For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சங்கர மடம் கோவிலே அல்ல; அது ஒரு குட்டி காலனி- நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

Kanchi Muttகாஞ்சி சங்கரமடம் வழிபாட்டுத் தலமே அல்ல என்று உயர் நீதிமன்றத்திடம் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

மடத்துக்குள் போலீசார் ஆயுதங்களுடன் நுழைந்து விஜயேந்திரரை கைது செய்தது, போலீஸ் காவலில் ஜெயேந்திரர் தந்த வாக்குமூலத்தைடிவிக்களுக்கு வழங்கியது ஆகியவை குறித்து மனித உரிமை ஆணையம் அனுப்பிய நோட்டீசுக்கு பதில் தந்து தமிழக காவல்துறை சார்பில்காஞ்சி தனிப் படை கூடுதல் எஸ்.பி சக்திவேல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு விவரம்:

விஜயேந்திரரை நாங்கள் கைது செய்யச் சென்றபோது, விஜயேந்திரர் ஓடிப் போய் மகா பெரியவரின் சமாதி முன் அமர்ந்து பஜனை பாடத்தொடங்கிவிட்டார். விரும்பத்தகாத சம்பவம் ஏதும் நடந்துவிடக் கூடாது என்பதற்காக அவரது இந்தச் செயலை போலீசார் அமைதியாகபார்த்துக் கொண்டிருந்தனர்.

இதையடுத்து அவரைக் கைது செய்வதற்கான வாரண்டை மடத்தின் மேலாளர் பொள்ளாச்சி மகாதேவனிடம் தந்தோம்.

இதைப் பார்த்த விஜயேந்திரர், போலீஸ் படையைப் பார்த்தபடியே தனக்கு எதிரே இருந்த தூணுக்கு மலர் தூவி பூஜை செய்ய ஆரம்பித்தார்.பின்னர் திடீரென கதவையும் பூட்டினார்கள்.

நாங்கள் அரை மணி நேரம் மிகப் பொறுமையாக காத்திருந்தோம். விஜயேந்திரரின் செயல்கள் அனைத்தும் வீடியோவிலும் பதிவுசெய்யப்பட்டன.

இதையடுத்து கதவு திறக்கப்பட்டது. வெளியே வந்த விஜயேந்திரர் நேராக தனது அறைக்குள் சென்றுவிட்டார். மீண்டும் நாங்கள்பொறுமையாக காத்திருந்தோம். பின்னர் தான் அவர் வெளியில் வந்தார்.

அவரது உடலைக் கூட தொடாமல், எந்த அவமரியாதையும் செய்யாமல் மிக மரியாதையாக அவரை அழைத்துச் சென்றோம். அப்போதுமடத்தைச் சேர்ந்தவர்கள் எங்களை கேலி செய்ததுடன், தகாத வார்த்தைகளால் திட்டினர்.

இந்த மடம் ஒரு வழிபாட்டுத் தலமே அல்ல. இந்த மடத்தில் ஜெயேந்திரர், விஜயேந்திரர், ரகு ஆகியோர் நிரந்தரமாகத் தங்கியுள்ளனர்.மடத்தின் ஊழியர்கள், குடும்பத்தினர் அங்கு வசித்து வருகின்றனர்.

மொத்தம் 25 குடும்பங்கள் அங்கு வசிக்கின்றன. மடத்துக்குள் சமையல் அறைகள், கழிப்பறைகள், படுக்கை அறைகள் எல்லாம் உள்ளன.பொது வழிபாட்டுத் தலத்தில் படுக்கை அறை எல்லாம் இருக்காது.

இதனால் இந்த மடத்தை வழிபாட்டுத் தலமாகக் குறிப்பிடுவதே தவறானது. சங்கர மடத்தில் டிவிக்கள், கேபிள் டிவி இணைப்புகள் எல்லாம்உள்ளன. உண்மையில் இது ஒரு குட்டி காலனி தான்.

மடத்தை வழிபாட்டுத் தலமாக மாற்றும் எந்த தெய்வத்தின் உருவமும் அங்கு இல்லை. பொது மக்கள் மடத்துக்குள் நுழைய முடியாது.குறிப்பிட்ட பிரிவு மக்கள் (பிராமணர்கள) மட்டுமே அங்கு நுழைய முடியும்.

மடத்தில் பஜனை மட்டுமே செய்யப்படுகிறது. மற்றபடி கோவில்களில் நடக்கும் உஷ பூஜை, உச்சி பூஜை, சசாயரட்சை பூஜை அல்லதுஅர்த்தஜாம பூஜை போன்ற எந்த பூஜையும் நடத்தப்படுவதில்லை.

மதரீதியாகக் கூறுவதானால் கூட மடம் கோவிலே அல்ல. பூஜைக்கு அங்கு கருவறையும் இல்லை, கடவுள் சிலையும் இல்லை.

மகா பெரியவரின் உடல் மடத்துக்குள் புதைக்கப்பட்டுள்ளது. எந்த இந்துக் கோவிலிலும் மனித உடலைப் புதைக்க அனுமதிப்பதில்லை.கோவில்களை இடுகாடாக்கவும் அனுமதிக்கப்படுவதில்லை. இதிலிருந்தே இந்த மடம் வழிபாட்டுத் தலமே அல்லது என்பது புலனாகும்.

ஆனாலும் விஜயேந்திரரைக் கைது செய்யும்போது மதரீதியிலான அனைத்து உணர்வுகளுக்கும் மதிப்பு கொடுத்தே போலீஸ்செயல்பட்டது. பஜனை செய்யும்போதோ அல்லது அவர் சமாதி அறைக்குள் நுழைந்தபோதோ கைது செய்யப்படவில்லை.

மடம் கோவிலே அல்ல என்பதால் அவர் பூஜை செய்து கொண்டிருந்தபோது போலீசார் அவரைக் கைது செய்து கொண்டிருந்தார் என்றகேள்விக்கே இடமில்லை.

இதனால் அவரைக் கைது செய்தபோது எந்த விதியும் மீறப்படவில்லை.

இவ்வாறு கூடுதல் எஸ்பி சக்திவேலின் பதில் மனுவில் கூறப்பட்டுள்ளது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X