For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஜெயலட்சுமி, அழகர்சாமிக்கு முன் ஜாமீன்

By Staff
Google Oneindia Tamil News

மதுரை:

Jaylakshmiஜெயலட்சுமி, அவரது முன்னாள் வழக்கறிஞர் அழகர்சாமி ஆகிய இருவருக்கும், மதுரை உயர்நீதிமன்றக் கிளை, இன்றுமுன்ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.

சிவகாசி ஜெயலட்சுமிக்கும், அவரது வழக்கறிஞர் அழகர்சாமிக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டுள்ளது. அழகர்சாமி தன்னைக்கழுத்தை நெரித்துக் கொலை செய்ய முயன்றதாக கூறி எஸ்.எஸ்.காலனி காவல் நிலையத்தில் ஜெயலட்சுமி புகார் கொடுத்துள்ளார்.

அதன் அடிப்படையில் அழகர்சாமி மீது கொலை முயற்சி உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.இதையடுத்து முன் ஜாமீன் கோரி மதுரை உயர்நீதிமன்றக் கிளையிலும் அழகர்சாமி மனு தாக்கல் செய்துள்ளார்.

மேலும் ஜெயலட்சுமி மீது அழகர்சாமியும் எஸ்.எஸ்.காலனி காவல் நிலையத்தில் ஒரு புகார் கொடுத்தார். அதில், ஜெயலட்சுமிக்குஉடல் நலம் சரியில்லை என்பதால் அவர் மருத்துவமனைக்கு சென்று வர எனது காரைக் கொடுத்திருந்தேன். செலவுக்காக ரூ.20,000 ரொக்கம், 8 பவுன் தங்கச் சங்கிலியையும் கொடுத்திருந்தேன்.

ஆனால் மருத்துவ சிகிச்சை எதையும் அவர் எடுத்துக்கொள்ளதாதால், அதுகுறித்து கேட்டபோது என்னை அவர் மிரட்டினார்.கொலை மிரட்டல் விடுத்தார். இப்போது நான் கொல்ல முயற்சித்ததாக கூறி நாடகமாடுகிறார் என்று தனது புகாரில் அழகர்சாமிகூறியிருந்தார்.

அழகர்சாமியின் புகாரின் பேரில் ஜெயலட்சுமி மீதும் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இதைத் தொடர்ந்துஜெயலட்சுமியும் முன் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்தார்.

தனது மனுவில், எனது பெயரைக் கெடுக்க போலீஸார் தொடர்ந்து சதி வேலையில் ஈடுபட்டுள்ளனர். எனது வழக்கில் ஆஜராகவேண்டாம் என்று கூறி அழகர்சாமியை நிறுத்தி விட்டேன். ஆனாலும் அவர் என்னைக் கட்டாயப்படுத்தி தொடர்ந்து ஆஜராகிவந்தார்.

மார்ச் 27ம் தேதி எனது வீட்டுக்கு வந்து தலைமுடியைப் பிடித்து இழுத்து அடித்தார். பின்னர் துப்பட்டாவால் எனது கழுத்தைநெரித்துக் கொல்ல முயன்றார். இதுதொடர்பாக போலீஸில் புகார் செய்துள்ளேன். அழகர்சாமியும் என் மீது பொய்யானபுகார்களைக் கூறியுள்ளார்.

அதன் பேரில் போலீஸாரும் வழக்குப் பதிவு செய்துள்ளனர். எனவே முன் ஜாமீன் வழங்க வேண்டும் என்று கோரினார்ஜெயலட்சுமி.

அழகர்சாமியின் முன் ஜாமீன் மனு நீதிபதி சொக்கலிங்கம் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது அவரது சார்பில்ஆஜரான சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் சங்க முன்னாள் தலைவர் பிரபாகரன், ஜெயலட்சுமி மருத்துவமனைக்கு சென்றுமருத்துவர்களை மிரடடுகிறார், காவல் நிலையத்துக்கு சென்று போலீஸாரை மிரட்டுகிறார், நாளை நீதித்துறையைக் கூட அவர்மிரட்டலாம் என்றார்.

அப்போது குறுக்கிட்ட நீதிபதி சொக்கலிங்கம், நீதித்துறையை யாரும் மிரட்ட முடியாது, மிரட்டவும் அனுமதிக்க மாட்டோம்என்றார்.

தொடர்ந்து பிரபாகரன் வாதிடுகையில், ஜெயலட்சுமிக்கு நெஞ்சு வலி என்று கூறியதால் மனிதாபிமான அடிப்படையில் தனது கார்,ரூ. 20,000 ரொக்கம், 8 பவுன்தங்கச் சங்கிலி ஆகியவற்றை அழகர்சாமி கொடுத்துள்ளார்.

ஆனால் அவற்றை ஜெயலட்சுமி தவறாகப் பயன்படுத்தியுள்ளார். கட்சிக்காரர்கள் இப்படிச் செய்தால், எப்படி வழக்கறிஞர்கள்தங்களது தொழிலைப் பார்க்க முடியும் என்றார்.

இந்த சமயத்தில் குறுக்கிட்ட நீதிபதி சொக்கலிங்கம், ஒரு வழக்கறிஞர் போல அழகர்சாமியும் நடந்து கொள்ளவில்லையே என்றார்.

பின்னர் சம்பவம் நடந்தபோது ஜெயலட்சுமியின் வீட்டில் காவலுக்கு இருந்த காவலர்கள் மற்றும் அவருக்கு சிகிச்சை அளித்தடாக்டர்கள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் மற்றும் ஜெயலட்சுமி புகார் குறித்த முழு விவரத்தையும், சம்பந்தப்பட்டஆவணங்களையும் தாக்கல் செய்யுமாறு நீதிபதி உத்தரவிட்டார். வழக்கு விசாரணையையும் இன்றைக்கு ஒத்திவைத்தார்.

இன்று இருவரது மனுக்களையும் விசாரித்த நீதிபதி சொக்கலிங்கம் இருவருக்கும் முன் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.

அதன்படி, அழகர்சாமி சென்னையில் தங்கியிருந்து தினசரி உயர்நீதிமன்றக் காவல் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திடவேண்டும் என நிபந்தனை விதிக்கப்பட்டது.

ஜெயலட்சுமி, மதுரை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் தினசரி ஆஜராகி கையெழுத்திட நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, ஜெயலட்சுமியின் எல்லீஸ் நகர் வீட்டில் நடந்த சம்பவம் குறித்து காவல்துறை சார்பில் விரிவான விளக்க அறிக்கையும்,ஜெயலட்சுமிக்கு ஏற்பட்ட காயங்கள் குறித்த டாக்டர்களின் அறிக்கையும் நீதிபதியிடம் சமர்ப்பிக்கப்பட்டது.

இதற்கிடையே அழகர்சாமி-ஜெயலட்சுமி இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்ததாகவும், ஆனால் அழகர்சாமி

வீட்டில் அதை அனுமதிக்காததால் விவகாரம் வெடித்து சந்திக்கு வந்துள்ளதாகவும் பேசப்படுகிறது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X