For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அந்தமான் முழ்குவதாக வதந்தி: வெளியேறும் மக்கள்

By Staff
Google Oneindia Tamil News

போர்ட் பிளேர்:

அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள் கடலில் மூழ்குவதாக பரவிய வதந்தியை அடுத்து அங்கிருந்து மக்கள் வெளியேறிஇந்தியாவிற்கு வந்த வண்ணம் உள்ளனர்.

ஜனவரி 21 (இன்று) அல்லது 26ம் தேதி அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள் கடலில் மூழ்கிவிடும் என்று வதந்தி பரவியது.இதனையடுத்து அங்கிருந்து மக்கள் கப்பல்களில் வெளியேறத் தொடங்கியுள்ளனர்.

எம்.வி. அக்பர், எம்.வி. நிக்கோபார், எம்.வி. நான்கெளரி, எம்.வி. ஸ்வராஜ்தீப், எம்.வி. ஹர்ஷவர்தன் ஆகிய கப்பல்களில்ஏதேனும் ஒன்றில் ஏறி, சென்னை, கொல்கத்தா அல்லது விசாகப்பட்டினத்திற்குச் செல்கின்றனர். இதனால் துறைமுகத்தில் மக்கள்கூட்டம் அலை மோதுகிறது.

முத்துசாமி என்பவர் கூறுகையில், சென்னை செல்ல டிக்கெட் வாங்குவதற்காக நேற்று ராத்திரியிலிருந்து குடும்பத்துடன் காத்துக்கொண்டிருக்கிறேன். எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் தீவை விட்டு வெளியேற விரும்புகிறோம். நான் இங்குதுணி வியாபாரம் செய்கிறேன்.

எனது சொத்துக்களை விற்காமல்தான் இப்போது செல்கிறேன். நிலைமை சீரானால் வருவேன். வந்து சொத்துக்களை விற்றுவிட்டுப்போய்விடுவேன். இப்போது உடமையை விட உயிர்தான் முக்கியம் என்றார்.

மக்கள் கூட்டத்தால் கப்பல்கள் முழுவதும் நிரம்பி வழிகின்றன. பயணம் முழுவதும் (2 முதல் 4 நாட்கள் வரை) நின்று கொண்டேசெல்ல மக்கள் தயாராக இருக்கின்றனர்.

இதற்கிடையே சிலர் உயரமான இடங்களை நோக்கி குடிபெயர்ந்துள்ளனர். கூட்டுறவுத்துறையில் அதிகாரியாக பணிபுரியும்அம்ரீத் சிங் என்பவர் கூறுகையில், படித்தவர்களிடம் கூட இத்தகைய வதந்திகள் பீதியைக் கிளப்பி விடுகின்றன. நான் கூட மலைமேல் வசிக்கும் எனது சகோதரனின் வீட்டிற்குச் செல்கிறேன் என்று கூறினார்.

வதந்திகளுக்கு எதிராக உள்ளூர் நிர்வாகம் எந்த வலுவான பிரச்சாரத்தையும் மேற்கொள்ளாததால் மக்களிடம் பீதி அதிகமாகஉள்ளது. மேலும் கடல் மட்டத்திலிருந்து குறைவான உயரத்தில் இருக்கும் இடங்கள் குறித்த வரைபடம் மக்களிடம் மேலும்அச்சத்தை அதிகரித்துள்ளது.

முருகன் என்ற கடைக்காரர் வரைபடத்தில் சிவப்புக் குறியிட்டிருக்கும் இடங்களைக் காட்டி, இந்த இடங்கள் தான் முதலில்மூழ்கப்போகிறது என்று கூறிகிறார்.

இந் நிலையில் அந்தமானின் துணைநிலை ஆளுநர் ராம் கப்சே கூறுகையில், இத்தகைய வதந்திகளுக்கு எந்த அறிவியல்ஆதராமும் இல்லை. யார் இந்த வதந்திகளைப் பரப்புவது என்பது தெரியவில்லை. மக்கள் இவற்றைப் பொருட்படுத்த வேண்டாம்என்று கூறினார்.

அந்தமானில் நிவாரணப் பணிகளை மேற்பார்வையிட்டு வரும் லெப்டினென்ட் ஜெனரல் ஆதித்யா சிங், உலகின் எந்த புவியியல்வல்லுநரும் இத்தகைய அனுமானத்தைக் கூறவில்லை. எந்த ஜோதிடரும் அவ்வாறு கூறவில்லை. இந்த பீதி தேவையற்றது என்றுகூறினார்.

தொடரும் நிலநடுக்கம்:

இதற்கிடையே அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளிலும், நியூசிலாந்திலும் இன்று காலை மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டது.

லிட்டில் நிக்கோபார் தீவின் மேற்குக் கரையோரத்தில் இன்று அதிகாலை 12.56 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில்5.2 ஆக இது பதிவானது. இதனால் பாதிப்பு ஏதேனும் ஏற்பட்டதா என்பது குறித்து உடனடியாகத் தெரியவரவில்லை.

நியூசிலாந்தில்..:

அதேபோல் நியூசிலாந்து தலைநகர் வெலிங்டனின் வடக்குப் பகுதியில் இந்திய நேரப்படி அதிகாலை 12.26 மணிக்கு நிலநடுக்கம்ஏற்பட்டது. ரிக்டர் அளவில் இது 5.5 ஆக பதிவானது.

இதில் உயிரிழப்போ, காயமோ ஏற்பட்டதா என்பது குறித்து உடனடியாகத் தெரியவரவில்லை. கடைகளில் இருந்த பொருட்கள்அலமாரியில் இருந்து கீழே விழுந்தாக கடை உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர். கடந்த செவ்வாய்கிழமை இதே பகுதியில் 10முறை நிலநடுக்கம் ஏற்பட்டது.

இது ஒரு தொடர்விளைவுதான் என்றும் யாரும் பீதியடையத் தேவையில்லை என்றும் நியூசிலாந்து புவியியல் நிபுணர் கெவின்பெனாக்டி கூறினார்.

1 மீட்டர் நகர்ந்த போர்ட் பிளேயர்:

இதற்கிடையே கடந்த மாதம் 26ம் தேதி சுனாமி அலைகள் தாக்கியதால் போர்ட் பிளேர் தீவு 1 மீட்டர் நகர்ந்துவிட்டதாக இந்தியகடல்வள மேம்பாட்டுத் துறை செயலாளர் ஹர்ஷ் குப்தா தெரிவித்தார்.

மேலும் சுனாமி தாக்குதலால் அந்தமான் தீவே லேசாகத் திரும்பிவிட்டதாகவும் அறிவியல் மற்றும் தொழில் நுட்பத் துறைசெயலாளர் ராமமூர்த்தி கூறியுள்ளார்.

மேலும் சாகர் பூர்வி, சாகர் பாஷ்சிமி, சாகர் கன்யா, சாகர் சம்படா ஆகிய கப்பல்களைக் கொண்டு சுனாமி பாதித்த பகுதிகளைஆராய்ந்ததாகவும், முதல் கட்ட ஆராய்ச்சி முடிவுகள் வர ஆரம்பித்து விட்டதாகவும் குப்தா கூறினார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X