கேபிள் டிவி கட்டணம்: உயர்நீதிமன்றத்தில் வழக்கு

Subscribe to Oneindia Tamil

சென்னை:

தமிழகம் முழுவதும் ஒரே மாதிரியான கேபிள் டிவி கட்டணத்தை நிர்ணயிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குதொடரப்பட்டுள்ளது.

தமிழகத்தில் சென்னையில் மட்டும் தற்போது செட் டாப் பாக்ஸ் முறையிலான கேபிள் டிவி சேவை செயல்படுகிறது. இதன்காரணமாக இலவச சானல்களை மட்டுமே எம்.எஸ்.ஓக்கள் எனப்படும் பன்முக கேபிள் டிவி சேவையாளர்கள் வழங்கிவருகின்றனர். கட்டணச் சானல்களைப் பார்க்க வேண்டுமானால் செட் டாப் பாக்ஸ் வாங்க வேண்டும், அதற்குரிய கூடுதல்கட்டணத்தை செலவிட வேண்டும்.

அதே சமயம் தமிழகத்தின் இதர பகுதிகளில் இந்த முறை அமலில் இல்லை. அங்கு அனைத்து சேனல்களும் வழங்கப்படுகிறது.ஆனால் கட்டணம் அதிகமாக உள்ளது. ஒவ்வொரு ஊரிலும் ஒரு கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதனால் சென்னையில் ரூ.100ம், மற்ற ஊர்களில் ரூ. 150 முதல் அதிகபட்சமாக ரூ. 300 வரையும் வசூலிக்கப்படுகிறது.

இந்த நிலையில் கேபிள் டிவி கட்டணத்தில் நிலவும் இந்த ஏற்றத் தாழ்வுகளை நீக்கி தமிழகம் முழுவதும் ஒரே கட்டணத்தைநிர்ணயிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் ராஜேந்திரன் என்பவர் இது தொடர்பாக தாக்கல் செய்துள்ள ரிட் மனுவில், கேபிள் டிவி மூலம்தொலைக்காட்சி அலைவரிசைகளை ஒளிபரப்ப செட்டாப் பாக்ஸ் முறையை மத்திய அரசு சென்னை, டெல்லி, கொல்கத்தா,மும்பை ஆகிய நகரங்களில் அமல்படுத்தியது.

ஆனால் சென்னையைத் தவிர மற்ற ஊர்களில் இந்தத் திட்டம் தோல்வி அடைந்து விட்டது. செட் டாப் பாக்ஸ் வாங்கவேண்டுமானால் குறைந்தது ரூ. 3000 முதல் 5000 வரை செலவழிக்க வேண்டியுள்ளது. ஏழை மக்களால் இவ்வளவு பெரியதொகையை செலவழிக்க இயலாது.

சென்னையில் ரூ. 100 கட்டணம் செலுத்தினால் இலவச அலைவரிசைகளை மட்டுமே காட்டுகிறார்கள். டிஸ்கவரி சேனல்,நேஷனல் ஜியாகிரபி உள்ளிட்ட பல நல்ல சேனல்களை மக்களால் பார்க்க முடிவதில்லை. காரணம் இவற்றைப் பார்க்கவேண்டுமானால் செட் டாப் பாக்ஸ் வாங்க வேண்டும்.

இதனால் ஏழை, எளிய மக்கள், நடுத்தர மக்களால் பல நல்ல சானல்களைப் பார்க்க முடியாத சூழ்நிலை நிலவுகிறது. இதுஅரசியல் சட்டம் 14, 19, 21க்கு எதிரானது.

நகரங்களில் ஒருமாதிரியாகவும், கிராமப்புறங்களில் ஒரு மாதிரியாகவும் கட்டணத்தை கேபிள் டிவி ஆபரேட்டர்கள்வசூலிக்கிறார்கள். சென்னையை எடுத்துக் கொண்டால் நகரில் ரூ. 100 ஆகவும், தாம்பரம் போன்ற புறநகர்ப் பகுதிகளில் ரூ.150ம், கிராமப் புறங்களில் ரூ. 80ம் வசூலிக்கிறார்கள்.

எனவே இந்த ஏற்றத்தாழ்வுகளை நீக்கி தமிழகம் முழுவதும் ஒரே மாதிரியான கட்டணத்தை வசூலிக்க உத்தரவிட வேண்டும்.அந்தக் கட்டணத்தை நீதிமன்றமே நிர்ணயிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

இம்மனுவை பரிசீலித்த தலைமை நீதிபதி ஏ.பி.ஷா, நீதிபதி பிரபா ஸ்ரீதேவன் ஆகியோர், ஏற்கனவே நிலுவையில் உள்ள செட்டாப் பாக்ஸ் தொடர்பான வழக்கோடு இதுவும் சேர்த்து விசாரிக்கப்படும் என உத்தரவிட்டனர்.

மேலும் இந்த மனு தொடர்பாக விளக்கம் அளிக்குமாறு மத்திய அரசுக்கு உத்தரவிட்டு விசாரணையை பிப்ரவரி 6ம் தேதிக்குஒத்திவைத்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+