For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இலங்கையில் 1,300 பேர் பலி: இந்திய கப்பல்கள் விரைவு

By Staff
Google Oneindia Tamil News

கொழும்பு:

A woman whose house was washed awayநிலநடுக்கம் காரணமாக உருவான கடல் கொந்தளிப்பில் இலங்கையில் 1,297 பேர் பலியாகிவிட்டனர்.

காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்க இந்தியா மருத்துவ உதவி அளிக்கும் என்று பிரதமர் மன்மோகன் சிங் உறுதியளித்துள்ளார்.இலங்கைக்கு உதவ 5 இந்திய கடற்படைக் கப்பல்கள் விரைந்துள்ளன.

தென்னிந்தியாவில் சென்னை, ஆந்திராவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் வங்காள விரிகுடாவில் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது. இதேபோல்இந்தோனிஷியாவில் ஏற்பட்ட கடும் நில நடுக்கத்தால் இலங்கையில் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இலங்கையில் கிழக்கு மற்றும் தெற்கு கடலோரப் பகுதிகளில் கடல்நீர் உள்ளே புகுந்தது. தலைநகர் கொழும்புவில் பாதி கடல்நீரால்சூழப்பட்டுள்ளது. ஏராளமானோர் வீடிழந்தனர்.

குறைந்தது 1,297 பேர் இறந்திருப்பார்கள் என்றும், இன்னும் முழு விவரம் கிடைக்கப் பெறவில்லை என்றும் இலங்கைப் பிரதமர் மகிந்தாராஜபக்சேவின் அலுவலக அதிகாரி லலித் வீரசிங்கே தெரிவித்தார்

.முன்னதாக காயமடைந்தவர்களுக்கு சிகிச்சையளிக்கவும், கடலலையில் சிக்கியவர்களை மீட்க ஹெலிகாப்டர் தந்து உதவுமாறுஇந்தியாவிற்கு ராஜபக்சே வேண்டுகோள் விடுத்தார்.

இலங்கையின் கிழக்குப் பகுதியில் முஸ்லீம்கள் அதிகம் வசிக்கும் முட்டூர் என்ற கிராமத்தில் மட்டும் குறைந்தது 200 பேர் பலியானார்கள்என்றும், திரிகோணமலையில் 14 பேர் பலியானார்கள் என்றும் தகவல் கிடைத்துள்ளது. நூற்றுக்கணக்கானோர் காணாமல் போனதாகத்தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் பலி எண்ணிக்கை மேலும் உயரும் என்று அஞ்சப்படுகிறது.

இந்தியா உதவி:

கடல் கொந்தளிப்பு காரணமாக இலங்கையில் ஏற்பட்ட சேதங்கள் குறித்து தனது வருத்தத்தை தெரிவித்த மன்மோகன் சிங், இலங்கைக்குத்தேவையான அனைத்து உதவிகளையும் அளிக்க இந்தியா தயாராக இருப்பதாகத் தெரிவித்தார். மீட்புப் பணிகளில் இந்திய கடற்படைஉதவி செய்யும் என்றும் அவர் தெரிவித்தார்.

இதையடுத்து 5 இந்திய போர்க் கப்பல்கள் உணவுப் பொருட்கள் மற்றும் மருத்துவ, நிவாரண உதவிகளை ஏற்றிக் கொண்டு கொழும்புவிரைந்தன. விசாகபட்டிணம், கொச்சின், மும்பையில் இருந்து கிளம்பிய இந்தக் கப்பல்கள் இலங்கையின் திரிகோணமலை மற்றும் கலீதுறைமுகங்களுக்குச் செல்லும்.

இந்தக் கப்பல்களில் மீட்புப் பணிக்கு உதவும் ஹெலிகாப்டர்களும் உள்ளன.

300 கைதிகள் தப்பிப்பு:

இதற்கிடையே தெற்கு இலங்கை, மடாராவில் உள்ள சிறைச்சாலை கடல் கொந்தளிப்பு காரணமாக இடிந்ததில் அதில் அடைக்கப்பட்டிருந்தகைதிகளில் குறைந்தது 300 பேர் தப்பிச் சென்றுவிட்டனர்.

சிறைச்சாலை இடிந்ததில் யாராவது பலியானார்களா என்பது குறித்து தகவல் ஏதும் தெரியவில்லை.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X