For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

வீரப்பன் சிலை மாயம்!

By Staff
Google Oneindia Tamil News

மேட்டூர்:

சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே வீரப்பனின் சமாதி உள்ளஇடத்தில் வைக்கப்பட்டிருந்த வீரப்பனின் 4 அடி உயர சிலை திடீரென்றுமாயமாகிவிட்டது.

மேட்டூர் அருகே உள்ள மூலக்காடு மலை கிராமத்தில் வீரப்பனின் உடல் புதைக்கப்பட்டது. அந்த இடத்தில் ஞாயிற்றுக்கிழமை வீரப்பனின் 4அடி உயர சிலை திடீரென உதயமானது. கையில் துப்பாக்கியுடன் நின்ற இந்தச் சிலையை யார் வைத்தது என்பது தெரியவில்லை.

சிலை வைக்கப்பட்ட இடம் பொதுப் பணித்துறைக்குச் சொந்தமானது என்பதால் சர்ச்சை எழுந்தது. இதைத் தொடர்ந்து சிலையை அகற்றநடவடிக்கை எடுக்குமாறு கொளத்தூர் காவல் நிலையத்தில் பொதுப்பணித்துறை சார்பில் புகார் கொடுக்கப்பட்டது.

இந் நிலையில் நேற்றிரவில் வீரப்பன் சிலை வந்த திடீரென காணாமல் போனது. உயிரோடு இருக்கும் வரை மாயாவியாக இருந்த வீரப்பன்செத்தும் மாயாவியாகவே இருக்கிறான்.

ஏலத்திற்கு வரும் துப்பாக்கிகள்:

இதற்கிடையே வீரப்பன் மற்றும் அவனது கூட்டாளிகளிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட துப்பாக்கிகளை ஏலம் விட முடிவு செய்யப்பட்டுள்ளது.

வீரப்பன் மற்றும் அவனது கூட்டாளிகள் ஆகியோரைத் தேடி அதிரடிப்படையினர், போலீஸார் ஆகியோர் அந்தியூர், பர்கூர் உள்ளிட்ட காட்டுப் பகுதிகளில்வேட்டை நடத்தியபோது ஏராளமான கூட்டாளிகள் பிடிபட்டனர்.

அவர்களிடமிருந்து ஏராளமான நாட்டுத் துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டன.

இதேபோல, வீரப்பன் மற்றும் அவனது கும்பலை அதிரடிப்படையினர் சுட்டு வீழ்த்தியபோது ஏ.கே.47 ரக துப்பாக்கிகள் உள்ளிட்ட துப்பாக்கிள்கைப்பற்றப்பட்டன.

மொத்தம் 200க்கும் மேற்பட்ட துப்பாக்கிகள் வீரப்பன் கும்பலிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இவற்றில் ஏ.கே.47 மற்றும் சிலதுப்பாக்கிகளை போலீஸார் தங்களிடம் வைத்துக் கொண்டு மற்றவற்றை ஏலம் விட முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதன்படி 200 துப்பாக்கிகள் ஈரோடு மாவட்ட ஆயுதப்படை முகாமுக்கு கொண்டு வரப்பட்டன. இவற்றை மாவட்ட ஆட்சித் தலைவர் கார்த்திகேயன்ஆய்வு செய்தார்.

இதன் முடிவில் 11 துப்பாக்கிகளை மட்டும் ஏலம் விடவும் மற்றவற்றை துப்பாக்கி தயாரிப்பு தொழிற்சாலைக்கு அனுப்பி அழித்து விடவும் முடிவுசெய்யப்பட்டது.

ஏலம் விடப்படவுள்ள துப்பாக்கிகளுக்கு ரூ. 700 முதல் ரூ. 8,000 வரை விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே துப்பாக்கி வைத்திருப்பதற்கானஉரிமம் பெற்றவர்களுக்கு இந்த துப்பாக்கிகள் ஏலம் மூலம் வழங்கப்படும் என்று கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X