For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஆஸி. ஓபன் டென்னிஸ்: ரோடிக், டேவன்போர்ட் வெற்றி

By Staff
Google Oneindia Tamil News

மெல்போர்ன்:

Hewittஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டித் தொடரில் ஆண்டி ரோடிக், டேவன்போர்ட் ஆகியோர் 4வது சுற்றுக்கு முன்னேறினர்.

3வது சுற்றில் உலகின் 2ம் நிலை வீரரான அமெரிக்காவின் ஆண்டி ரோடிக் ஆஸ்திரியாவின் ஜர்கன் மெல்ஸரை எதிர்த்து விளையாடினார்.இந்தப் போட்டியில் ரோடிக் 6-2, 6-2, 7-5 என்ற செட்களில் மெல்ஸரைத் தோற்கடித்து 4வது சுற்றுக்கு முன்னேறினார்.

மற்றொரு போட்டியில் ஆஸ்திரேலிய வீரர் லேடன் ஹெவிட் 6-2, 4-6, 6-1, 6-4 என்ற செட்களில் அர்ஜென்டினாவின் இக்னசியோசேலாவை வென்றார்.

அர்ஜென்டினா வீரர்கள் கில்லர்மோ கோரியா 6-3, 6-2, 6-1 என்ற செட்களில் ஸ்பெயினின் ஜூவான் கார்லோஸ் பெரேராவையும்,டேவிட் நள்பாந்தியன் 6-7, 7-5, 6-2, 6-3 என்ற செட்களில் சிலியின் பெர்ணான்டோ கான்செலசையும், கில்லர்மோ கேனஸ் 6-1, 6-2, 6-2என்ற செட்களில் செக் குடியரசின் ஸ்டிபனக்கையும் தோற்கடித்து, 4வது சுற்றுக்கு முன்னேறினர்.

டிம் ஹென்மேன் தோல்வி:

Henmanஇதற்கிடையே உலகின் 7ம் நிலை வீரரான இங்கிலாந்தின் டிம் ஹென்மேன் 4-6, 2-6, 2-6 என்ற செட்களில் ரஷ்யாவின் நிகோலேடேவிடென்கோவிடம் அதிர்ச்சித் தோல்வி அடைந்தார்.

டேவன்போர்ட் வெற்றி:

பெண்கள் ஒற்றையர் பிரிவில் அமெரிக்காவின் லிண்ட்சே டேவன்போர்ட் 6-2, 6-4 என்ற நேர் செட்களில் செக் குடியரசின் நிக்கோல்வைடிசோவைத் தோற்கடித்து 4வது சுற்றுக்கு முன்னேறினார்.

எட்டாம் நிலை வீராங்கனையான அமெரிக்காவின் வீனஸ் வில்லியம்ஸ் 6-3, 6-0 என்ற செட்களில் இஸ்ரேலின் அன்னஸ்மாஷ்னோவாவை வீழ்த்தினார். ரஷ்யாவின் கஸ்னட்சோவா 6-3, 7-6 என்ற செட்களில் அர்ஜென்டினாவின் மரியானா டியாஸ்ஒலிவாவைத் தோற்கடித்தார்.

தசைப்பிடிப்பு காரணமாக அமெரிக்காவின் லிசா ரேமண்ட் போட்டியில் இருந்து விலகியதால் இவரை எதிர்த்து ஆடவிருந்த ரஷ்யாவின்அனஸ்டாசியா மிஸ்கினா 4வது சுற்றுக்கு முன்னேறினார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X