• search

திருமணம்: பெண் வழக்கறிஞரை ஏமாற்றிய வழக்கறிஞர்

By Staff
FOLLOW ONEINDIA TAMIL ON
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts

    சென்னை:

    சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் பெண் வழக்கறிஞர் ஒருவர் திடீரென நடத்திய போராட்டத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    சென்னை பட்டாபிராம் பகுதியைச் சேர்ந்தவர் வழக்கறிஞர் லட்சுமிப் பிரியா. இவர் உயர்நீதிமன்ற வளாகத்திற்குள் திடீரெனஉண்ணாவிரதப் போராட்டத்தில் குதித்தார். போராட்டம் குறித்து அவர் கூறுகையில்,

    நான் பட்டாபிராமில் வசித்து வருகிறேன். கடந்த 8 வருடமாக வழக்கறிஞராகப் பணியாற்றி வருகிறேன்.

    பிரபு மனோகர் என்ற வழக்கறிஞர் அப்போது எனக்கு அறிமுகமானார். அவர் பாஜகவைச் சேர்ந்தவர். தொழில் நிமித்தமாக அடிக்கடிஅவரைச் சந்திப்பேன். தனக்கு ஏற்கனவே கல்யாணமாகி மனைவி இறந்து விட்டார், ஒரு குழந்தை மட்டுமே உள்ளது.

    அதைக் காப்பாற்ற தன்னைக் கல்யாணம் செய்து கொள்ளுமாறு அவர் என்னிடம் கோரினார்.

    அதை ஏற்ற நான் அவரை கடந்த மே மாதம் 5ம் தேதி வழக்கறிஞர்கள் முன்னிலையில் திருத்தணியில் வைத்துத் திருமணம் செய்துகொண்டேன். கல்யாணமான சில நாட்களிலேயே அவர் என்னை விட்டுப் பிரிந்து சென்று விட்டார்.

    நானும், அவரும் ஒன்றாக இருந்த புகைப்பட ஆல்பத்தையும் தன்னோடு எடுத்துச் சென்று விட்டார்.

    இந்த நேரத்தில்தான் அவரது முதல் மனைவி சாகவில்லை, உயிரோடு இருக்கிறார் என்பது எனக்குத் தெரிய வந்தது. இதையடுத்து அவரதுவீட்டுக்கு நான் சென்றேன். அப்போது மனோகரும், அவரது முதல் மனைவியும் சேர்ந்து என்னை மிரட்டி வீட்டை விட்டு வெளியேற்றினர்.

    இதுகுறித்து போலீஸில் புகார் கொடுத்தேன். ஆனால் இதவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்பபடவில்லை.

    மனோகரால் எனது உயிருக்கு ஆபத்து உள்ளது. நீதிமன்றம் தான் இதில் தலையிட்டு எனக்கு நீதி வழங்க வேண்டும் என்றார்.

    திடீரென பெண் வழக்கறிஞர் உண்ணாவிரதப் போராட்டத்தில் குதித்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    உயர்நீதிமன்றப் பதிவாளர் ஆறுமுகப்பெருமாள் ஆதித்தன் அங்கு விரைந்து வந்தார். தனக்கு நடந்த சோகத்தை அவரிடம் லட்சுமிப்பிரியா கூறினார். அப்போது அங்கே உயர்நீதிமன்ற காவல் நிலைய இன்ஸ்பெக்டர் அங்கு வந்தார்.

    அவரைப் பார்த்த லட்சுமிப் பிரியா, இந்த இன்ஸ்பெக்டரிடம் தான் புகார் கொடுத்தேன். ஆனால் புகாரை வாங்க அவர் மறுத்து விட்டார்என அழுதபடி கூறினார்.

    இதையடுத்து ஏன் புகார் மனுவைப் வவ்கவில்லை என்று இன்ஸ்பெக்டருக்கு ஆறுமுகப் பெருமாள் ஆதித்தன் ரெய்டு விட்டார்.

    இதைத் தொடர்ந்து புகார் மனுவை உடனடியாகப் பதிவு செய்வதாக இன்ஸ்பெக்டர் உறுதியளித்தார். இதையடுத்து பிற்கபலில் தனதுஉண்ணாவிரதப் போராட்டத்தை லட்சுமிப் பிரியா வாபஸ் பெற்றார்.

    இதற்கிடையே லட்சுமிப் பிரியா மீது புகார் கூறி மனோகருக்கு ஆதரவான ஏராளமான வழக்கறிஞர்கள் தலைமை நீதிபதி மார்க்கண்டேயகட்ஜுவிடம் புகார் கொடுத்துள்ளனர்.

    மனோகர் மற்றும் அவரது முதல் மனைவி அனிதா ஆகியோரும் மாநில உள்துறைச் செயலாளரிடம் லட்சுமி பிரியாவுக்கு எதிராக புகார்கொடுத்துள்ளனர்.

    அடுத்தடுத்த இச் சம்பவங்களால் உயர்நீதிமன்றத்தில் பெரும் காணப்பட்டது.

    Mail this to a friend  Post your feedback  Print this page 

    பொருத்தமான வரன் தேடுகிறீர்களா? தமிழ்மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!


    நாள் முழுவதும் oneindia
    செய்திகளை உடனுக்குடன் பெற

    We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more