For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கல்பாக்கம் அணு உலை தப்பியது

By Staff
Google Oneindia Tamil News

கல்பாக்கம்:

Waves brought cycle in treeசுனாமி பேரலைகளால் கல்பாக்கம் அணு மின் நிலையத்துக்கு பெரும் சேதம் ஏற்பட்டிருப்பதாகக் கூறப்படும் நிலையில் அதுகுறித்து விவாதிக்க பிரதமர் தலைமையில் இன்று உயர் மட்டக் கூட்டம் நடந்தது.

இதில் கலந்து கொள்வதற்காக உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீல் அவரசமாக இன்று காலை சென்னையில் இருந்து டெல்லிதிரும்பினார்.

நாட்டின் மூத்த அணு விஞ்ஞானிகள் கலந்து கொண்ட இக் கூட்டத்திற்குப் பின் நிருபர்களிடம் பேசிய பிரதமரின் பாதுகாப்புஆலோசகர் ஜே.என்.தீட்சித், கல்பாக்கத்தின் இரு அணு உலைகளும் பாதுகாப்பாகவே உள்ளன. அங்கு கதிர்வீச்சு அபாயம் ஏதும்இல்லை என்றார்.

சென்னையில் இருந்து 80 கி.மீ. தொலைவில் கடலோரத்தில் உள்ள கல்பாக்கம் அணு மின் நிலையத்தையும் கடல் அலைகள்தாக்கின. இதில் விஞ்ஞானி ஒருவர் உள்பட 5 பேர் கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டு பலியாயினர். மொத்தம் இப் பகுதியில் 80பேர் உயிரிழந்துள்ளனர். பலரைக் காணவில்லை.

அணு மின் நிலையத்துக்கும் சேதம் ஏற்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. ஆனால், அதை இந்திய அணு ஆராய்ச்சித்துறைஇயக்குனர் ராஜேந்திரனும் தலைவர் ஜெயினும் மறுத்தனர்.

ராஜேந்திரன் கூறுகையில், பயங்கர அலைகளால் அணு மின் நிலையத்துக்குள் கடல் நீர் புகுந்தது. இதையடுத்து அணு உலைகளின்இயக்கம் நிறுத்தப்பட்டது. கடல் நீரைக் கொண்டு தான் உலைகளின் வெப்பம் தணிக்கப்படும். ஆனால், அலைகள் அதிகமாகஇருந்ததால் கடல் நீரை உலைகளுக்குக் கொண்டு வரும் குழாய்களை மூடிவிட்டோம்.

மற்றபடி உலைகளுக்கோ மின் நிலையத்துக்கோ சேதமோ, வெடிப்போ ஏதும் ஏற்படவில்லை என்றனர். (ஆனால், மின்நிலையசுவர்கள் உடைந்துவிட்டதாக தகவல்கள் வருவது குறிப்பிடத்தக்கது).

ஜெயின் கூறுகையில், புதிதாகக் கட்டப்பட்டு வரும் விரைவு அணு உலையைச் சுற்றிக் கட்டப்பட்ட சுவர் இடிந்துவிட்டது. இயங்கிவரும் அணு உலைகள் எந்த விதத்திலும் பாதிக்கப்படவில்லை. இதனால் கதிர்வீச்சு அபாயம் எல்லாம் ஏற்பட வாய்ப்பில்லைஎன்றார்.

இந் நிலையில் இந்திய அணு சக்தி கமிஷனின் தலைவர் அனில் ககோத்கர் நேற்று அவசரமாக மும்பையில் இருந்து கல்பாக்கம்வந்தார். உலையையும் கட்டடங்களையும் பார்வையிட்டார். பின்னர் நிருபர்களிடம் அவர் கூறுகையில், கட்டப்பட்டு வந்த அணுஉலையின் ஒரு பகுதி தான் பாதிக்கப்பட்டது. அது காங்க்ரீட் கட்டடம் தான். அதில் உலையும் இல்லை, கருவிகளும் இல்லை.இதனால் கதிர்வீச்சு அபயாமே இல்லை என்றார்.

இந் நிலையில் இன்று பிரதமர் தலைமையில் அணு மின் நிலையத்தின் பாதுகாப்பு குறித்து உயர் மட்டக் கூட்டம்விவாதிக்கவுள்ளது.

அணு உலையைப் பார்வையிட்டுவிட்டு அந்தமான் செல்லவிருந்த உள்துறை அமைச்சர் அந்தத் திட்டங்களைக் கைவிட்டுவிட்டுஇன்று காலை டெல்லி திரும்பினார். அணு உலையின் பாதுகாப்பு குறித்து பிரதமர் கூட்டியுள்ள கூட்டத்தில் அவர் பங்கேற்றார்.

இதற்கிடையே கல்பாக்கத்தில் இருந்த 1,500 பேர் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர். இவர்களுக்கு அணு மின்நிலையம் உதவி வழங்கி வருகிறது. இப் பகுதியில் உடைந்து போன பாலங்களை சீரமைக்கும் பணியையும் அணு மின் நிலையம்தொடங்கியுள்ளது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X