தமிழக சட்டசபை 31ம் தேதி கூடுகிறது
சென்னை:
தமிழக சட்டசபை வரும் 31ம் தேதி கூடவுள்ளது. இதற்கான அறிவிப்பை ஆளுநர் எஸ்.எஸ்.பர்னாலா பிறப்பித்துள்ளார்.
ஆளுநர் மாளிகை வெளியிட்ட செய்திக் குறிப்பில், இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 174வது பிரிவின் கீழ் ஆளுநருக்குஅளிக்கப்பட்டுள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி வரும் 31ம் தேதி சட்டசபைக் கூட்டத்தைக் கூட்ட உத்தரவிடப்பட்டுள்ளது என்றுகூறப்பட்டுள்ளது.
31ம் தேதி காலை 10 மணிக்கு சட்டசபைக் கூட்டம் தொடங்குகிறது. இந்த ஆண்டின் முதல் கூட்டம் இது என்பதால் ஆளுநர் உரையுடன்கூட்டம் தொடங்கும்.
உரைக்குப் பின்னர் சபாநாயகர் காளிமுத்து தலைமையில் சட்டசபை அலுவல் ஆய்வுக் குழு கூடி உரை மீது எப்போது விவாதம்தொடங்குவது என்பது குறித்து முடிவு செய்யப்படும். இந்தக் கூட்டத் தொடர் ஒரு வார காலத்திற்கு நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.



திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!