For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சுயநலக்காரர்கள்: ஜெ. சொன்ன குட்டிக் கதை

By Staff
Google Oneindia Tamil News

கிருஷ்ணகிரி:

பொறமை உணர்வு அதிகம் கொண்டவர்கள் சுயநலக்காரர்கள். அப்படிப்பட்ட சுயநலக்காரர்கள் தமிழகத்தில் அதிகம் பேர் உள்ளனர் என்றுமுதல்வர் ஜெயலலிதா கூறினார்.

கிருஷ்ணகிரியில் நடந்த நிகழ்ச்சியின்போது அவர் பேசுகையில் ஒரு குட்டிக் கதையை கூறினார். அந்தக் கதை:

பாவங்கள் செய்த ஒருவன் நரகத்திற்கு அனுப்பப்பட்டான். நரகப் பள்ளத்தாக்கில் அவன் நடந்து கொண்டிருந்தபோது வழியில் ஒருசிலந்திப் பூச்சி இருந்ததைப் பார்த்து அதை மிதிக்காமல் ஓரமாக ஒதுங்கி சென்றான்.

பிற உயிர்களைக் கொல்லாமல் இருந்ததற்காக அவனது கணக்கில் கொஞ்சம் புண்ணியம் சேர்ந்தது. உடனே அதற்கான பலனும் கிடைத்தது.நரகத்தில் இருந்து மேலே வருமாறு அவனுக்கு அழைப்பு விடுத்தார்கள்.

எப்படி மேலே வருவது என்று அவன் கேட்டான். சிலந்தி இழையைப் பிடித்துக் கொண்டே மேலே வா என்றார்கள். அதெப்படி சிலந்தஇழையைப் பிடித்துக் கொண்டே மேலே போவது என்ற அவநம்பிக்கை அவனுக்கு.

நமது கை பட்டால் சிலந்தி இழை தாங்குமா, கையால் தொட்டதும் அறுந்து விடுமே என்று நினைத்தான் அவன். இதைப் பார்த்ததும் மேலேஇருந்தவர்கள், தைரியமாக வா, இழை அறுந்து விடாது என்றார்கள். சரியென்று அவனும் சிலந்தி இழையைப் பிடித்து மேலே ஏறினான்.பாதி தூரத்தைக் கடந்தும் விட்டான்.

பாதி தூரம் சென்ற அவன் கீழே பார்த்தான். அப்போது அவனைப் போலவே பலரும் சிலந்தி இழை மூலமாக மேலே ஏறிக்கொண்டிருந்தார்கள். இதைப் பார்த்ததும் அவனுக்குக் கோபம் வந்து விட்டது.

புண்ணியம் செய்தது நான், பலனைப் பெற வேண்டியது நான். ஆனால் இவர்கள் எல்லோரும் வரப் பார்க்கிறார்களே என்று கோபித்து கீழேஇருந்தவர்களை காலால் எட்டி உதைத்தான். எல்லோரும் கீழே விழுந்தார்கள். அவனும் திரும்ப நரகத்திற்குள் விழுந்து விட்டான்.

எப்போது பொறாமைப்பாட்டானோ, எப்போது சுய நலத்தால் மற்றவர்களை எட்டி உதைத்துக் கீழே தள்ளினானோ, அப்போதே சிலந்திஇழையும் அறுந்து விழுந்தது. அந்த சுயநலக்காரனும் கீழே விழுந்தான்.

சுயநலக்காரர்களுக்கு பொறாமை அதிகம். அப்படிப்பட்ட சுயநலக்காரர்களுக்கு தமிழகத்தில் பஞ்சமே கிடையாது. பொறாமைக்கும் பஞ்சம்இல்லை. அதையெல்லாம் பொருட்படுத்தாமல் மாவட்டம் தோறும் பயணித்து, அந்தந்த பகுதிகளின் சிறப்புத் தன்மைகளுக்கு ஏற்படதிட்டங்களை நிறைவேற்றுகிறேன் என்றார் ஜெயலலிதா.

முன்னதாக ஓசூரில் நடைபெறும் முதலாவது மலர்க் கண்காட்சியை கிருஷ்ணகிரி விழா மேடையிலிருந்து வீடியோ கான்பரன்சிங் மூலம்தொடங்கி வைத்தார் ஜெயலலிதா.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X