For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கடலோர குடியிருப்புகளை காலி செய்யும் அரசு ஊழியர்கள்

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

Expert team visits affected area

சென்னை பட்டினப்பாக்கத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புகளில் வசித்து வரும் அரசு ஊழியர்கள் சுனாமி அலை பயத்தால் தங்களதுவீடுகளைக் காலி செய்து வருகிறார்கள்.

சமீபத்தில் சுனாமி தாக்கி கடும் பாதிப்புக்குள்ளான பகுதிகளில் சென்னை பட்டினப்பாக்கம் ஒன்று. இங்குள்ள கடலோர குடியிருப்புகள்,குடிசைகள் முற்றிலும் அழிந்து விட்டன. தப்பியவை, கடலுக்கு மிக அருகே உள்ள அரசு ஊழியர்களின் அடுக்குமாடிக் குடியிருப்புகள்மட்டும் தான்.

இங்குள்ள 500 குடியிருப்புகளிலும் அரசு ஊழியர்கள் வசித்து வருகின்றனர். மொத்தம் 2,000க்கும் மேற்பட்டோர் வசித்து வருகிறார்கள்.

இக் குடியிருப்புகள் கட்டப்பட்டு பல ஆண்டுகளாகி விட்டன. இதை அரசின் பொதுப் பணித்துறை ஏனோ தானோவென்றுதான் கட்டியது.மேலும் உப்புக் காற்று காரணமாக வீடுகள் பாழடைந்து போயுள்ளன.

எப்போது வேண்டுமானாலும் இடியலாம் என்ற நிலையில் பல கட்டடங்கள் உள்ளன. இருந்தாலும் சென்னையில் கடலோரத்தில் குறைந்தவாடகைக்கு வீடு கிடைப்பது குதிரைக் கொம்பு என்பதால் இதில் மன தைரியத்துடன் வசித்து வந்தனர் அரசு ஊழியர்கள்.

ஆனால், சுனாமி அலைத் தாக்குதல் வந்து போன பிறகு இவர்கள் மத்தியில் பயம் பரவிவிட்டது. பாழடைந்த இந்தக் கட்டங்களை அலைதாக்கினால் என்னவாகும் என்ற அச்சம் அரசு ஊழியர்கள் மத்தியில் பரவியுள்ளது.

இதன் காரணமாக அரசு ஊழியர்கள் இந்த வீடுகளைக் காலி செய்யத் தொடங்கியுள்ளனர். இதுவரை 20க்கும் மேற்பட்ட குடும்பங்கள்வீடுகளைக் காலி செய்துவிட்டதாகத் தெரிகிறது.

திரைப்பட தொழிலாளர்கள் அஞ்சலி:

சுனாமியால் இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் தென்னிந்திய திரைப்படத் தொழிலாளர்கள் சம்மேளனத்தின் (பெப்சி)சார்பில் தொழிலாளர்கள் கலந்து கொண்ட தீபாஞ்சலி நிகழ்ச்சி நடந்தது.

தென்னிந்தியத் திரைப்படத் தொழிலாளர் சம்மேளனத்தில் இடம் பெற்றுள்ள 23 தொழிலாளர்கள் அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் சென்னைவள்ளுவர் கோட்டத்தில் கூடினர்.

தொழிலாளர்கள் அனைவரும் கையில் மெழுகுவர்த்திகளை ஏந்தியபடி சுனாமியால் இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தினர். சுனாமியால்பாதிக்கப்பட்டவர்களுக்கு பெப்சி சார்பில் ரூ. 10 லட்சம் வழங்கப்படும் என்று கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X