For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நேற்றிரவும் வீடுகளில் உறங்காத கடற்கரை பகுதி மக்கள்

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

People sleeping on platforms
சுனாமி அச்சம் காரணமாக நேற்றிரவையும் பெரும்பாலான கடற்கரைவாசிகள் வீடுகளை விட்டுவிட்டு பாதுகாப்பானஇடங்களிலேயே கழித்தனர்.

இந்தோனேஷிய மாபெரும் நிலநடுக்கத்தையடுத்து சுனாமி தாக்கும் அபாயம் ஏற்பட்டதால் நேற்று முன் தினம் இரவோடு இரவாககடலோரப் பகுதி மக்கள் இடம் பெயர்ந்தனர். நேற்று பகலில அவர்கள் வீடுகளுக்குத் திரும்பினாலும் இரவு நெருங்கியதும்மீண்டும் வீடுகளை விட்டு அகன்றனர்.

கடலுக்கு வெகு தொலைவில் சாலையோரங்கள், சமூக நலக் கூடங்களில் அவர்கள் படுத்துறங்கினர்.

சென்னை மீனவர் குப்பங்களைச் சேர்ந்தவர்கள் திருவல்லிக்கேணி, ஐஸ் ஹவுஸ் போன்ற பகுதிகளில் தெருக்களில் படுத்துறங்கிகாலையில் எழுந்து சென்றனர்.

இதே நிலை தான் பிற கடற்கரை மாவட்டங்களிலும் காணப்பட்டது.

மாமல்லபுரத்தில் சுற்றுலாப் பயணிகள் வருகை சுத்தமாக இல்லை. இதனால் அப் பகுதி வெறிச்சோடிக் கிடக்கிறது.

People lookin for place to sleep
கல்பாக்கம் அணு உலை மூடல்?:

இதற்கிடையே சுனாமி ஆபத்து காரணமாக கல்பாக்கம் அணு உலைகளின் இயக்கம் நிறுத்தப்பட்டதாக வந்துள்ள செய்திகளைஅந்த அணு மின் நிலையம் மறுத்துள்ளது.

கடந்த முறை சுனாமியால் மிக பயங்கரமாக பாதிக்கப்பட்டது கல்பாக்கம் அணு மின் நிலையம் என்பது குறிப்பிடத்தக்கது. அணுஉலை தப்பிவிட்டாலும் அதன் வளாகத்தில் உள்ள பல கட்டடங்கள் சேதமடைந்தன. கார்கள் தூக்கி வீசப்பட்டு மரங்களில்தொங்கின.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X