவனது பொழுதுபோக்கு வெளிநாடுகளில் டூர் அடிப்பது.

மகனை அமெரிக்காவில் படிக்க வைக்கும் அப்புவின் முதலீடுகள் சிங்கப்பூர் உள்ளிட்ட தெற்காசிய நாடுகளிலும் பரவிக் கிடப்பதாகசொல்கிறார்கள்.

கிருஷ்ணவம்சி ரெட்டி என்ற ஒரிஜினல் பெயரில் மட்டுமில்லாமல் பல பெயர்களில் இவனுக்கு பாஸ்போர்ட் இருப்பதாகத் தெரிகிறது.இதில் ஒரு பாஸ்போர்ட் தான் முடக்கப்பட்டுள்ளது.

இதனால் இவன் வெளிநாட்டுக்குத் தப்பியிருக்கலாம் என்ற திகில் ஒரு பக்கம் இருந்தாலும், மனசு விட்டுவிடாமல் நாட்டின் பல்வேறுபகுதிகளிலும் இவனுக்கு வலை வீசிக் கொண்டிருக்கிறது தமிழக காவல்துறை.

Mail this to a friend  Post your feedback  Print this page 

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X