சென்ட்ரல்-எழும்பூர் ரயில் நிலையங்களை இணைக்க இலவச நிலம் தரும் மாநில அரசு
சென்னை:
சென்னை சென்ட்ரல்-எழும்பூர் ரயில் நிலையங்களை இணைக்க வசதியாக ரயில்வே துறைக்கு 7,300 சதுர அடி நிலத்தை மாநிலஅரசு இலவசமாக வழங்கவுள்ளது.
சட்டசபையில் போக்குவரத்து மற்றும் எரிசக்தித் துறையின் மானியக் கோரிக்கைகள் மீது நடந்த விவாதத்துக்கு பதிலளித்துஅமைச்சர் விஸ்வநாதன் பேசியதாவது:
அரசுப் போக்குவரத்துக் கழங்கள் அம்மாவின் ஆட்சியில் தொடர்ந்து லாபம் ஈட்டி வருகின்றன.
சென்னை சென்ட்ரல்-எழும்பூர் ரயில் நிலையங்களை இணைக்க ரயில்வேதுறை முடிவு செய்துள்ளது. இதற்காக 7,300 சதுர அடிநிலத்தை மாநில அரசு இலவசமாக வழங்கவுள்ளது.
அதே போல தரமணியில் இருந்து மகாபலிபுரத்துக்கு பங்கிங்காம் கால்வாய் வழியாக பறக்கும் ரயில் விட வேண்டும் எனரயில்வே துறையிடம் தமிழக அரசு கோரியுள்ளது. இத் திட்டத்துக்குத் தேவையான நிலத்தை இலவசமாகத் தர மாநில அரசு தயார்.
மதுரை விமான நிலையத்தை பன்னாட்டு விமான நிலையமாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும். அதே போல தஞ்சாவூரில் புதியவிமான நிலையம் அமைக்கவும் மத்திய அரசை மாநில அரசு அணுகியுள்ளது.
பஸ்களை தனியார்மயமாக்குவது குறித்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது. தீர்ப்புக்குப் பின் உரிய நடவடிக்கைஎடுக்கப்படும் என்றார் விஸ்வநாதன்.
போக்குவரத்துத்துறையை தனியார்மயமாக்க அதிமுக அரசு திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
-
தமிழக சட்டசபை செயலாளர் சீனிவாசன் திடீர் ராஜினாமா.. பதவியை எட்டிப்பிடித்த சாந்தி.. பின்னணி என்ன? -
சூட்டோடு சூடா.. அதையும் ஒரு கை பாத்துருவோம்! அடுத்த பரிட்சைக்கு தயாரான விஜய்! வேகமெடுக்கும் பணிகள்! -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம்












Click it and Unblock the Notifications