For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஈழ போராட்டம் ஒத்திவைப்பு: விடுதலை புலிகள்

By Staff
Google Oneindia Tamil News

கிளிநொச்சி:

Prabakaran, Balasingam and Petersen

தமிழீழ போராட்டத்தை தற்காலிகமாக ஒத்திவைத்துள்ளதாக விடுதலைப் புலிகளின் அரசியல் ஆலோசகர் ஆண்டன் பாலசிங்கம்கூறியுள்ளார்.

விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் சுனாமி பாதிப்பு மிகக் கடுமையாக உள்ளது. அங்கு நிவாரணம் மற்றும்மறுசீரமைப்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதேபோல அரசின் கட்டுப்பாட்டில் உள்ள இலங்கையின் மற்ற பகுதிகளிலும்நிவாரணப் பணிகள் நடந்து வருகின்றன.

இந் நிலையில் விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனுக்கும், நார்வே நாட்டு வெளியுறவு அமைச்சர் ஜான் பீட்டர்சனுக்கும் இடையேகிளிநொச்சியில் பேச்சுவார்த்தை நடந்தது.

இந்தப் பேச்சுவார்த்தைக்குப் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த ஆண்டன் பாலசிங்கம், விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ளதமிழர் பகுதிகளில் சுனாமி பாதிப்பு மிகக் கடுமையாக உள்ளது. இங்கு சுனாமி பேரலைக்கு ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர்.

Ltte leaders and Narway leaders meeting

சுனாமி நிவாரணப் பணிகளுக்கு முன்னுரிமை அளிப்பதற்காக எங்களது பிரதானக் கோரிக்கையான தமிழீழ போராட்டத்தை தற்காலிகமாகஒத்திவைத்துள்ளோம். ஆனால் கைவிட்டுவிடவில்லை.

இலங்கை அரசும், விடுதலைப் புலிகளும் இணைந்து சுனாமி நிவாரணத்திற்காக நடவடிக்கை எடுக்க வேண்டும்.இதையேதான் நார்வேகுழுவினரும் வலியுறுத்தியுள்ளனர். புலிகளும், இலங்கை அரசும் கூட்டாக திட்டங்களை வகுக்க வேண்டும். அப்போதுதான் நிவாரணஉதவிகள் மக்களை நேரடியாக சென்றடைய முடியும் என்றார் பாலசிங்கம்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X