ஹரியானாவில் காங். ஆட்சி: பிகாரில் லாலுவுக்கு சரிவு !

Subscribe to Oneindia Tamil

பாட்னா:

பிகார், ஹரியானா, ஜார்க்கண்ட் மாநிலங்களில் இன்று காலை வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. தற்போதையநிலவரப்படி ஹரியானாவில் காங்கிரஸ் கட்சி ஆட்சியைப் பிடிப்பது உறுதியாகி விட்டது.

பிகாரில் லாலு கட்சி, பா.ஜ.க. கூட்டணியும், ஜார்க்கண்டில் பா.ஜ.க. கூட்டணியும், காங்கிரசும் சமநிலையில் உள்ளன.

பிகாரில் 243 தொகுதிகளும், ஹரியானாவில் 90 தொகுதிகளும், ஜார்க்கண்டில் 81 தொகுதிகளும் உள்ளன. இதில்பிகார், ஜார்க்கண்ட் மாநிலங்களில் கடந்த 3, 15, 23 ஆகிய தேதிகளில் 3 கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது.ஹரியானா மாநிலத்தில் 3-ந் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது.

மூன்று மாநிலங்களிலும் இன்று காலை 8 மணியளவில் ஓட்டு எண்ணிக்கை தொடங்கியது. தற்போதையநிலவரப்படி பிகாரில் 80 தொகுதிகளில் லாலு கட்சி முன்னிலையில் உள்ளது. பா.ஜ.க. கூட்டணி 82 தொகுதிகளில்முன்னிலையில் உள்ளது. 3-வது இடத்தில் ராம் விலாஸ் பாஸ்வான் கட்சி 31 தொகுதிகளில் முன்னிலையில்உள்ளது. சுயேட்சைகள் 19 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளனர்.

இதே நிலை தொடரும்பட்சத்தில் பாஸ்வான் கட்சி ஆதரவு இல்லாமல் யாராலும் ஆட்சியமைக்க முடியாது என்றேகருதப்படுகிறது.

ஹரியானாவில் மொத்தமுள்ள 90 தொகுதிகளில் காங்கிரஸ் 67 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. எனவேஇங்கு காங்கிரஸ் ஆட்சி அமைப்பது உறுதியாகி விட்டது. முன்னாள் முதல்வர் சவுதாலா கட்சி 14 தொகுதிகளில்மட்டுமே முன்னிலையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஜார்க்கண்ட் மாநிலத்தில் காங்கிரசும், பாஜகவும் சமநிலையில் உள்ளன. இங்கு மொத்தமுள்ள 81 தொகுதிகளில் 25தொகுதிகளில் காங்கிரஸ் கூட்டணியும், 34 தொகுதிகளில் பாஜக கூட்டணியும் முன்னிலையில் உள்ளன. எனவேஇங்கும் தொங்கு சட்டசபை அமையவே வாய்ப்புள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+