For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

உதயமானது ரஜினி மக்கள் கழகம்: அதிமுகவுக்கு ஆதரவு

By Staff
Google Oneindia Tamil News

காரைக்குடி:

அதிமுக ஆதரவு பிரமுகரான ராமசாமி அம்பலத்தின் பக்க பலத்துடன் காரைக்குடியில்நடிகர் ரஜினிகாந்த் ரசிகர்களின் ஒரு பகுதியினர் இன்று நடத்திய கூட்டத்தில், ரஜினிமக்கள் கழகம் என்ற கட்சி உதயமானது. இந்தக் கட்சியின் தலைவர் ரஜினிகாந்த் தான்என்றும் அவர்கள் அறிவித்துள்ளனர்.

வரும் சட்டசபைத் தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவு தெரிவித்து தீவிரப் பிரசாரத்தில்ஈடுபட இக் கூட்டத்தில் தீர்மானம் நறைவேற்றப்பட்டது.

சட்டசபைத் தேர்தலில் யாருக்கும் ஆதரவு இல்லை என்று ரஜினி அறிவித்து விட்டதால்அரசியல் ஆர்வம் கொண்ட ஒரு பகுதி ரசிகர்கள் ஏமாற்றமடைந்துள்ளனர்.

பாமகவுக்கு எதிராக ரஜினி பகிரங்கமாக செயல்பட வேண்டும். அதிமுகவுக்கு ஆதரவுதர வேண்டும், தனிக் கட்சி தொடங்க வேண்டும் என்று அவர்கள் வெளிப்படையாககூறி வருகின்றனர். அவர்களை அதிமுக தூண்டிவிட்டும் வருகிறது.

மேலும் புதுவை மாநிலம் மற்றும் தஞ்சை மாவட்ட ரஜினி ரசிகர் மன்ற நிர்வாகிகள்ஜெயலலிதாவை சந்தித்து ஆதரவையும் தெரிவித்துள்ளனர்.

இந் நிலையில் அதிமுகவுக்கு மிகவும் நெருக்கமானவராக கருதப்படும்காரைக்குடியைச் சேர்ந்த ராமசாமி

அம்பலம் என்பவர் ரஜினி ரசிகர்களை அதிமுக பக்கம் இழுக்க களத்தில் இறங்கினார்.அவருக்கு அதிமுக தலைமை முழு பலத்தையும் கொடுத்து அனுப்பி வைத்தது.

அவரது முயற்சியின் காரணமாக, புதுவை மாநில ரஜினி ரசிகர் மன்றத் தலைவர் ரஜினிசங்கர், தஞ்சை மாவட்டத் தலைவர் ஹுமாயுன் ஆகியோர் சென்னை சென்று முதல்வர்ஜெயலலிதாவை சந்தித்து அதிமுகவுக்கு ஆதரவு தெரிவித்தனர்.

இதைத் தொடர்ந்து ராமசாமி அம்பலம் முன்பை விட அதிக உற்சாகமாக களத்தில்இறங்கி தமிழகம் முழுவதும் உள்ள ரஜினி மன்ற நிர்வாகிகளைத் திரட்டி ஒரேஇடத்தில் கூட்டி அதிமுகவுக்கு ஆதரவாக ரஜினி ரசிகர்களை மாற்ற முயற்சித்தார்.அவரது முயற்சியின் விளைவாகவும், சிவகங்கை மாவட்ட ரஜினி ரசிகர் மன்றத்தலைவர் ரவிச்சந்திரனின் தீவிர முயற்சியின் காரணமாகவும், இன்று காலைரசிகர்களின் கூட்டம் நடந்தது.

காரைக்குடி செக்காலையில் உள்ள எம்.ஏ.எம். மஹாலில் இந்த ஆலோசனைக்கூட்டத்தில் வெறும் 7 மாவட்டங்களைச் சேர்ந்த ரசிகர் மன்ற நிர்வாகிகள், ரசிகர்களேகலந்து கொண்டனர். ஏராளமான கார்கள், வேன்கள் மூலம் ரசிகர்கள் வந்துகுவிந்ததால் காரைக்குடியில் பெரும் பரபரப்பு நிலவியது.

இக்கூட்டத்தில் ரஜினி மக்கள் கழகம் என்ற புதிய கட்சி தொடங்கப்பட்டது.இதுதொடர்பாக தீர்மானம்கொண்டு வரப்பட்டு நிறைவேற்றப்பட்டது. கட்சியின்கொடியையும் மன்ற நிர்வாகிகள் கூட்டாக அறிமுகப்படுத்தினர். கட்சியின் தலைவராகரஜினிகாந்த் அறிவிக்கப்பட்டுள்ளார்.

