For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பாலாஜி அபார பந்து வீச்சு: சுருண்டது பாக் அணி

By Staff
Google Oneindia Tamil News

மொகாலி:

இந்தியா-பாகிஸ்தான் இடையே இன்று தொடங்கிய மொகாலி கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் முதலில்களமிறங்கிய பாகிஸ்தான் 312 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. தமிழக வீரர் பாலாஜி சிறப்பாகபந்து வீசி 74 ரன்கள் கொடுத்து 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

இந்திய மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையே முதல் கிரிக்கெட் டெஸ்ட் போட்டி பஞ்சாப் மாநிலம்மொகாலியில் இன்று தொடங்கியது. "டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் கங்குலி, பாகிஸ்தானை பேட்டிங்செய்யுமாறு அழைத்தார்.

இதைத் தொடர்ந்து பாகிஸ்தான் தொடக்க ஆட்டக்காரர்கள் பேட்டிங்செய்ய களத்தில் இறங்கினர். இந்தியஅணியில் சுழற் பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங், வேகப்பந்து வீச்சாளர் நெஹ்ரா, அதிரடி பேட்ஸ்மேன் யுவராஜ் சிங்ஆகியோர் நீக்கப்பட்டனர்.

பாலாஜி, ஜாகிர் கான், இர்பான் பதான் ஆகிய 3 வேகப்பந்து வீச்சாளர்கள் அணியில் இடம்பிடித்துள்ளனர்.

வீரர்கள் விவரம்: கங்குலி (கேப்டன்), ராகுல் திராவிட் (துணை கேப்டன்), டெண்டுல்கர், ஷேவாக், கவுதம் காம்பிர்,வி.வி.எஸ்.லட்சுமண், தினேஷ் கார்த்திக், அனில் கும்ப்ளே, ஜாகிர் கான், பாலாஜி, இர்பான் பதான்.

பாகிஸ்தான் அணி வீரர்கள்: இன்சமாம் உல் ஹக் (கேப்டன்), சல்மான் பட், தவுபீக் உமர், யூனிஸ் கான், யூசுப்யுகானா, ஆசிப் கமால், கம்ரான் அக்மல், முகமது சமி, ஹசன் ரானா, டேனிஷ் கனேரியா, அப்துல் ரசாக்.

86.4 ஓவர்கள் முடிவில் பாகிஸ்தான் அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 312 ரன்கள் எடுத்துள்ளது.சல்மான் பட் 5 ரன்களிலும்,யூனிஸ் கான் 9 ரன்களிலும், தவுபீக் உமர் 44 ரன்களிலும்,யூசுப் யுகானா 6 ரன்களிலும்,இன்சமாம் உல் ஹக் 57 ரன்களிலும், அப்துர் ரசாக் 26 ரன்களிலும், அக்மல் 15 ரன்களிலும், முகமது சமி 20ரன்களிலும்,ஆசிம் கமால் 91 ரன்களிலும், ஹசன் ரானா 11 ரன்களிலும்,ஆட்டமிழந்தனர். கனேரியா 7 ரன்களுடன்ஆட்டமிழக்காமல் உள்ளார்.

பாலாஜி சிறப்பாக பந்து வீசி 74 ரன்கள் கொடுத்து 5 விக்கெட்டுகளை கைப்பற்றி உள்ளார். இர்பான் பதான்,கும்ப்ளே ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும், ஜாகிர் கான் ஒரு விக்கெட்டையும் கைப்பற்றியுள்ளனர்.

கிரிக்கெட்டை எதிர்த்த மனு தள்ளுபடி:

இதற்கிடையே இந்தியா, பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டித் தொடைர தள்ளி வைக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட பொது நலமனு இன்று தள்ளுபடி செய்யப்பட்டது.

ராதாபுரம் சுயேச்சை எம்.எல்.ஏ அப்பாவு இந்த மனுவைத் தாக்கல் செய்தார். அதில், பிளஸ் டூ தேர்வுகள் நடக்கும்போது கிரிக்கெட் போட்டிகளைநடத்தினால், மாணவர்களின் படிப்பு பாதிக்கப்படும். எனவே போட்டிகளைத் தள்ளி வைக்க வேண்டும் என்று கோரியிருந்தார்.

இந்த மனுவை இன்று நீதிபதிகள் கற்பகவிநாயகம், நாகப்பன் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் விசாரித்தது. பின்னர், பிளஸ் டூ தேர்வுத் தேதிகள் ஏற்கனவேஅறிவிக்கப்பட்டு தொடங்கி விட்டது. பத்தாவது வகுப்புத் தேர்வுகளுக்கான தேதிகளும் ஏற்கனவே அறிவிக்கப்பட்டு விட்டன.

அதேபோல, கிரிக்கெட் தொடருக்கான தேதியும் ஏற்கனவே அறிவிக்கப்பட்டு விட்டது. முதல் போட்டியும் தொடங்கி விட்டது. எனவே இந் நிலையில்இது காலம் தாழ்ந்து தொடரப்பட்ட வழக்காகவே கருத முடியும். எனவே இந்த வழக்கைத் தள்ளுபடி செய்கிறோம் என நீதிபதிகள் அறிவித்தனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X