For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அந்தமான் காடுகளில் பிணங்கள்: மீண்டும் நிலநடுக்கம்

By Staff
Google Oneindia Tamil News

போர்ட்பிளேர்:

அந்தமானில் நேற்று நள்ளிரவும் இன்று அதிகாலையும் மீண்டும் நில நடுக்கங்கள் ஏற்பட்டன.

Tsunami
சுனாமி அலைகளுக்கு இந்தத் தீவுகளில் 3,000 பேர் பலியாகிவிட்ட நிலையில் மேலும் 3,000 பேரைக் காணவில்லை. இவர்களதுகதி என்ன ஆனது என்று தெரியவில்லை.

இந்தத் தீவுகளில் இந்திய கடற்படையும் விமானப் படையினரும் இணைந்து மிகப் பெரிய மீட்பு நடவடிக்கைகளில்ஈடுபட்டுள்ளனர். இந் நிலையில் நேற்று நள்ளிரவு 12.45 மணியளவிலும் இன்று காலை 4 மணிக்கும் மீண்டும் நில நடுக்கம்ஏற்பட்டது.

இதையடுத்து சுனாமி அலைகள் கிளம்பலாம் என்று அஞ்சி மக்கள் கடல் பகுதிகளில் இருந்து உள் பகுதிகளுக்கு ஓடினர்.பேரலைகளுக்கு அஞ்சி அந்தமான் காட்டுப் பகுதிகளில் உள்ள மலைகளில் சுமார் 10,000 மக்கள் தஞ்சம் புகுந்துள்ளனர்.

மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ள கார் நிகோபார் தீவுகளில் முழு அளவில் மீட்புப் பணிகள் நடந்து வருகின்றன. காணாமல் போன3,000 பேரின் நிலைமை தெரியவில்லை. அவர்கள் 24 மணி நேரத்தில் திரும்பாவிட்டால் பலியாகிவிட்டதாகவே கருதப்படும்.

கடல் அலையால் அடித்துச் செல்லப்பட்ட ஆயிரக்கணக்கானவர்களின் உடல்கள் அந்தமானின் காட்டுப் பகுதிகளில் மரங்களிலும்புதர்களிலும் சிக்கிக் கிடக்கின்றன.

இந்தியாவில் இருந்து 32 ராணுவ மற்றும் சிவில் விமானங்களும் சரக்கு விமானங்களும் தொடர்ந்து அந்தமானுக்குஇயக்கப்பட்டவண்ணம் உள்ளன. மருந்துகள், மருத்துவக் குழுக்கள், உணவு, எரிபொருள் ஆகியவை தொடர்ந்து அனுப்பப்பட்டுவருகின்றன.

நேற்று முதல் தினமும் ஆயிரக்கணக்கான காயமடைந்தவர்கள் சென்னை, கொல்கத்தா உள்ளிட்ட நகர்களுக்கு விமானங்கள் மூலம்கொண்டு வரப்பட்டுள்ளனர்.

அந்தமானில் பலியானவர்களில் 27 விமானப் படையினரும் அடங்குவர். மேலும் 70 விமானப் படையினரைக் காணவில்லை.

இதற்கிடையே ஒரிஸ்ஸாவின் ரூர்கேலா இரும்பு நிறுவனத்தில் இருந்து எல்டிசியில் அந்தமானுக்குச் சென்ற 13 குடும்பத்தினர்பத்திரமாக இன்று ஊர் திரும்பி வந்தனர். இவர்களை இந்தியன் ஏர்லைன்ஸ் சிறப்பு விமானங்கள் ஊர் கொண்டு வந்து சேர்த்தன.இவர்களில் பலர் தமிழர்கள் ஆவர்.

தொடர்ந்து இந்தியாவில் இருந்து அந்தமானுக்கு விமானங்கள் இயக்கப்பட்டவண்ணம் உள்ளன. இங்கிருந்து செல்லும்விமானங்களில் உணவு, மருந்து, உடைகள், நிவாரண பொருட்கள், எரிபொருள் கொண்டு செல்லப்படுகிறது. அங்கிருந்து திரும்பிவருகையில் காயமடைந்தவர்கள், சுற்றுலாப் பயணிகளை இந்த விமானங்கள் இந்தியா கொண்டு வருகின்றன.

போர்ட்பிளேரின் ரன்வேயில் பாதி சேதமடைந்துவிட்டபோதும் இந்தியன் ஏர்லைன்ஸ் மற்றும் ராணுவ விமானிகள் தொடர்ந்துவிமானங்களை இயக்கி வருகின்றனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X