கடலூரில் கடல் கொந்தளிப்பு!
கடலூர்:
கடலூர் பகுதியில் கடலில் மீண்டும் லேசான கொந்தளிப்பு காணப்படுவதால் மக்கள் மத்தியில் கடும் பீதி ஏற்பட்டுள்ளது. கடலோரத்தில்வசிக்கும் பலர் தங்களது வீடுகளை விட்டு அவசரமாக வெளியேறி வருகின்றனர்.
ஆனால், கடலூர் உள்பட தமிழக கடலோரப் பகுதிகளில் சுனாமி ஏற்படுவதற்கான வாய்ப்பே இல்லை, எனவேபொதுமக்கள் பீதியடையத் தேவையில்லை என்று சென்னை வானிலை ஆராய்ச்சி நிலையத்தின் பூகம்பவியல்பிரிவு விளக்கமளித்துள்ளது.
சுனாமியால் கடுமையாக பாதிக்கப்பட்ட கடலூர் மாவட்டத்தில் தற்போதுதான் இயல்பு நிலை திரும்பி வருகிறது. நிவாரணப் பணிகள் நடந்துவரும் நிலையில் இன்று கடலில் லேசான கொந்தளிப்பு காணப்படுவதால் மக்கள் மத்தியில் பீதி ஏற்பட்டுள்ளது.
மீண்டும் சுனாமி அலைகள் தாக்கலாம் என்ற அச்சம் வேகமாக பரவியதால் மக்கள் பலர் தங்களது வீடுகளை விட்டு வெளியேறிவருகின்றனர். இதைத் தொடர்ந்து போலீஸார் ஜீப்புகளில் சென்று சுனாமி வராது, பயப்படத் தேவையில்லை என்று மைக் மூலம் அறிவித்துவருகின்றனர்.
இருப்பினும் தேவானம்பாட்டினம், கீச்சாங்குப்பம் உள்ளிட்ட பகுதிகளில் வசித்து வருவோர் தங்களது வீடுகளை காலி செய்து வேறுஇடங்களுக்கு சென்று கொண்டிருக்கிறார்கள்.
பூகம்பவியல் துறை விளக்கம்!
இதற்கிடையே, கடலில் சுனாமி அலைகள் வருவதற்கான அறிகுறிகள் ஏதும் தென்படவில்லை என்று சென்னை நுங்கம்பாக்கம் வானிலைஆராய்ச்சி நிலையம் தெளிவுபடுத்தியுள்ளது.
அதன் பூகம்பவியல் பிரிவு இயக்குனர் ராவ் கூறுகையில்,
இந்தியா மற்றும் சுற்றுப் புறப்பகுதிகளில் கடந்த 2 மணி நேரத்தில் எந்தவித பூகம்பமோ, நில அதிர்வுகளோபதிவாகவில்லை.
ரிக்டர் அளவுகோலில் 6 அல்லது 7க்கு மேல் பதிவானால்தான் சுனாமி குறித்து அச்சப்படலாம். ஆனால் கடந்த 2மணி நேரத்தில் எந்தவித நில அதிர்வும் பதிவாகவில்லை. எனவே கடலூர் உள்பட தமிழகத்தின்கடலோரப்பகுதிகளில் சுனாமி வருவதற்கான வாய்ப்பே இல்லை என்றார்.
ஆனாலும் கடலில் கடும் காற்று காரணமாக கொந்தளிப்பு காணப்படுவதை சுனாமி அலைகள் எனக் கருதி மக்கள் வெளியேறுவதாகத்தெரிகிறது.
இந்திய பெருங்கடலில் நேற்றிரவு 9.30 மணிக்கு 5.2 ரிக்டர் என்ற அளவுக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.



திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!