For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அர்ச்சகர் மாதவன் தாக்குதல் வழக்கும் காஞ்சிக்கு மாற்றம்!

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

Madhavanஅர்ச்சகர் திருக்கோஷ்டியூர் மாதவன் தாக்குதல் வழக்கும் காஞ்சிபுரத்துக்கு மாற்றப்பட்டுள்ளது. இதனால்சங்கராச்சாரியார் மீது மூன்றாவதாக ஒரு வழக்கும் பதிவாகலாம் என்று தெரிகிறது.

திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூரில் அழகிய நம்பிராயர் கோவில் உள்ளது. இங்கு சிவனும் பெருமாளும்எதிரெதிர் சன்னதியில் அருள்பாலிக்கின்றனர். இரு சுவாமிகளுக்கும் இங்கு சன்னதிகள் இருந்தன

சில காலத்துக்கு முன் திடீரென இங்குள்ள சிவன் சன்னதி பெயர்க்கப்பட்டு அதிலிருந்து மூலவர் சிலையும்அகற்றப்பட்டது. இதற்கு ஜெயந்ேதிரர்தான் காரணம் என்று கூறப்பட்டது.

இதையடுத்து வைணவத் திருத்தலங்களில் ஜெயேந்திரர் தேவையில்லாமல் தலையிடுகிறார் என்று கூறி கோவில்அர்ச்சகரான திருக்கோஷ்டியூர் மாதவன் கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டார்.

மேலும் திருப்பதி திருமலை கோவில் விஷயங்களில் ஜெயேந்திரர் தலையிட்டபோதும் எதிர்த்தார். வைணவத்திருக்கோவில் பாதுகாப்புகாப்புக்காக ஒரு அமைப்பையும் உருவாக்கி பலரையும் திரட்டினார்.

இந் நிலையில் சென்னை ஆயிரம் விளக்குப் பகுதியில் உள்ள கிரீம்ஸ் சாலையில் தனது டிவிஎஸ்-50 வாகனத்தில்சென்று கொண்டிருந்த மாதவனை ஒரு ஆட்டோவில் வந்த கும்பல் விரட்டியது. இதையடுத்து வேகமாக தனதுவண்டியை ஒரு வீட்டு வளாகத்துக்குள் விட்டு கும்பலிடம் இருந்து தப்பினார் மாதவன்.

ஆனால், கடந்த ஆகஸ்ட் மாதம் கிரீம்ஸ் சாலையில் மீண்டும் மாதவனை கார் விரட்டி வந்தது. அவரை பட்டப்பகலிலேயே ஒரு கும்பல் அரிவாள்களால் தாக்கியது. இதில் மண்டை பிளந்து ரத்த வெள்ளத்தில் சரிந்த மாதவன்அப்பல்லோவில் பல மாதங்கள் ஐசியுவில் வைக்கப்பட்டு சிகிச்சை பெற்று உயிர் தப்பினார்.

இதுதொடர்பான ஆயிரம் விளக்கு காவல் நிலையத்தில் ஒரு வழக்குப் பதிவானது. விசாரணையை ஆரம்பித்தபோலீசாருக்கு இந்தத் தாக்குதலில் காஞ்சி மடத்தின் தொடர்புகள் தெரிய வர கையை உதறியவாறு வழக்கைஅப்படியே மூடி வைத்துவிட்டு மாமூல் வேலைகளைப் பார்க்கப் போய்விட்டனர்.

மாதவனும் இந்தத் தாக்குதலுக்குப் பின் ஜெயேந்திரருக்கு எதிரான நடவடிக்கைகளை நிறுத்திக் கொண்டார்.மண்டை பிளந்து உயிர் பிழைத்ததே அதிசயம் என்பதால் அவரது வீட்டினர் அவரை வீண் விவகாரங்கள்வேண்டாம் என்று சொல்லி அடக்கி வைத்துவிட்டனர்.

இந் நிலையில் ஜெயேந்திரர் தொடர்பான வழக்குகள் ஒவ்வொன்றாக எஸ்.பி. பிரேம்குமார் தலைமையிலானகாஞ்சிபுரம் தனிப்படை வசம் ஒப்படைக்கப்பட்டு வருகின்றன.

அந்த வகையில் மாதவன் தாக்கப்பட்ட வழக்கும் தற்போது காஞ்சிபுரத்துக்கு மாற்றப்பட்டுள்ளது.

ஜெயேந்திரர் மீது ஏற்கனவே சங்கரராமன் கொலை வழக்கு, ஆடிட்டர் ராதாகிருஷ்ணன் தாக்குதல் வழக்கு உள்ளநிலையில் மூன்றாவதாக இந்த வழக்கிலும் ஜெயேந்திரர் கைது செய்யப்படுவார் என்று தெரிகிறது.

Jayandrarகொலை, கொலை முயற்சி என மூன்று வழக்குகள் இருந்தால் ஒருவரை குண்டர் சட்டத்தில் உள்ளே தள்ள முடியும்.அந்த வகையில் தான் சமீபத்தில் பிராடு சாமியார் சதுர்வேதி குண்டாஸில் உள்ளே போடப்பட்டுள்ளார். ஒருவருடத்துக்கு ஜாமீனோ, விசாரணையோ இல்லாமல் அவர் உள்ளே இருப்பார்.

இந் நிலையில் சங்கராச்சாரியார் தொடர்புடையதாகக் கருதப்படும் மூன்றாவது வழக்கான திருக்கோஷ்டியூர்மாதவன் வழக்கும் காஞ்சிபுரம் போலீசாரிடம் மாற்றப்பட்டுள்ளது மடத்தின் பக்தர்களை நிச்சயம் அதிர்ச்சியும்ஆழ்த்தப் போவது மட்டும் நிச்சயம்.

இந்த வழக்கிலும் சங்கராச்சாரியார் சேர்க்கப்படலாம் என்று தெரிகிறது.

திருக்கோஷ்டியூர் மாதவன் வழக்கு விசாரணை ஆரம்பித்தால் ஜெயேந்திரரால் சிவன் சன்னதி அகற்றப்படுவதற்குமூல காரணமாக இருந்ததாகக் கருதப்படும் மிழகத்தின் மிகப் பெரிய வியாபாரக் குடும்பம் ஒன்றும் சிக்கலுக்குஉள்ளாகலாம் என்கிறார்கள் விஷயம் தெரிந்தவர்கள்.

அப்பு சம்பந்தப்பட்டதால் அண்ணா நகர் ரமேஷ் குடும்பத்தின் மர்மச் சாவு வழக்கும் தற்போது காஞ்சிபுரம்எஸ்பியிடம் மாற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X