அதிருப்தியில் மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள்!
சென்னை:
சங்கராச்சாரியார் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து தமிழக அரசின் மூத்த அதிகாரிகள் 10க்கும் மேற்பட்டோர்தங்களை மத்திய அரசுப் பதவிக்கு மாற்றக் கோரிக்கை விடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.
ஆனால், இந்தத் தகவலை தமிழக அரசு மறுத்துள்ளது.
தலைமைச் செயலாளர் லட்சுமி பிரானேஷ், நிதித்துறைச் செயலாளர் நாராயணன் உள்ளிட்ட மூத்த பிராமணசமூகத்தைச் சேர்ந்த அதிகாரிகள் தங்களை மாநில அரசுப் பணியில் இருந்து விடுவிக்குமாறும், மத்திய அரசுப்பணிக்குச் செல்ல அனுமதிக்கக் கோரி முதல்வர் ஜெயலலிதாவுக்குக் கோரிக்கை வைத்திருப்பதாக கோட்டைவட்டாரத்தில் பேசப்படுகிறது.
தமிழக அரசின் மூத்த வழக்கறிஞர் ஒருவரும் அந்தப் பதவியை விட்டு விலகிவிடத் திட்டமிட்டுள்ளதாகக்கூறப்படுகிறது.
இதற்கிடையே சமீபத்தில் ஐபிஎஸ் அதிகாரிகள் மாற்றத்தின்போதும் பிராமண சமூகத்தினர்ஓரங்கட்டுப்பட்டுள்ளதாக வருத்தம் எழுந்துள்ளது. ஜெயேந்திரர் கைதைத் தொடர்ந்து அந்த வழக்கின்விசாரணையிலும், உளவுத்துறையிலும் இந்த சமூகத்தைச் சேர்ந்த மூத்த அதிகாரிகள் ஒதுக்கிவைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இதனால் இச் சமூகத்தைச் சேர்ந்த மூத்த அதிகாரிகள் மத்திய அரசுப் பணிக்கே சென்றுவிட முடிவு செய்துவிட்டதாகநேற்று மாலையில் கோட்டை வட்டாரத்தில் இருந்து செய்திகள் பரவின.
ஆனால், இந்தத் தகவலை தலைமைச் செயலாளர் லட்சுமி பிரானேஷை வைத்தே தமிழக அரசு திட்டவட்டமாகமறுத்துள்ளது.
இது தொடர்பாக லட்சுமி பிரானேஷ் அறிக்கையில்,
நான் உள்பட, தமிழகத்தைச் சேர்ந்த 10க்கும் மேற்பட்ட ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் மத்திய பணிக்கு செல்ல விருப்பம்தெரிவித்து முதல்வர் ஜெயலலிதாவிடம் கடிதம் எதையும் கொடுக்கவில்லை.
இந்தச் செய்தி தவறானது, ஆதாரம் இல்லாதது, அடிப்படையும் இல்லாதது. மேலும் இது உண்மைக்கு மாறானவிஷமத்தனமான செய்தி.
தமிழகத்தில் பணி புரிந்து வரும் எந்த ஐ.ஏ.எஸ். அதிகாரியும் தன்னை மத்திய அரசுப் பணிக்கு மாற்றுமாறு கடிதம்எழுதவில்லை என்று கூறியுள்ளார்.
ஆனால், நெருப்பில்லாமல் புகையாது என்கின்றனர் கோட்டை வட்டார விஷயம் அறிந்தவர்கள்.


