For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இலங்கை: ஷாருக்கான் நிகழ்ச்சியில் குண்டு; 2 பேர் பலி

By Staff
Google Oneindia Tamil News

கொழும்பு:

இலங்கைத் தலைநகர் கொழும்புவில் இந்தித் திரையுலகினர் நடத்திய கலை நிகழ்ச்சியின்போது புத்த பிட்சுகள் போராட்டம் நடத்தினர்.அப்போது கையெறி குண்டு வீசப்பட்டதில் ஒரு பெண் உள்பட 2 பேர் பலியாயினர். இதனால் அங்கு பெரும் பதட்டம் ஏற்பட்டது.

டெம்ப்டேஷன்-2004 என்ற பெயரில் இந்திப் பிரபலங்களான ஷாருக்கான், பிரீத்தி ஜிந்தா, சையிப் அலிகான் உள்ளிட்டோர் கலந்துகொண்ட நிகழ்ச்சிக்கு நேற்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

ஆனால் புத்த மத துறவியான வென் கங்கோடவில்லா சோம தேரா என்பவரின் முதலாமாண்டு நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது.எனவே இந் நிகழ்ச்சியை ரத்து செய்யுமாறு நிகழ்ச்சி அமைப்பாளர்களுக்கு புத்த பிட்சுகள் கோரிக்கை விடுத்தனர். ஆனால் கோரிக்கையைநிகழ்ச்சி அமைப்பாளர்கள் ஏற்கவில்லை.

இதைத் தொடர்ந்து எங்களை மீறி நிகழ்ச்சி நடத்தப்பட்டால் அரங்கம் முன்பு தீக்குளித்துத் தற்கொலை செய்து கொள்வோம் என பிட்சுகள்மிரட்டல் விடுத்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. நிகழ்ச்சி நடக்கவிருந்த இடத்தைச் சுற்றிலும் ராணுவத்தினரும் குவிக்கப்பட்டனர்.

இந் நிலையில் நினைவு தினம் குறித்துத் தெரியாமல் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு விட்டதற்கு மன்னிப்பு கேட்பதாக ஷாருக்கான்அறிவித்தார். அவரது மன்னிப்புக்கு சில பிட்சுகள் இரங்கி வந்தனர், ஆனால் பெரும்பாலான பிட்சுகள் அதை ஏற்றுக் கொள்ளவில்லை.

இந் நிலையில் நேற்று ஹார்ஸ் ரேஸ் சதுக்கம் என்ற திறந்த வெளி மைதானத்தில் கலை நிகழ்ச்சி தொடங்கியது. மறைந்த துறவிகங்கோடவில்லா சோம தேராவுக்கு ஷாருக்கான் உள்ளிட்டவர்கள் 2 நிமிடம் மெளன அஞ்சலி செலுத்தினர். அதன் பிறகு நிகழ்ச்சிகள்தொடங்கின. 25,000க்கும் மேற்பட்ட இந்தியர்களும், வெளிநாட்டவர்களும் நிகழ்ச்சியைக் காண வந்திருந்தனர்.

இந் நிலையில் மைதானத்திற்கு வெளியே ஜதிக ஹெலா உருமயா என்ற சிங்களக் கட்சியின் எம்.பி. வென். ஓமல்பே சொபித தேரா (இவரும்பிட்சுதான்) தலைமையிலான சிங்கள இளைஞர்கள், இளம் பிட்சுகள் கூடி பெரும் போராட்டத்தில் இறங்கினர். அவர்களை போலீஸார்கலைந்து போகுமாறு கூறினர். ஆனால் அவர்கள் கேட்கவில்லை.

வேகமாக முன்னேறி நிகழ்ச்சியை நிறுத்த முயன்றனர். இதைத் தொடர்ந்து போலீஸார் முதலில் கண்ணீர்ப் புகைக் குண்டுகளை வீசினர்.இதனால் அந்த இடத்தில் பெரும் அமளி நிலவியது. கலக பூமி போல அந்த இடமே மாறியது. இருப்பினும் கலை நிகழ்ச்சி தொடர்ந்து நடந்துகொண்டிருந்தது.

பின்னர் போலீஸார் தடியடி நடத்தி கூட்டத்தினரை கலைந்து போகச் செய்தனர். போலீஸ் தடியடியில் ஓமல்பே சொபித தேராகாயமடைந்தார். மேலும் பலரும் காயமடைந்தனர். அனைவரும் கொழும்பு தேசிய மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.

