For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மடத்துக்கு ஆதரவாக ரவியை வளைக்க முயன்ற 2 போலீஸ் அதிகாரிகள் டிரான்ஸ்பர்

By Staff
Google Oneindia Tamil News

காஞ்சிபுரம்:

Ravi Subramaniamசங்கரராமன் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு அப்ரூவராகிவிட்ட ரவி சுப்பிரமணியத்தை சங்கர மடத்துக்கு ஆதரவாகத் திருப்பமுயன்ற இரு போலீஸ் அதிகாரிகள் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

ஜெயேந்திரருக்கு எதிராக அப்ரூவராக மாறிவிட்ட ரவியை போலீசார் மிக நன்றாக நடத்தி வருகின்றனர். வழக்கில் இருந்துவிடுவிக்கப்பட்டுவிட்ட ரவியால் எளிதில் ஜாமீனில் வெளியே போக முடியும்.

ஆனால், அவர் வெளியில் போனால் அவரது உயிருக்கு ஆபத்து வரும் என போலீசார் கருதுகின்றனர். இதனால் தான் அவர் தொடர்ந்துசிறையில் பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளார்.

இந் நிலையில் தன்னை சங்கர மடத்தின் இரு பெண் வழக்கறிஞர்கள் சிறையில் வந்து சந்தித்து மிரட்டியதாக ரவி சுப்பிரமணியம்நீதிமன்றத்தில் புகார் கூறியுள்ளார்.

மேலும் ஒரு டிஎஸ்பியும், ஒரு சப் இன்ஸ்பெக்டரும் யூனிபார்முடன் காஞ்சி கிளைச் சிறைக்குள் நுழைந்து ரவியிடம், ஒரு வெள்ளைைத்தாளை நீட்டி அதில் கையெழுத்துப் போடுமாறு கூறியுள்ளனர்.

எஸ்பி பிரேகுமார் தான் இதில் கையெழுத்து வாங்கி வரச் சொன்னார் என்று இருவரும் கூற, சந்தேகம் கொண்ட ரவி கையெழுத்துப் போடமறுத்துள்ளார்.

இதன் பின்னரே அந்த இரு அதிகாரிகளும் மடத்தின் சார்பில் ரவியிடம் வந்தது தெரியவந்துள்ளது. இது குறித்து பிரேம்குமாரிடம் ரவி புகார்தந்ததையடுத்து இருவரும் அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

டிஎஸ்பி புதுக்கோட்டைக்கும், எஸ்ஐ நெல்லைக்கும் தூக்கி அடிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் மீது விரைவில் துறை சார்ந்த விசாரணையும்தொடங்கும் என்று தெரிகிறது.

மருத்துவமனையில் ரவி சுப்பிரமணியம்:

முன்னதாக இன்று காலை ரவி சுப்பிரமணியத்துக்கு திடீரென உடல் நலக் குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அவர் காஞ்சிபுரம் அரசுமருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.

முதுகுவலியால் அவதிப்பட்டு வரும் ரவி காய்ச்சலாலும் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

இதையடுத்து மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட ரவிக்கு சிகிச்சை அளிக்கப்பட்ட பின்னர் மீண்டும் காஞ்சி கிளைச் சிறையில்அடைக்கப்பட்டார்.

விஜயேந்திரர்- அசோக் சிங்கால் சந்திப்பு:

இதற்கிடையே ஜாமீனில் வெளியே வந்துள்ள விஜயேந்திரரை விஸ்வ இந்து பரிஷத் தலைவர் அசோக் சிங்கல் சந்தித்து பேசினார்.

சன்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் காமாட்சியம்மன் கோயில் வளாகத்தில் உள்ள பங்களாவில் தங்கியுள்ள விஜயேந்திரரை சிங்கல்சந்தித்தபோது அவர் மெளன விரதத்தில் இருந்தார்.

இச் சந்திப்புக்குப் பின் சிங்கல் நிருபர்களிடம் பேசுகையில், இளையவர் உற்சாகமாக இருக்கிறார். அரசுக்கு எதிராக கலவையில் இருந்துநாங்கள் பிரசாரப் பயணம் துவங்க இருக்கிறோம். இந்த அரசு, சமுதாய விரோத அரசு என்பது நிரூபணமாகிவிட்டது.

நீதிமன்றத்தின் பணியை காவல்துறை செய்கிறது. இது அரசியல் சாசனத்திற்கு எதிரானது என்றார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X