ஆடிட்டர் வழக்கு: சங்கர மட நிர்வாகிகளிடம் விசாரணை
Subscribe to Oneindia Tamil
காஞ்சிபுரம்:
ஆடிட்டர் ராதாகிருஷ்ணன் தாக்கப்பட்ட வழக்கு தொடர்பாக சங்கர மட நிர்வாகிகளான நீலகண்ட அய்யர், சுந்தரேச அய்யர்ஆகியோரிடம் காஞ்சிபுரம் போலீஸார் தீவிர விசாரணை நடத்தினர்.
இருவரையும் காஞ்சிபுரம் போலீஸார் ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள விசாரணை அலுவலகத்திற்குவரவழைத்தனர்.
இருவரிடமும் சுமார் ஒரு மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது. ஆடிட்டர் ராதாகிருஷ்ணன் மீது நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பாகஇருவரிடமும் போலீஸார் தீவிர விசாரணை நடத்தினர்.
இதற்கிடையே, காமாட்சி அம்மன் கோவில் தங்கத் தேர் விவகாரம் தொடர்பாக சங்கர மடத்தைச் சேர்ந்த சில ஊழியர்களிடமும் போலீஸார்விசாரணை நடத்தினர்.
தந்தை பெரியார் தி.க. மறியல்:
இந் நிலையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் காஞ்சிபுரத்தில் ஜெயேந்திரருக்கு எதிராக இன்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.












Click it and Unblock the Notifications