For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பெரம்பலூரில் ஜெவுக்கு எதிராக வீடுகளில் கறுப்பு கொடி

By Staff
Google Oneindia Tamil News

பெரம்பலூர்:

புதிய வீராணம் விரிவாக்கத் திட்டத்தின் மூலம் கொள்ளிடம் ஆற்றிலிருந்து நீர் எடுப்பதால் இந்தப் பகுதியில் நிலத்தடி நீர் குறையும்,விவசாய நிலங்கள் பாதிக்கும் என்று எதிர்க்கட்சிகள் செய்து வரும் பிரசாரம் விஷமத்தனமானது என்று முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார்.

ஆனால், இந்தத் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, முதல்வர் ஜெயலலிதாவை கண்டித்து பெரம்பலூர் மாவட்டத்தில் ஏராளமான வீடுகளில்கறுப்புக் கொடிகள் பறக்க விடப்பட்டிருந்தன.

திட்டத்தை தொடங்கி வைக்க வந்த ஜெயலலிதாவுக்கு கறுப்புக் கொடி காட்ட முயன்ற பல பெண்கள் உள்பட 65 விவசாயிகள் கைதுசெய்யப்பட்டனர்.

புதிய வீராணம் திட்டத்தை விரிவுபடுத்தி பெரம்பலூர் மாவட்டம் கொள்ளிடத்தில் காவிரி ஆற்றிலிருந்து தண்ணீர் எடுத்து அதை குழாய்கள்மூலம் சென்னைக்குக் கொண்டு வர அரசு திட்டமிட்டுள்ளது. இந்தத் திட்டப் பணிகளை ஜெயலலிதா தொடங்கி வைத்தார்.

வீடுகளில் கறுப்புக் கொடிகள்:

Black flag against Jayaஇதன்படி ரூ. 300 கோடி செலவில் திருமானூர், தா.பழுர் ஆகிய பகுதிகளில் 6 பெரிய கிணறுகள் தோண்டப்படும். இந்த நீர் பம்ப்செய்யப்பட்டு வீராணம் குழாய்களுடன் இணைக்கப்பட்டு சென்னைக்குக் கொண்டு செல்லப்படும்.

இதனால் பெரம்பலூர் மாவட்டத்தில் விவசாயம் பாதிக்கும், நிலத்தடி நீர் அசுர வேகத்தில் குறையும் என்று கூறி பொது மக்களும் எதிர்க்கட்சிகளும் இத் திட்டத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றன.

ஆனால், இதையும் மீறி வீராணம் விரிவாக்கத் திட்டத்துக்கு ஜெயலலிதா அடிக்கல் நாட்டினார்.

இதை எதிர்த்து மாவட்டத்தின் பல பகுதிகளிலும் வீடுகளில் கறுப்புக் கொடிகள் பறக்க விடப்பட்டிருந்தன. குறிப்பாக விவசாயிகள் கறுப்புக்கொடிகளை ஏற்றி எதிர்ப்புத் தெரிவித்தனர். விழா நடந்த இடத்துக்கு கறுப்புக் கொடிகளுடன் வந்த 30 பெண்கள் உள்பட சுமார் 60 பேர்கைது செய்யப்பட்டனர்.

ஜெயலலிதா விளக்கம்:

ஆனால், விவசாயிகள் எந்த வகையிலும் அச்சம் கொள்ளத் தேவையில்லை என முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார்.

திட்டத்தைத் தொடங்கி வைத்து அவர் பேசுகையில், கொள்ளிடம் ஆற்றின் உள்பரப்பில் உள்ள நீரை 6 கிணறுகள் மூலம் எடுத்து சென்னைநகரின் குடிநீர்த் தேவைக்கு, நாள் ஒன்றுக்கு 18 கோடி லிட்டர் நீர் வழங்கப்படும். இந்தத் திட்டத்தால் யாருக்கும் பாதிப்பு இல்லை.

இத்திட்டத்தால் விவசாயிகள் பாதிக்கப்படுவார்கள், நிலத்தடி நீர் முற்றிலும் உறிஞ்சப்பட்டு விடும், உப்பு நீராகி விடும் என்றெல்லாம் சிலஎதிர்க்கட்சிகள் கதை கட்டி வருகின்றனர். இந்த உண்மைக்குப் புறம்பான அச்சத்தை விவசாயிகளிடம் பரப்பி வருகின்றனர். கொள்ளிடம்ஆற்றில் ராட்சத ஆழ்குழாய்க் கிணறுகள் அமைக்கப் போகிறார்கள் என்றும் பொய்யான பிரசாரத்தை மேற்கொண்டுள்ளனர்.

கொள்ளிடம் ஆற்றின் மேற்பரப்பிலும், உள்பரப்பிலும் கிடைக்கப் பெறும் தண்ணீன் அளவு நாள் ஒன்றுக்கு 236 கோடி லிட்டர் என்றுதொழில்நுட்ப வல்லுநர்கள் கணித்துள்ளனர். இதிலிருந்து நாள் ஒன்றுக்கு 35 கோடி லிட்டர் தண்ணீர்தான் எடுக்கப்படவுள்ளது.

திமுகவுக்கு குட்டு:

எனவே விவசாய நிலங்களில் நீர் வற்றி விடும் என்றோ, உப்பு நீராக மாறி விடும் என்ற அச்சப்படத் தேவையில்லை. அதற்கு எந்தவிதஅடிப்படை ஆதாரம் இல்லை. நிலத்தடி நீர் எந்த வகையிலும் பாதிக்கப்படாது என்று உறுதி செய்யப்பட்ட பின்தான் இந்தத் திட்டத்திற்குஎனது அரசு அனுமதி அளித்தது.

பெரம்பலூர் மாவட்டத்தை திருச்சியிலிருந்து பிரித்து உருவாக்கியது எனது அரசுதான். எனவே அந்த மாவட்ட மக்களை கவலைப்படுத்தும்செயலில் நான் இறங்க மாட்டேன். ஆனால் பெரம்பலூர் மாவட்டத்தை புறக்கணித்தது திமுக அரசுதான். இதை பெரம்பலூர் மக்கள்நினைவில் கொள்வார்கள் என்றார் ஜெயலலிதா.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X