For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அமெரிக்க போர் விமானம் வாங்கும் இலங்கை

By Staff
Google Oneindia Tamil News

கொழும்பு:

அமெரிக்காவிடம் இருந்து போர் விமானத்தை வாங்க இலங்கை அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

இது குறித்து இங்கிலாந்தில் இருந்து வெளியாகும் பாதுகாப்பு இதழ் வெளியிட்டுள்ள செய்தி:

இலங்கை விமானப் படைக்குச் சொந்தமான இரண்டு சி-130கே ரக விமானங்கள் கடந்த 2 மாதங்களாக பழுதடைந்துள்ளன. அவற்றைசரிபார்க்க விமான உதிரி பாகங்களை அனுப்புமாறு அமெரிக்காவிடம் இலங்கை விமானப் படை கமாண்டர் டொனால்ட் பெரராகேட்டுள்ளார்.

அதோடு அமெரிக்காவில் தேவைக்கதிமாக கையிருப்பில் இருக்கும் விமானங்களில் குறைந்தது ஒன்றைத் தருமாறும் கேட்டுள்ளார். அவரதுவேண்டுகோளையடுத்து விமான உதிரிப் பாகங்களை விரைவில் இலங்கைக்கு அனுப்ப அமெரிக்கா நடவடிக்கை எடுத்துள்ளது.

அதேபோல் சி-130 ரக விமானம் ஒன்றை இலவசமாகத் தரவும் அமெரிக்கா முன்வந்துள்ளதாகத் தெரிகிறது. பெல் 412 மற்றும் மில் மி-17ரக போக்குவரத்து ஹெலிகாப்டர்களைக் கூடுதலாக வாங்க வேண்டும் என்று இலங்கை அரசிடம் அந்நாட்டு விமானப்படை கோரிக்கைவிடுத்துள்ளது.

அதன்படி ஒரு ஹெலிகாப்டரை வாங்குவதற்கான நிதி இந்த வருடம் அமெரிக்காவிடம் வழங்கப்படவிருக்கிறது. இதற்கிடையே பெல்விமான நிறுவனம் தனது 412 ரக ஹெலிகாப்டர்களை இலங்கைக்கு விற்க முயற்சி எடுத்து வருகிறது என்று கூறப்பட்டுள்ளது.

நிவாரணப் பணிகளில் சுணக்கம்:

இதற்கிடையே இலங்கையில் 70 சதவீத மக்களுக்கு இன்னும் நிவாரண உதவி அளிக்கப்படவில்லை என்று அத்தியாவசிய சேவைகள்ஆணையர் திலக் ரணவீரஜா கூறினார்.

நிருபர்களிடம் அவர் கூறியதாவது:

இலங்கை அரசின் கட்டுப்பாட்டின் கீழ் இருக்கும் பகுதிகளில் சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களில் (9,60,000 பேர்) 30 சதவீத மக்களுக்குமட்டுமே நிவாரண உதவிகள் சென்றடைந்துள்ளன. 70 சதவீத மக்கள் நிவாரண உதவியை இன்னும் பெறவில்லை.

மீதியுள்ள 70 சதவீதம் பேருக்கும் வருகிற 7ம் தேதிக்குள் நிவாரண உதவிகளை அளிக்கும்படி அதிபர் சந்திரிகா குமாரதுங்காஉத்தரவிட்டுள்ளார். நிவாரணப் பணிகளில் தேக்கம் இருப்பது உண்மைதான். நிவாரணப் பொருட்களை அரசியல் கட்சிகளும்,அதிகாரிகளும் கடத்துவதாக புகார்கள் வந்த வண்ணம் உள்ளன.

பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் அளிக்கவும், அடுத்த மாதங்களுக்கு ரேஷன் பொருட்கள் அளிக்கவும் 10.3 பில்லியன் டாலர்கள்தேவைப்படுகிறது. இவ்வளவு பெரிய தொகையைக் கையாளும்போது, சில இடங்களில் ஊழல் நடக்க வாய்ப்பிருக்கிறது. அதை நான்மறைக்க முயற்சிக்கவில்லை என்றார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X