For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

இந்தோனேஷியாவை மீண்டும் உலுக்கிய பூகம்பம்- சுனாமி பீதியில் உறைந்து நின்ற உலகம்

By Staff
Google Oneindia Tamil News

டெல்லி:

கடந்த டிசம்பர் மாதம் ஏற்பட்டது போல இந்தோனேஷியா நேற்று இரவு பயங்கர நில நடுக்கம் ஏற்பட்டது.

மீண்டும் சுனாமி அலை பீதி ஏற்பட்டதால் தமிழகம் உள்ளிட்ட கிழக்குக் கடற்கரை பகுதி முழுவதும் மக்கள் உஷார்படுத்தப்பட்டுகடற்கரைகளில் இருந்து வெளியேற்றப்பட்டனர்.

கடந்த டிசம்பர் 26ம் தேதி இந்தோனேஷியாவின் சுமத்ரா தீவில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தால் இந்துமகா சமுத்திரத்தில்உருவான சுனாமி அலைகளால் பேரழிவு ஏற்பட்டது. இதனால் இந்தோனேஷியா, இலங்கை, இந்தியா ஆகிய நாடுகளில் 2லட்சத்திற்கும் அதிகமானோர் பலியாயினர்.

இந் நிலையில் இந்திய நேரப்படி நேற்றிரவு 9.30 மணியளவில் சுமத்ரா தீவுக்கு அருகே கடல் பகுதியில் பயங்கர பூகம்பம்ஏற்பட்டது. ரிக்டர் அளவு கோளில் இது 8.7 ஆக பதிவானது. டிசம்பர் மாதம் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் அளவு 9.0 ஆகும்.

முந்தைய நிலநடுக்கத்தின் தொடர் நடுக்கம் (ஆப்டர் ஷாக்) தான் இது என அமெரிக்க நிலவியல் ஆராய்ச்சி மையம் பிரிவுகூறியுள்ளது. இந்த நடுக்கம் சுமார் 2 நிமிடங்கள் வரை நீடித்தது.

டிசம்பர் நிலநடுக்கம் மையம் கொண்டிருந்த பாண்டா அச்சே பகுதிக்கு அருகிலேயே தான் நேற்றைய நிலநடுக்கமும் மையம்கொண்டிருந்தது. இந்த நிலநடுக்கத்தால் இந்தோனேஷியாவில் கட்டிடங்கள் இடிந்து 2,000த்திற்கும் அதிகமானோர்பலியாகிவிட்டதாகக் கூறப்படுகிறது.

ஆனால், இன்று வரை 400 உயிர்ப் பலிகள் மட்டுமே உறுதிசெய்யப்பட்டுள்ளன. ஆயிரக்கணக்கான உடல்கள் கட்டடஇடிபாடுகளில் சிக்கிக் கிடப்பதாக அஞ்சப்படுகிறது.

மேலும் மலேசியா, சிங்கப்பூர், அந்தமான் ஆகிய இடங்களிலும் இந்த நில நடுக்கம் உணரப்பட்டது.

சுமத்ரா தீவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தால் அந்தமான் மற்றும் இந்தியாவின் கிழக்குக் கடலோர பகுதிகளில் மீண்டும் சுனாமிதாக்கும் அபாயம் இருப்பதாக இந்திய வானிலை ஆராய்ச்சி மையம் நேற்று இரவு எச்சரிக்கை விடுத்தது.

மேலும் இலங்கை, தாய்லாந்து, மாலத்தீவுகள், ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளும் சுனாமி எச்சரிக்கையை வெளியிட்டன.

தமிழ்நாட்டில் சென்னை, கன்னியாகுமரி, கடலூர், நாகப்பட்டினம் உட்பட கடலோர மாவட்டங்களில் கடற்கரைகளில் வசிக்கும்மக்களை மாவட்ட நிர்வாரகங்கள் உடனடியாக வெளியேற உத்தரவிட்டன. இதனால் இப்பகுதியில் பெரும் பீதி ஏற்பட்டது.

ஆனால், நில நடுக்கம் ஏற்பட்டு பல மணி நேரத்துக்குப் பின்னரும் சுனாமி அலைகள் கடற்கரைகளைத் தாக்கவில்லை.இதையடுத்து சுனாமி எச்சரிக்கையை எல்லா நாடுகளும் திரும்பப் பெற்றன.

இந்த நிலநடுக்கம் மற்றும் சுனாமி பீதியால் தமிழகம் உள்பட தென் கிழக்கு ஆசியா முழுவதுமே நேற்று இரவு முழுவதும்அச்சத்தில் உறைந்து போயின.

கடந்த டிசம்பரில் ஏற்பட்ட நில நடுக்கத்தைவிட நேற்றைய நிலநடுக்கம் 10 மடங்கு குறைவான சக்தி கொண்டதாகும். ஆனால்,இந்த நூற்றாண்டில் ஏற்பட்ட மிகப் பெரிய 10 நிலநடுக்கங்களில் இதுவும் ஒன்றாகும் என அமெரிக்க நிலவியல் ஆராய்ச்சிஅமைப்பு தெரிவித்துள்ளது.

முதலில் ரிக்டர் கோளில் 8.2 என்ற அளவில் இந்த நிலநடுக்கம் இருந்ததாகக் கூறப்பட்டது. ஆனால், இது 8.7 என்ற அளவுக்குபதிவானதாக அமெரிக்க நிலவியல் ஆராய்ச்சி அமைப்பு பின்னர் தெரிவித்தது.

நேற்று ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தால் இந்தோனேஷியா தான் பெரும் பீதியில் ஆழ்ந்தது. கடலோரப் பகுதி மக்கள், குறிப்பாகசுமத்ரா தீவைச் சேர்ந்த லட்சக்கணக்க்கான மக்கள் கண்ணீர்விட்டபடி பாதுகாப்பான இடங்களுக்கு ஓடினர். நிலநடுக்கத்தால்மின்சார போஸ்டுகள் சரிந்தன. இதனால் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.

இருட்டு மற்றும் நிலநடுக்கத்துக்கு மத்தியில் சுனாமிக்கு பயந்து மக்கள் அலை அலையாய் கிடைத்த வாகனங்களிலும்கால்நடையாகவும் ஓடினர். பல இடங்களில் போக்குவரத்து நெரிசலும், குழப்பமுமாகக் காணப்பட்டது.

சுனாமியால் மிக பயங்கரமான அழிவை சந்தித்த அந்தமான், நிகோபார் தீவுகளில் இன்றும் தொடர்ந்து பீதி நிலவுகிறது.கடற்கரைகளை விட்டு தீவுகளின் மையப் பகுதிகளில் குவிந்துள்ள மக்கள் தொடர்ந்து அங்கேயே முகாமிட்டுள்ளனர்.இப்போதைக்கு கடற்கரைகளுக்குத் திரும்ப அவர்கள் தயாராக இல்லை.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X