சங்கர மடத்தின் 183 வங்கிக் கணக்குகள் முடக்கம்

Subscribe to Oneindia Tamil

காஞ்சிபுரம்:

Jeyendrarகாஞ்சி சங்கர மடம் மற்றும் அதனுடன் தொடர்புடைய டிரஸ்ட்களின் வங்கிக் கணக்குகளை போலீஸார்முடக்கியுள்ளனர். மொத்தம் 183 வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுவிட்டன.

மடத்திற்கு அருகே உள்ள ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கிக் கிளையிலிருந்துதான் சங்கரராமனைக் கொன்ற கூலிப்படையினருக்கு ரூ. 50 லட்சம் பணம் எடுத்துக் கொடுக்கப்பட்டது என்று போலீஸ் தரப்பு கூறியது.

பின்னர் கடிகாஸ்ரமம் டிரஸ்ட் கணக்கில் இருந்து பணம் எடுத்துத் தரப்பட்டதாகவும், ஜெயேந்திரர் கைதுக்குப் பின்வங்கி மற்றும் மடத்தின் கணக்கு வழக்குகளில் மோசடிகளில் மடம் ஈடுபட்டதாகவும் கூறியது.

இந் நிலையில் சங்கர மடத்தின் வங்கிக் கணக்குகளை தனிப்படை போலீஸார் முடக்கியுள்ளனர். தமிழக அரசின்உத்தரவின் கீழ் இந்த முடக்கல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

நேற்று இதற்கான உத்தரவுகள் சங்கர மடம், டிரஸ்ட் கணக்குகள் உள்ள வங்கிக் கிளைகளுக்கு அனுப்பப்பட்டன.ஆனால், இந்தத் தகவலை மடத்துக்கு போலீசார் தெரிவிக்கவில்லை.

வங்கி ஊழியர்கள் மடத்துக்கு போன் செய்து தகவலைச் சொன்ன பிறகே கணக்குகள் முடக்கப்பட்டது தெரிந்தது.

கணக்குகள் அனைத்தும் முடக்கப்பட்டுவிட்டதால், எந்த வரவு-செலவையும் மேற்கொள்ள முடியாத இக்கட்டானநிலைக்கு மடம் தள்ளப்பட்டுள்ளது.

183 வங்கிக் கணக்குகளும் முடக்கப்பட்டுவிட்டதால் மடத்தின் சமூக நலப் பணிகள் முழுமையாகபாதிக்கப்பட்டுள்ளதாக நிர்வாகிகள் கூறினர்.

இதற்கிடையே வங்கிக் கணக்குகளை மீட்டெடுக்க ஒரு சட்டக் குழுவை சங்கர மடம் அமைத்துள்ளது.

சுந்தரேச அய்யர் மீது 2வது வழக்கு:

இதற்கிடையே சங்கரராமன் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட காஞ்சி மடத்தின் மேலாளர் சுந்தரேச அய்யர்மீது இன்னொரு வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

மடத்தின் கணக்கு வழக்குகளில் மோசடி செய்ததாகவும், கணக்குகளைத் திருத்தியதாகவும் இந்த வழக்குப்பதிவாகியுள்ளது.

மடத்தின் வரவு செலவு புத்தகங்களில் சில பக்கங்கள் கிழிக்கப்பட்டிருப்பதாக போலீசார் கூறுகின்றனர்.

கடிகாஸ்ரம டிரஸ்ட் நிர்வாகிக்கு சம்மன்:

இதற்கிடையே சங்கர மடத்தின் கடிகாஸ்ரமம் டிரஸ்டின் உறுப்பினர் நாகராஜனுக்கும் போலீசார் சம்மன்அனுப்பியுள்ளனர். இந்த டிரஸ்ட் கணக்கில் இருந்தும் கொலையாளிகளுக்கு பணம் எடுத்துத் தரப்பட்டதாகபோலீசார் கூறுகின்றனர்.

அது குறித்து நாகராஜனிடம் இன்று விசாரிக்கப்படும் என்று தெரிகிறது. இந்த டிரஸ்ட்டை ரகு தான் தனதுகட்டுப்பாட்டில் வைத்திருந்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+