For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சுனாமியை கண்டறியும் கருவிகள் வாங்கும் இந்தியா

By Staff
Google Oneindia Tamil News

டெல்லி:

Marina Beach
கடலில் சுனாமி அலைகள் உருவாவதைக் கண்டுபிடிக்கும் கருவிகளை அமெரிக்காவிடம் இருந்து இந்தியா வாங்க இருப்பதாக மத்தியஅறிவியல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் கபில் சிபல் தெரிவித்தார்.

இது தொடர்பாக துறை அதிகாரிகளுடன் விவாதித்த பின்பு அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

இந்தக் கருவிகள் அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும். கடல் பரப்பிலும் கடலின் அழுத்தத்திலும் ஏதேனும் வித்தியாசம்ஏற்பட்டால் அது குறித்த தகவல்களை இந்தக் கருவி செயற்கைக்கோளுக்கு அனுப்பும்.

இதன் மூலம் ஆபத்து குறித்து முன் கூட்டியே அறிந்து மனித உயிரிகள் விரயமாவதை தடுக்கலாம். மேலும் புயல் சின்னம் உருவாவதைக்கண்டறியும் நடைமுறையையும் இது பலப்படுத்தும். உலகின் 25 சதவீத புயல் சின்னங்கள் வங்காள விரிகுடாவில்தான் உருவாகின்றனஎன்றார்.

இஸ்ரோவின் உதவி:

இதற்கிடையே, மீட்பு நடவடிக்கைகளை விரைவுபடுத்த உதவும் பொருட்டு, கடல் கொந்தளிப்பால் பாதிக்கப்பட்ட பகுதிகளை இந்தியவிண்வெளி ஆராய்ச்சி மையம் தனது செயற்கைக் கோள்கள் மூலம் தொடர்ந்து படம் எடுத்து மத்திய அரசுக்கு வழங்கி வருகிறது.

இது தொடர்பாக இஸ்ரோ தலைவர் மாதவன் நாயர் நிருபர்களிடம் கூறியதாவது:

ஐ.ஆர்.எஸ். 1சி, 1டி, ரிசோர்ஸ்சாட்-1, கல்பனா-1 ஆகிய செயற்கைக்கோள்கள் கடல் மற்றும் நிலப்பகுதிகளில் ஏற்படும் மாறுதல்களைக்கண்காணித்து வருகின்றன. கடல் கொந்தளிப்பு ஏற்பட்ட தினத்தன்று இந்த செயற்கைக்கோள்கள் இந்தியப் பெருங்கடல் மீது இல்லை.

பின்பு தகவல் அறிந்து அதன் காமிராக்களை பாதிக்கப்பட்ட பகுதிகளை நோக்கித் திருப்பினோம். இவை எடுத்து வரும் படங்கள்ஹைதராபாத்தில் உள்ள நிலையத்திற்கு அனுப்பப்படுகின்ற. அங்கிருந்து உள்துறை அமைச்சகத்திற்கு அந்த புகைப்படங்கள் அனுப்பிவைக்கப்படும்.

அமெரிக்கா உதவி:

இந் நிலையில் கடல் கொந்தளிப்பால் பாதிக்கப்பட்ட நாடுகளுக்கு மீட்புக் குழு நிபுணர்களை அமெரிக்கா அனுப்பியுள்ளது.

இது தொடர்பாக அமெரிக்க வெளியுறவு அமைச்சர் காலின் பவல் கூறியதாவது:

பாதிக்கப்பட்ட நாடுகளுக்கு அமெரிக்கா நிபுணர் குழுக்களை அனுப்பியுள்ளது. மேலும் ஆசிய நாடுகளுக்கு 15 மில்லியன் அமெரிக்கடாலர்களை முதல் கட்டமாக தந்துள்ளோம். இந்தியா, இலங்கை, இந்தோனேஷியா, மாலத்தீவு ஆகிய நாடுகளுக்கு தூதர்கள் மூலம்நிதியுதவிகள் கொடுக்கப்பட்டுள்ளன.

மேலும் 4 மில்லியன் டாலர்களை செஞ்சிலுவை சங்கத்திற்குத் தந்துள்ளோம். இந்த சம்பவத்தில் குறைந்தது 8 அமெரிக்கர்கள்இறந்துள்ளார்கள். மேலும் பலரைக் காணவில்லை.

இது சர்வதேச பேரிழப்பாகும். 20,000க்கும் மேற்பட்டோர் சில நிமிடங்களில் இறந்துவிட்டார்கள். இதன் பாதிப்பு பல ஆண்டுகளுக்குஇருக்கும். இந்தப் பகுதிகளில் புனரமைப்பு பணிகளை முடிக்க நீண்ட நாட்களாகும் என்றார்.

முன்னதாக இந்தியா, இலங்கை, இந்தோனிேஷியா, மாலத்தீவு, தாய்லாந்து நாடுகளின் வெளியுறவுத் துறை அமைச்சர்களுடன் காலின்பவல் தொலைபேசியில் பேசினார். அப்போது தனது இரங்கலைத் தெரிவித்தார்.

அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் பாதிக்கப்பட்ட நாடுகளின் தலைவர்களுக்கு இரங்கல் கடிதம் அனுப்பியுள்ளார்.

மன்மோகன் பயணம் ஒத்திவைப்பு:

இதற்கிடையே பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு இன்று வருவதாக இருந்த பிரதமர் மன்மோகன் சிங்கின் பயணம் நாளைக்கு ஒத்திவைக்கப்பட்டுவிட்டது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X