For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பழைய பணிக்கு திரும்பும் அதிரடிப்படை வீரர்கள்

By Staff
Google Oneindia Tamil News

சத்தியமங்கலம்:

வீரப்பன் வேட்டையில் ஈடுபட்டிருந்த தமிழக சிறப்பு அதிரடிப் படை வீரர்களில் 511 பேர் மீண்டும் தங்களது பழையபணிகளுக்கு அனுப்பப்பட்டுள்ள. இதற்கான உத்தரவுகள் அதிரடிப்படை வீரர்களிடம் வழங்கப்பட்டுள்ளது.

சந்தனக் கடத்தல் வீரப்பனும் அவனது கூட்டாளிகளும் கட்த அக்டோபர் மாதம் சுட்டு வீழ்த்தப்பட்டனர். இதையடுத்து 750 பேர்கொண்ட அதிரடிப்படையைக் கலைக்க தமிழக அரசு முடிவு செய்தது.

239 வீரர்களைக் கொண்ட ஒரு படையை மட்டும் தொடர்ந்து செயல்படுத்தவும், மீதள்ள 511 வீரர்களை ஏற்கனவே அவர்கள் பணியாற்றி வந்த காவல் நிலையங்கள், ஆயுதப்படை, போலீஸ் பயிற்சிப் பள்ளிஆகியற்றிற்குத் திருப்பி அனுப்ப தமிழக அரசு உத்தரவிட்டது.

சத்தியமங்கலம் அதிரடிப்படை முகாமில் டிஜிபி விஜயக்குமார் முன்னிலையில் எஸ்.பி. செந்தாமரைக்கண்ணன் மாறுதலுக்கானஉத்தரவுகளை வீரர்களிடம் வழங்கி அனுப்பி வைத்தார்.

அப்போது செந்தாமரைக்கண்ணன் செய்தியாளர்களிடம் பேசுகையில்,

அதிரடிப் படையினரின் நோக்கம் நிறைவேறி விட்டது. அவர்களுக்குக் கொடுக்கப்பட்ட வேலையை வெற்றிகரமாக முடித்துவிட்டனர். இதற்கான அரசு வெகுமதி, பதவி உயர்வு ஆகியவற்றுடன் பழைய காவல் நிலையங்கள்,ஆயுதப்படை, பயிற்சிப் பள்ளிஆகியவற்றிற்கு மீண்டும் சென்று பணியைத் தொடரவுள்ளனர்.

239 வீரர்களைக் கொண்ட நிரந்தர அதிரடிப்படை சத்தியமங்கலத்தில் தொடர்ந்து செயல்படும். இந்த 239 பேரும் காட்டுக்குள்தனிப் பயிற்சி பெற்றவர்களாவர். பவானிசாகரில் 80 ஏக்கர் நிலத்தை அரசு ஒதுக்கவுள்ளது. இங்கு நிரந்த அதிரடிப்படை முகாம்அமையும். இதற்கான உத்தரவு விரைவில் பிறப்பிக்கப்படும்.

சின்னதண்டா, தட்டக்கரை, திம்பம், அத்திக்கடவு ஆகிய இடங்களில் உள்ள முகாம்கள் மூடப்படும் என்றார்செந்தாமரைக்கண்ணன்.

வீரப்பன் தேடுதல் வேட்டை கடந்த 1985ம் ஆண்டு போலீஸாரால் முதல் முறையாக தொடங்கப்பட்டது. இது பலனளிக்காததால்,1987-90 வரை புலனாய்வுப் பிரிவினர் தனிப்படை அமைத்து வீரப்பனைத் தேடினர். அதன் பின்னர் டி.எஸ்.பி.கோபாலகிருஷ்ணன் தலைமையில் ஜங்கிள் பேட்ரல் என்ற வன போலீஸ் படை 1990-93 வரை வீரப்பன் தேடுதல் வேட்டையில்இறங்கியது.

1993ல் தான் சிறப்பு அதிரடிப்படை உருவானது. காட்டுக்குள் பல்வேறு இடங்களில் அதிரடிப்படை முகாம் அமைத்து வீரப்பனுக்குநெருக்குதல் கொடுத்து, கடுமையான முயற்சிகளுக்குப் பிறகு ஒரு வழியாக கடந்த அக்டோபர் 18ம் தேதி வீரப்பனை வீழ்த்தினர்இந்தப் படையினர்.

தொலைந்த சிக்னல் லைட்:

இதற்கிடையே வீரப்பன் தேடுதல் வேட்டையின்போது அதி நவீன சிக்னல் டார்ச் லைட் தொலைந்து போய் விட்டதாகபெண்ணாகரம் காவல் நிலையத்தில் அதிரடிப்படை சார்பில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.

அதிரடிப்படை இன்ஸ்பெக்டர் வெள்ளத்துரை பெண்ணாகரம் காவல் நிலையத்தில் கொடுத்துள்ள புகாரில்,

கடந்த அக்டோபர் 10ம் தேதி பெண்ணாகரத்தை அடுத்துள்ள முத்துப்பட்டி வனப பகுதியில் தேடுதல் வேட்டைக்காகஅதிரடிப்படையினர் சென்றனர். அப்போது புரொஜெக்டர் பைரோ டெக்னிக் பீல்ட் சிக்னல் லைட் எனப்படும் அதி நவீன டார்ச்லைட் தொலைந்து போய் விட்டது.

விலை உயர்ந்த இந்த சிக்னல் டார்ச் லைட்டைக் கண்டுபிடித்துத் தர வேண்டும் என்று கூறியுள்ளார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X