For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

16ல் திமுக Vs

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

கூட்டணி மாறிய நிலையில் எதிர் முகாமிலிருக்கும் மதிமுகவுடன் திமுக நேரடியாக 16 தொகுதிகளில்மோதுகிறது. அதில் 6 தொகுதிகள் மதிமுக வலிமையாக உள்ள தென் மாவட்டத் தொகுதிகளாகும்.

திமுகவின் கோட்டையாக கருதப்படும் சென்னையில் 4 தொகுகளில் மதிமுக நேரடியாக களமிறங்குகிறது.

மதிமுகவுக்கு ஒதுக்கப்பட்டுள்ள 35 தொகுதிகளில் 16ல் திமுகவை அக் கட்சி சந்திக்கிறது.

திமுக., மதிமுக நேடியாக போட்டியிடும் தொகுதிகள்:

துறைமுகம்

எழும்பூர் (தனி)

அண்ணாநகர்

தாம்பரம்

செஞ்சி

நெல்லிகுப்பம்

குறிஞ்சிப்பாடி

தர்மபுரி

வெள்ளகோவில்

சத்தியமங்கலம்

திருச்சி-1

திருமங்கலம்

சிவகாசி

கம்பம்

தென்காசி

நாகர்கோவில்

பாமக-சிறுத்தைகள் மோதும் தொகுதி:

இதே போல திமுக கூட்டணியில் உள்ள பாமகவும், அதிமுக கூட்டணியில் உள்ள விடுதலை சிறுத்தைகளும்முகவூர் தொகுதியில் மட்டும் நேருக்கு நேர் மோதுகின்றன. இது பொதுத் தொகுதியாகும்.

அதிமுக கூட்டணியில் விடுதலை சிறுத்தைகளுக்கு 9 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதில் 7 தனித்தொகுதிகள். 2 பொதுத் தொகுதிகள்.

முடிந்த வரை பாமகவுடன் மோதுவதை தவிர்க்க திருமாவளவன் விரும்பினார். அதன்படியே தொகுதிகளையும்பெற்று ஒரே ஒரு தொகுதியில் மட்டும் பாமகவுடன் மோதுகிறார்.

இரு கட்சிகளுமே வட மாவட்டங்களில் மட்டுமே தொகுதிகளை கேட்டுப் பெற்றுள்ளது. விடுதலை சிறுத்தைகள்பெயருக்கு ஒரு தொகுதி மட்டுமே மேற்கு பகுதியான வால்பாறையில் வாங்கியுள்ளது. பாமக அனைத்துதொகுதிகளையும் வட மாவட்டங்களிலேயே வருமாறு கேட்டுப்பெற்றுள்ளது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X