For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தஞ்சையில் தீட்டப்பட்ட கொலைச் சதி: அப்ரூவர் ஆன ரவி சுப்பிரமணியத்தின் வாக்குமூலம்- முழு விவரம்!

By Staff
Google Oneindia Tamil News

காஞ்சி:

Ravi மகாமகத்தையடுத்து தஞ்சாவூரில் வைத்துத் தான் சங்கரராமனைக் கொல்ல முதல் முறையாக ஜெயேந்திரர் சதித் திட்டம் தீட்டியதாக ரவிசுப்பிரமணியம் கூறியுள்ளார்.

சங்கரராமன் கொலை வழக்கில் அப்ரூவராக மாறியுள்ள ரவி சுப்பிரமணியம் தந்துள்ள 20 பக்க வாக்குமூலத்தின் முழு விவரம்:

கடந்த ஆண்டு மார்ச் மாதம் கும்பகோணத்தில் மகாமகம் நடந்தது. அதில் கலந்து கொண்டுவிட்டு சங்கராச்சாரியார் தஞ்சாவூரில்முகாமிட்டிருந்தார். அப்போது என்னை தஞ்சைக்கு வரச் சொன்னார் ஜெயேந்திரர். நானும் அவரைச் சந்தித்துப் பேசினேன்.

அங்கு வைத்து தான் சங்கரராமனைக் கொல்ல சதித் திட்டம் தீட்டப்பட்டது. இந்தக் கொலையைச் செய்ய கதிரவனுக்கு பணம் தரச் சொல்லிஎனக்கு ஜெயேந்திரர் உத்தரவிட்டார். அதை ஒப்புக் கொண்டு நான் சென்னை திரும்பி வந்தேன்.

ஜெயேந்திரர் சொன்னது போல கதிரவன் என் வீட்டுக்கு வந்தான். அப்போது சங்கரராமனைக் கொல்ல அவனிடம் பணம் தந்தேன்.

இதன் பிறகு கொலை குறித்து பல முறை சதித் திட்டம் தீட்டப்பட்டது. ஒரு முறை காஞ்சி மடத்துக்கு என்னை வரச் சொன்னார் ஜெயேந்திரர்.செப்டம்பர் 1ம் தேதி நான், அப்பு மற்றும் கதிரவன் மூவரும் மடத்துக்குச் சென்றோம்.

இரவு 7 மணிக்கு ஜெயேந்திரரை அவரது தனி அறையில் சந்தித்துப் பேசினோம். அப்போது ஒரு கடிதத்தை எடுத்து எங்களிடம் காட்டினார்.அது இறுதி எச்சரிக்கை என்ற பெயரில் சங்கரராமன் எழுதிய கடிதமாகும்.

இனி இப்படிப்பட்ட கடிதம் வரக் கூடாது. தேவையானதைச் செய்யுங்கள் என்று ஜெயேந்திரர் கூறினார். அப்போது சுந்தரேச அய்யரும்உடனிருந்தார். கடிதத்தை வாங்கிக் கொண்டு விஜயேந்திரைரயும் சந்தித்தோம். அவரது உத்தரவுப்படி ரூ. 50 லட்சம் எங்களுக்குத்தரப்பட்டது.

எல்லாம் கச்சிதமாக நடக்க வேண்டும், வெளியில் எதுவும் கசிந்துவிடக் கூடாது என்று ஜெயேந்திரரும் விஜயேந்திரரும் எங்களிடம்சொல்லி அனுப்பினார்கள்.

செப்டம்பர் 2ம் தேதி (கொலை நடப்பதற்கு முதல் நாள்) கதிரவனுடன் அப்புவின் காரில் நான் காஞ்சிபுரத்துக்குச் சென்றேன். வழியில்குண்டாக, கருப்பாக ஒருவனை (ரஜினி என்ற சின்னா) காரில் ஏற்றிக் கொண்டார் கதிரவன். சங்கரராமன் வீட்டை அந்த நபரிடம்அடையாளம் காட்டினோம். அவனிடம் ரூ. 10,000ம் தந்த கதிரவன், அவனை அங்கேயே இறக்கிவிட்டார்.

மறுநாள் என்னை ஓட்டலுக்கு வரவழைத்தார் அப்பு. அங்கு கதிரவனும் இருந்தான். அப்போது சங்கரராமனை திட்டமிட்டபடிதீர்த்துக்கட்டிவிட்டதாக இருவரிடம் என்னிடம் கூறினார்கள்.

இந்தக் கொலைக்காக ஜெயேந்திரர் உத்தரவுப்படி நான் அப்புவிடம் ரூ. 10 லட்சம் தந்தேன். இதைப் பெற்றுக் கொண்டதற்கு ஒரு ரசீதும்தந்தார் அப்பு. மறு நாள் நான் விமானத்தில் மும்பை சென்றுவிட்டேன். இந்த விமான டிக்கெட் வாங்கிக் கொடுத்து என்னை அனுப்பிவைத்தது கதிரவன் தான்.

போலீஸ் என்னை மும்பையில் தேடி வந்ததை அறிந்து குருவாரூக்குப் போனேன். அங்கு வைதது என்னை போலீசார் பிடித்துவிட்டனர்.

இவ்வாறு ரவி சுப்பிரமணியம் கூறியுள்ளார்.

மேலும் ஜெயேந்திரருக்கும் பெண்களுக்கும் உள்ள தொடர்பு, இதனால் ஏற்பட்ட பிரச்சனைகள், தனது நண்பர் மனைவியிடம் ஜெயேந்திரர்தவறாக நடந்தது, அதை தான் தீர்த்து வைத்தது என பல ஆபாச விவகாரங்களையும் எடுத்துக் கூறியுள்ளார் ரவி.

ஆடிட்டர் வழக்கிலும் அப்ரூவர்:

இதற்கிடையே ஆடிட்டர் ராதாகிருஷ்ணன் தாக்கப்பட்ட வழக்கிலும் ரவி சுப்பிரமணியம் அப்ரூவர் ஆகிறார்.

ராதாகிருஷ்ணன் தாக்கப்பட்ட வழக்கில் இரண்டாவது குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ள ரவி, இதிலும் அப்ரூவர் ஆகிவிட ஒப்புக்கொண்டுள்ளார்.

நாளை அவர் அப்ரூவர் வாக்குமூலம் அளிக்கலாம் என்று தெரிகிறது. ஏற்கனவே இவர் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் தான்சங்கரராமன் கொலை வழக்கில் விஜயேந்திரர் கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

காவல் நீடிப்பு:

இதற்கிடையே சங்கரராமன் கொலை வழக்கில் ரவியின் நீதிமன்றக் காவல் பிப்ரவரி 3ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X