For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கடலுக்குள் செல்ல வேண்டாம்: மீனவர்களுக்கு எச்சரிக்கை

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

தமிழ்நாட்டில் சுனாமி பீதி ஏற்பட்டதை தொடர்ந்து பெரும்பாலான மீனவர்கள் இன்று கடலுக்கு செல்லவில்லை. அடுத்த 3நாட்களுக்கு கடலுக்குள் செல்ல வேண்டாம் என சென்னை வானிலை ஆய்வு மையமும் மீனவர்களை எச்சரித்துள்ளது.

இந்தோனேஷியாவில் நேற்று இரவு ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தையடுத்து சுனாமி தாக்கலாம் என்ற அச்சம் பரவியது.

இதனால் கடற்கரைப் பகுதிகள் காலியாயின. இரவோடு இரவாக மூட்டை, முடிச்சுகளுடன் மக்கள் பாதுகாப்பான இடங்களைநோக்கிச் சென்றனர்.

சென்னையில் கடற்கரைப் பகுதி மக்கள் கல்யாண மண்டபங்களில் தங்க வைக்கப்பட்டனர்.தமிழகத்தில் அனைத்து மாவட்டகலெக்டர்களையும் உஷாராக இருக்கும்படி முதல்வர் ஜெயலலிதா அறிவுறுத்தினார்.

பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டவர்களுக்கு உணவு உட்பட அனைத்து வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டது.

தற்போது சுனாமி எச்சரிக்கை திரும்பப் பெறப்பட்டதை அடுத்து மக்கள் அனைவேரும் தங்களது வீடுகளுக்குத் திரும்பிக்கொண்டிருக்கின்றனர்.

ஆனாலும் கன்னியாகுமரி, கடலூர், நாகப்பட்டினம் மற்றும் சென்னை உட்பட பல மாவட்டங்களில் பெரும்பாலான மீனவர்கள்இன்று கடலுக்கு செல்லவில்லை. அவர்கள் தங்களது வீடுகளிலேயே முடங்கிக் கிடக்கின்றனர்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் மீனவர்கள் தினமும் அதிகாலை 5 மணிக்கெல்லாம் மீன் பிடிக்கச் செல்வார்கள். அவர்கள் சுனாமிபீதி காரணமாக இன்று மீன் பிடிக்க செல்லவில்லை. இதனால் இந்த மாவட்டத்தில் மீன் பிடித்தொழில் பாதிக்கப்பட்டுள்ளது.

கடந்த முறை சுனாமி ஏற்பட்ட போது தங்களது மீன்பிடி சாதனங்களை இழந்து விட்டதால் இம்முறை இப்பகுதி மீனவர்கள்முன்னெச்சரிக்கையாக தங்களது படகு, கட்டு மரங்கள் மற்றும் மீன்பிடி சாதனங்களை மேடான பகுதிகளுக்கு கொண்டுசென்றுவிட்டனர்.

இடிந்தகரை பகுதியில் நேற்று மாலை மீன் பிடிக்கச் சென்ற மீனவர்கள் இரவு 10 மணியளவில் திரும்பினார்கள். வழக்கமாக இரவுமீண்டும் மீன் பிடிக்க செல்வார்கள். ஆனால் நேற்று இரவு அவர்கள் யாரும் மீன் பிடிக்க செல்லவில்லை.

குமரி படகு போக்குவரத்து தாமதம்:

கன்னியாகுமரி கடலின் நடுவே விவேகானந்தர் பாறை, திருவள்ளுவர் சிலை ஆகியன உள்ளன. சுற்றுலாப் பயணிகள் இவற்றைபார்ப்பதற்கு கன்னியாகுமரி படகுத் துறையிலிருந்து பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகம் சார்பில் படகுகள் இயக்கப்பட்டுவருகின்றன.

தினமும் இந்தப் படகு போக்குவரத்து காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை இயக்கப்படும். சுனாமி எச்சரிக்கை காரணமாகஇன்று ஒரு மணிநேரம் தாமதமாக 8 மணிக்குத் தான் படகுப் போக்குவரத்து தொடங்கியது.

ஆனாலும் சுற்றுலாப் பயணிகள் மிகவும் குறைந்த எண்ணிக்கையிலேயே படகில் சென்றனர். கடந்த முறை சுனாமி ஏற்பட்ட போதுவிவேகானந்தர் பாறையில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் சிக்கிக் கொண்டனர். பிறகு அவர்கள் அனைவரும் அப்பகுதிமீனவர்கள் மற்றும் போலீஸாரின் உதவியுடன் காப்பாற்றப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மீனவர்களுக்கு எச்சரிக்கை:

இதற்கிடையே சென்னை வானிலை ஆய்வு மையம், தமிழக மீனவர்களுக்கு ஒரு எச்சரிக்கை விடுத்துள்ளது. அதில், சுமத்ராதீவிலும் அதைச் சுற்றியுள்ள கடல் பகுதிகளிலும் தொடர்ந்து நில அதிர்வு ஏற்பட்டபடி உள்ளது. இதனால் கடல் அலைகள்வழக்கத்தை விட உயர்ந்து எழும்பும். சீற்றமும் காணப்படலாம்.

இந்த நில அதிர்வுகள் நீடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே தமிழக மீனவர்கள் அடுத்த 2 அல்லது 3 நாட்களுக்குகடலுக்குள் மீன் பிடிக்கச் செல்வதை தவிர்க்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

நில அதிர்வுகள் அடிக்கடி ஏற்படும் காரணத்தால் இனி சுனாமி ஆபத்து வராது. ஆனால் அலையின் வேகத்தில் வழக்கத்தை விடசற்று மாறுபாடு காணப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

1 மீட்டர் உயர்ந்த அலைகள்:

இதற்கிடையே சுமத்ரா தீவில் ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக கடலில் அலைகள் உயரத் தொடங்கி இருப்பதைவிசாகப்பட்டினத்திலுள்ள புயல் எச்சரிக்கை மையம் கண்டறிந்துள்ளது. வழக்கமாக உள்ள உயரத்தை விட ஒரு மீட்டர் அளவிற்குஅலைகள் உயர்ந்திருப்பதாக அந்த மையம் கூறியுள்ளது.

ஆந்திர கடலோர பகுதிகளில் அலைகளின் உயரம் அடுத்த 12 மணி நேரத்திற்குள் 1 மீட்டர் அளவிற்கு உயரும் என்றும், எனவேமீனவர்கள் எச்சரிக்கையுடன் இருக்கவேண்டும் எனவும் விசாகப்பட்டின புயல் ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X