For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கம்ப்யூட்டர் சயின்ஸ், இ அண்ட் சி படிப்புகளுக்கு கடும் கிராக்கி

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

பிளஸ் டூவில் நல்ல மதிப்பெண்களுடன் தேர்ச்சியடைந்த மாணவ, மாணவிகளில் பெரும்பாலானோர் கடந்த வருடங்களைப்போலவே இந்த ஆண்டும் எலக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன்ஸ், கம்ப்யூட்டர் சயின்ஸ் மற்றும் தகவல் தொழில் நுட்பம்தொடர்பான பிற படிப்புகளில் சேருவதற்கே ஆர்வம் காட்டுகின்றனர்.

பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியாகி விட்டன. தேர்வு எழுதியவர்களில் 76.7 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இவர்களில்மாணவிகளே அதிக அளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர். 79.3 சதவீத மாணவியரும், 74.1 சதவீத மாணவர்களும் தேர்ச்சிபெற்றுள்ளனர்.

தொழில் படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வு முடிவுகளும் வெளியாகி விட்டன. அவற்றில் கணிதப் பாடத் தேர்வில் யாருமே 100சதவீதம் பெறவில்லை. ஆனால் மருத்துவப் படிப்புக்கான தேர்வை எழுதியவர்களில் 11 பேர் 100 சதவீதம் பெற்றுள்ளனர்.

எனவே மருத்துவப் படிப்பில் சேருவதற்கான போட்டி வலுவாகவும், பொறியியல் படிப்பில் சேருவதற்கான போட்டி முந்தையஆண்டைப் போல இருக்காது என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. தற்போதய சூழ்நிலையில் கட் ஆப் மதிப்பெண் கடந்த ஆண்டைவிட குறைந்தே இருக்கும் என்றும் தெரிகிறது.

கடந்த வருடங்களைப் போலவே இந்த வருடமும் கம்ப்யூட்டர் சயின்ஸ், எலக்ட்ரானிக் அண்ட் கம்யூனிகேஷன்ஸ் மற்றும் தகவல்தொழில் நுட்ப படிப்புகளில் சேருவதற்கே இந்த வருடமும் மாணவர்கள் அதிக ஆர்வம் காட்டுகின்றனர்.

கடந்த பல ஆண்டுகளாக கிண்டி பொறியியல் கல்லூரி உட்பட சுமார் 30 பொறியியல் கல்லூரிகளில் மட்டும் கேம்பஸ்இன்டர்வியூக்கள் நடத்தப்பட்டன. பிறகு அண்ணா பல்கலைக்கழகத்துடன் இணைந்த இதர கல்லூரிகளிலும் கேம்பஸ் இன்டர்வியூநடத்த ஏற்பாடு செய்யப்பட்டது. இதற்காகவே மாநில வேலை வாய்ப்பு மையமும் உருவாக்கப்பட்டது.

இதன் மூலம் சென்னை, மதுரை , கோவை ஆகிய 3 மண்டலங்களில் அவற்றின் எல்லைகளுக்கு உட்பட்ட பொறியியல்கல்லூரிகளை சேர்ந்த மாணவர்களுக்கும் கேம்பஸ் இன்டர்வியூ நடத்தப்பட்டு விப்ரோ, இன்போசிஸ், டி.சி.எஸ் உட்பட பலமுன்னணி நிறுவனங்கள் ஏராளமான மாணவர்களை வேலைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

இன்னும் சில ஆண்டுகளில் தகவல் தொழில் நுட்பம் மற்றும் சாப்ட்வேர் தொழில் இன்னும் வேகமாக வளர்ச்சி அடையும்என்பதால் அடுத்த சில ஆண்டுகளில் இந்த துறையில் வேலை வாய்ப்பு மேலும் பல மடங்காக உள்ளது.

பி.இ உயிரித் தொழில்நுட்பப் பாடத்திற்கும் மாணவர்களிடையே வரவேற்பு காணப்படுகிறது. இதுதவிர பி.இ. சிவில் பிரிவுக்கும்மாணவர்களிடையே குறிப்பிடத்தக்க வரவேற்பு காணப்படுகிறது.

பெரும்பாலான மாணவர்கள் அண்ணா பல்கலைக்கழகத்தில் சேரவே விரும்புகிறார்கள். பிற கல்லூரிகளில் சேருவதில்மாணவர்களிடையே பெருமளவு தயக்கம் காணப்படுகிறது. மாணவர்களின் முதல் சாய்ஸாக அண்ணா பல்கலைக்கழகம் உள்ளது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X