For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

"மிஸ் இந்தியாவாக புனே அழகி அம்ரிதா தேர்வு

By Staff
Google Oneindia Tamil News

மும்பை:

பெமினா மிஸ் இந்தியா யுனிவர்ஸ் அம்ரிதா (நடுவில்). போட்டியில் மூன்றாவது இடம் பிடித்த நிகரிகா (இடது), இரண்டாவதுஇடம் பிடித்த சிந்தூரா (வலது)

மும்பையில் நடந்த மிஸ் இந்தியா-2005 போட்டியில் புனேவைச் சேர்ந்த 22 வயதான அம்ரிதா "மிஸ் இந்தியாவாகதேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் இந்த ஆண்டுக்கான மிஸ் யுனிவர்ஸ் போட்டியில் இந்தியாவின் சார்பில் பங்கேற்பார்.

Miss India Amritha
இந்த ஆண்டுக்கான அழகிப் போட்டியின் இறுதிச் சுற்றுக்கு 23 பேர் தேர்வு செய்யப்பட்டிருந்தனர். இதில் சென்னையைச் சேர்ந்தஷம்ஷாத்தும் இடம் பெற்றிருந்தார்.ஞணூ>
இறுதிப் போட்டி நேற்றிரவு மும்பை எம்.எம்.ஆர்.டி.ஏ. மைதானத்தில் நடைபெற்றது. இதைக் காண ஆயிரக்கணக்கானோர்குவிந்திருந்தனர்.

போட்டியின் நடுவர்களான நடிகர் சுனில் ஷெட்டி, நடிகைகள் பூஜா பேடி, கரீனா கபூர் உட்பட 8 பேர் இருந்தனர். பரபரப்பாகநடந்த இந்தப் போட்டியில் "மிஸ் இந்தியா- யுனிவர்ஸாக புனேவைச் சேர்ந்த 22 வயதான அம்ரிதா தாப்பர்தேர்ந்தெடுக்கப்பட்டார்.

Sindura
ஆந்திராவைச் சேர்ந்த சிந்தூரா 2வது இடத்தைப் பிடித்தார். மாடலிங் கலையில் டிப்ளமோ பெற்ற இவர் நியூசிலாந்தில் டிவிநிகழ்ச்சி தொகுப்பாளராக உள்ளார். இந்தப் போட்டியில் இரண்டாம் இடம் பிடித்ததன் மூலம் இந்த ஆண்டுக்கான மிஸ் வோர்ல்ட்போட்டியில் பங்கேற்க சிந்தூரா தகுதி பெற்றுள்ளார்.

Niharika
3வது இடத்தை உத்தராஞ்சல் மாநிலத்தைச் சேர்ந்த நிஹரிகா சிங் பிடித்தார். மும்பையில் வசித்து வரும் இவர் பல டிவி விளம்பரநிகழ்ச்சிகளில் நடித்துள்ளார். 3வது இடம் பிடித்த இவர் இந்த ஆண்டுக்கான மிஸ் எர்த் போட்டியில் பங்கேற்கலாம்.

பேஷன் டிசைனிங்கில் முதுநிலை டிப்ளமோ பெற்ற இவரிடம் நடுவர்கள் அழகு என்றால் என்ன என்று கேட்டபோது, அழகுஎன்பது எண்ணம், செயல் இரண்டிலும் இருக்க வேண்டும் என்று பதிலளித்தார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X