பின்னர் மன்ற நிர்வாகிகள் செய்தியாளர்களிடம் பேசுகையில், ரஜினி ரசிகர்களின்நலனைக் கருத்தில் கொண்டு இந்தக் கட்சியைத் தொடங்கியுள்ளோம். இக்கட்சியின்தலைவர் ரஜினிதான். அவருக்கு இது பிடிக்கிறதோ, இல்லையோ அவர்தான்எப்போதும் எங்கள் தலைவர். அவரே கட்சியின் தலைவருமாவார்.

கட்சியின் பிற நிர்வாகிகள் விரைவில் தேர்வு செய்யப்படுவர். அதன் பின்னர்கட்சியின் பெயரை தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்வோம். தேர்தலிலும்போட்டியிடுவோம். சின்னம் பெறுவது தொடர்பான பணிகளுக்காக கமிட்டிஅமைக்கப்படவுள்ளது என்றனர்.

இக்கூட்டத்தில் வரும் தேர்தலில் அதிமுகவை ஆதரித்து செயல்படுவது என்றதீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

முதல்வர் ஜெயலலிதாவையும் மன்ற நிர்வாகிகள் சந்திப்பார்கள் எனத் தெரிகிறது.இன்றைய கூட்டத்தில் மன்னார்குடி வகையறாவுக்கு மிக நெருக்கமான ராமசாமிஅம்பலமும் கலந்து கொண்டார்.

ரஜினி ரசிகர்களின் காரைக்குடி கூட்டத்திற்கு மன்றத் தலைவர் சத்திநாராயண ராவ்தடை விதித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால் அதையும் மீறி கூட்டம் நடந்திருப்பதும், புதுக் கட்சி உதயமாகியிருப்பதும்,அக்கட்சியின் தலைவராக ரஜினி அறிவிக்கப்பட்டிருப்பதும் ரஜினி ரசிகர்மன்றங்களிடையே பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

ரசிகர்களின் வழிக்கு ரஜினி வருவாரா அல்லது என் வழி தனி வழி என்று கூறிவழக்கம் போல தன் பாதையில் நடைபோடுவாரா என்று தெரியவில்லை.

ராமசாமி அம்பலம் தான் புதுவை மற்றும் தஞ்சை ரசிகர்களை ஜெயலலிதாவிடம்அழைத்துச் சென்றவர். முக்குலத்தோர் வகுப்பைச் சேர்ந்த அம்பலம்,மன்னார்குடியினரின் அறிவுரைப்படியும் அதிமுகவின் பின்னணியுடனும் ரஜினிரசிகர்களை ஒருங்கிணைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார்.

தற்போது காரைக்குடியில் நடந்த கூட்டத்திற்கான ஏற்பாடுகள், செலவுகள், வாகனவசதி உள்ளிட்டவற்றையும் அம்பலமே (அதிமுக உதவியுடன்?) ஏற்றார் என்றும்கூறப்படுகிறது.

கொடியும் தயார்:

ரஜினி பெயரிலான புதிய கட்சிக்கு கொடியையும் ரசிகர்கள் தயாரித்துவிட்டனர்.கொடியின் மேலே நீலம், நடுவில் வெள்ளை, கீழே சிவப்பு நிறம் இடம் பெற்றுள்ளது.நடுவில் இந்திய வரைபடம் உள்ளது.

அதில், ஐந்து நதிகள் தமிழகத்தை நோக்கி பாய்வது போலவும், பசுமை நிறைந்ததமிழகத்தை நோக்கி ரஜினியின் கை விரல் சுட்டிக் காட்டுவது போலவும் கொடிஅமைத்துள்ளனர்.

இந்த புதிய கட்சிக்கு ஜெயலலிதா சீட் கொடுக்கப்படலாம் என்றும் பேச்சுஅடிபடுகிறது.

மொத்தத்தில் இந்தத் தேர்தலில் யாரையும் விட்டு வைக்காத அதிமுக, ரஜினிரசிகர்களில் ஒரு பிரிவினரையும் வளைத்துவிட்டது.

அதிமுகவின் பின்னணியுடன் சில ரசிகர்கள் அரசியலில் குதித்துள்ள நிலையில்,சிவாஜி படப்பிடிப்பிலிருந்து பிரேக் எடுத்துக் கொண்டு ஒரு நாள் முழுவதும் தனதுநண்பரும், ரசிகர் மன்றத் தலைவருமான சத்தியநாராயண ராவ் மற்றும் பிறநண்பர்களுடன் தீவிரமாக ஆலோசனை நடத்தினார்.

ரஜினி மன்றத்தினரை அதிமுக வளைத்து வரும் நிலையில் ரஜினியையும்ஜெயலலிதாவையும் சந்திக்க வைக்க விஜயக்குமார் முயன்று வருவதாகவும்கூறப்படுகிறது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X