அதன் பின்னர் அங்கே அமைதி திரும்பியது, கலை நிகழ்ச்சி தொடர்ந்து நடந்தது. இந் நிலையில் இரவு 11.30 மணியளவில் கலை நிகழ்ச்சி நடந்த மேடைக்கு அருகே கையெறி குண்டு வீசப்பட்டது. பயங்கர சப்தத்துடன்அது வெடித்துச் சிதறியதில் ஒரு பெண் உள்பட 2 பேர் பலியாயினர், 19 பேர் காயமடைந்தனர்.

இதில் முன்னாள் கிரிக்கெட் வீரர் ரவி சாஸ்திரியின் மனைவி ரிது சாஸ்திரியும் அடக்கம். இவர் ஒரு நடிகை ஆவார். பலியானவர்களில்ஒருவர் பத்திரிக்கையாளர். மற்றொருவர் ஹோட்டல் சிப்பந்தி.

உடனடியாக நிகழ்ச்சி நிறுத்தப்பட்டு ஷாருக்ணீான், ரிது சாஸ்திரி உள்ளிட்டவர்கள் அங்கிருந்து பாதுகாப்பாக கொழும்பு விமானநிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அங்கிருந்து அனைவரும் பத்திரமாக இந்தியா திரும்பினர்.

முன்னதாக ரிது சாஸ்திரி மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை பெற்றார். அவருக்கு லேசான காயங்களே இருந்ததாக மருத்துவர்கள்தெரிவித்தனர்.

காயமடைந்தவர்கள் கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் 2 பெண்களின் நிலை கவலைக்கிடமாகஉள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதலில் குண்டு வெடித்தபோது கலைநிகழ்ச்சிக்காக மேடையில் வெடிக்கப்படும் பட்டாசுகளில் ஒன்றே என்று அனைவரும் நினைத்தனர்.ஷாருக்கான் கூட தொடர்ந்து ஆடினார். ஆனால் முன்வரிசை ரசிகர்களிடம் இருந்து ரத்தம் வழிந்ததைக் கண்ட பின்பே, நடந்தது குண்டுவெடிப்பு என்று உணர்ந்தனர்.

குண்டுவெடிப்பு தொடர்பாக 2 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர். அவர்களிடம் தீவிர விசாரணை நடந்து வருகிறது. நிகழ்ச்சியைத்தடுப்பதற்காக வெள்ளிக்கிழமை இரவு முதலே நூற்றுக்கணக்கான பிட்சுகள், சிங்கள இளைஞர்கள் மைதானத்திற்கு அருகே குடில் அமைத்துத்தங்கியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

யார் இந்த வென். கங்கோடவில்லா சோம தேரா?

புத்த பிட்சுவான வென். கங்கோடவில்லா சோம தேரா, சிங்களர்கள், கிறிஸ்தவர்களாகவும், முஸ்லீம்களாகவும் மாறுவதை எதிர்த்து வந்தவர்.மதமாற்றத்தை எதிர்த்து இலங்கை முழுவதும் தீவிரப் பிரசாரத்திலும் ஈடுபட்டார். இதனால் இவருக்கு நாடு முழுவதும் செல்வாக்கு பரவஆரம்பித்தது.

இந் நிலையில் இவர் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ரஷ்யா சென்றிருந்தார். அங்கு அவர் மர்மமான முறையில் மரணமடைந்தார். இதுஇலங்கையில் பெரும் சர்ச்சையைக் கிளப்பியது. இலங்கையின் பல பகுதிகளில் கிறிஸ்தவர்களுக்கு எதிரான போராட்டங்கள்நடத்தப்பட்டன, ஆங்காங்கே வன்முறையும் வெடித்தது. கிறிஸ்தவர்களின் சதியால் கங்கோடவில்லா கொலை செய்யப்பட்டதாகஇலங்கையில் பேச்சு கிளம்பியது.

கங்கோடவில்லா இறந்ததன் முதலாமாண்டு நினைவு தினம்தான் நேற்று அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி இந்திய கலைஞர்களின்நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்ததால் கங்கோடவில்லாவின் ஆதரவாளர்கள் கோபமடைந்தனர். அதன்பின்னரே இந்த அசம்பாவிதம்நடந்தது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X