• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஆபாசப் படம்: மதுரையில் மாணவிகள் ஆர்ப்பாட்டம்

By Staff
|

மதுரை:

மதுரையில் ஆபாச படத்தை திரையிட்ட தியேட்டரின் முன் இந்திய மாணவர் சங்கத்தைச் சேர்ந்த மாணவிகள்மற்றும் மாணவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தி, போஸ்டர்களை தீ வைத்துக் கொளுத்தினர்.

மதுரை பெரியார் பேருந்து நிலையம் மற்றும் ரயில் நிலையம் அருகே உள்ளது தங்க ரீகல் திரையரங்கம்.பெரும்பாலும் ஆபாச ஆங்கிலப் படங்களே இங்கு திரையிடப்படுவது வழக்கம்.

இன்று மகளிர் தினத்தையொட்டி இந்திய மாணவர் சங்கத்தைச் சேர்ந்த மாணவியர் மற்றும் மாணவர்கள் ரீகல்திரையரங்கம் முன் குழுமினர். ஆபாசப் படத்தை திரையிடாதே, பெண்களை கேவலமாக சித்தரிக்கும் ஆபாசசுவரொட்டிகளை ஒட்டாதே என்று கூறி அவர்கள் கோஷமிட்டனர்.

திரையரங்கில் ஒட்டப்பட்டிருந்த ஆபாச சுவரொட்டிகளை அப்புறப்படுத்துமாறு அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.இதையடுத்து திரையரங்க ஊழியர்கள் சம்பிரதாயத்துக்கு ஒரு ஓரமாக கொஞ்சமே கொஞ்சமாக சுவரொட்டிகளைகிழித்தனர்.

இதனால் கடுப்படைந்த மாணவிகள் அங்கு ஒட்டப்பட்டிருந்த சுவரொட்டிகளை தாங்களே கிழித்து எறிந்தனர்.பின்னர் போஸ்டர்களுக்கு தீ வைக்க முயன்றனர்.

அப்போது அங்கு வந்த போலீசார் மாணவ, மாணவிகளைத் தடுத்து அனுமதியில்லாமல் போராட்டம் நடத்தியதாகக்கூறி கைது செய்து வேனில் ஏற்றினர். இதனால் மாணவர்களுக்கும், போலீஸாருக்கும் இடையே பெரும் தள்ளுள்ளுஏற்பட்டது.

இந்த ஆர்ப்பாட்டம் மற்றும் தீவைப்பு காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

எல்லா ஊர்களையும் போலவே மதுரையிலும் ரீகல், மது தியேட்டர், பழனி ஆறுமுகா போன்ற தியேட்டர்கள் சீன்படங்கள் எனப்படும் புளு பிலிம் பிட் படங்களையே ஓட்டி வருகின்றன.

இதெல்லாம் போலீசுக்கு தெரியவே தெரியாதாம்..

Mail this to a friend  Post your feedback  Print this page 

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more