For Daily Alerts
Just In
ஜெயேந்திரருக்கு எதிராக நோட்டீஸ்: 5 பேர் கைது
கோவை:
கோவையில் சங்கராச்சாரியார், விஎச்பி, பா.ஜ.க மற்றும் இந்து அமைப்புகளுக்கு எதிராக நோட்டீஸ் வினியோகித்த 5 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
குறிஞ்சி முருகா நகர் பகுதியில் உள்ள விநாயகர் கோவில் அருகே நின்று கொண்டு சபரிதாஸ், சேகர், ரமேஷ், பூவண்ணன், சுசீந்திரன்ஆகியோர் நோட்டீஸ் வினியோகித்துக் கொண்டிருந்தனர்.
அதில் சங் பரிவார் அமைப்புகள் மற்றும் சங்கர மடத்தை மிகக் கடுமையாக விமர்சித்து வாசகங்கள் இடம் பெற்றிருந்தன. இதை கோவில்அருகே வைத்து இவர்கள் வினியோகம் செய்ததால் அப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
இது குறித்து தகவல் அறிந்த போத்தனூர் போலீசார் சப்-இன்ஸ்பெக்டர் சுமதி தலைமையில் விரைந்து வந்து 5 பேரையும் கைது செய்தனர்.


