For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ரஜினியை வளைக்க அதிமுக சக்கர வியூகம்!

By Staff
Google Oneindia Tamil News

காரைக்குடி:

கடைசி நேரத்தில் ரஜினிகாந்த் நேரடியாக தலையிட்டு அதிமுக ஆதரவு ரசிகர் மன்றநிர்வாகிகளுடன் தொலைபேசியில் பேசியதால், கொடியை அறிமுகம் செய்வதைமட்டும் ரசிகர்கள் நிறுத்தி விட்டனர்.

ஆனால், கட்சி ஆரம்பிக்கப்பட்டுவிட்டது.

தமிழகத்தின் சில மாவட்டங்களைச் சேர்ந்த ஒரு பிரிவு ரஜினி ரசிகர்கள் (அதிமுகவால்வளைக்கப்பட்டவர்கள்) காரைக்குடியில் ஞாயிற்றுக்கிழமை திரண்டனர். வரும்தேர்தலில் யாருக்குஆதரவு அளிப்பது என்பது தொடர்பாக திட்டவட்டமான முடிவைஎடுப்பதற்காக இந்தக் கூட்டம் கூட்டப்பட்டிருந்தது.

சசிகலா சமூகத்தைச் சேர்ந்த அதிமுக ஆதரவு பிரமுகரான ராமசாமி அம்பலத்தின் பக்கபலத்துடன் இந்தக் கூட்டத்துக்கு ரஜினி ரசிகர்களில் ஒரு பிரிவினர் ஏற்பாடுசெய்திருந்தனர்.

இக் கூட்டத்தில் ரஜினி மக்கள் கழகம் என்ற கட்சி உதயமானது. கட்சியின் தலைவர்ரஜினிகாந்த் தான் என்றும் அறிவித்தனர்.

அதே போல கட்சிக் கொடியையும் அவர்கள் தயார் செய்து வைத்திருந்தனர். ஆனால்,கடைசி நேரத்தில் நடிகர் ரஜினியே நேரடியாக தலையிட்டு மன்ற நிர்வாகிகளுடன்தொலைபேசியில் பேசியதால், கொடியை அறிமுகம் செய்வதை மட்டும் அவர்கள்நிறுத்தி வைத்தனர்.

அதிமுகவினரால் தங்கள் ரசிகர் மன்றம் உடைபடுவதையும், ரஜினியையும் மீறிஅதிமுகவுக்கு ஆதரவாக அவர்கள் களத்தில் குதித்துள்ளதையும் பெரும்பாலான ரசிகர்மன்ற நிர்வாகிகள் ஏற்கவில்லை.

தலைவரின் உத்தரவை மீறி நாம் நடக்க வேண்டாம். இப்போதைக்கு யாருக்கு ஆதரவுதெரிவிப்பது, தேர்தலில் எப்படி செயல்படுவது என்பதை மட்டும் தீர்மானிப்போம்,கட்சி, கொடி குறித்தெல்லாம் தலைவரின் கருத்தைக் கேட்டு முடிவு செய்வோம் என்றுதெரிவித்தனர்.

ஆனால் சிவகங்கை, புதுவை, தஞ்சை மாவட்ட ரஜினி மன்ற நிர்வாகிகளில்அதிமுகவுக்கு ஆதரவானவர்கள் இதை ஏற்கவில்லை.

கட்சியை ஆரம்பித்தால்தான் தலைவர் நமது வழிக்கு வருவார் என்று அவர்கள்பிடிவாதமாக கூறினர்.

காரைக்குடியில் ரஜினி ரசிகர் மன்றக் கூட்டம் பரபரப்பாக நடந்து கொண்டிருந்தநிலையில் இந் நிலையில் சிவகங்கை மாவட்ட ரஜினி ரசிகர் மன்றத் தலைவர்ரவிச்சந்திரனுக்கு ரஜினியிடமிருந்தே நேரடியாக தொலைபேசி அழைப்பு வந்தது.

ரவிச்சந்திரனிடம் பேசிய ரஜினி, ரவிச்சந்திரன் இப்போதைக்கு கட்சி, கொடிவேண்டாம். எனது பேச்சை மதிப்பதாக இருந்தால் அந்த இரண்டையும் நிறுத்திவையுங்கள். எனக்கு 2 நாள் அவகாசம் கொடுங்கள். நல்ல முடிவாக சொல்கிறேன்.

இப்போதைக்குக் கூடிப் பேசுவதை நான் ஆட்சேபிக்கவில்லை. ஆனால் கட்சி, கொடிவேண்டாம் என்று கூறினாராம்.தலைவரே தன்னிடம் வேண்டுகோள் விடுத்ததால் அதைத் தட்ட விரும்பாதரவிச்சந்திரன், ரஜினி தன்னுடன் பேசியதை மற்ற நிர்வாகிகளிடம் தெரிவித்துள்ளார்.ஆனால், அதற்குள் ரஜினி மக்கள் கட்சியை நிர்வாகிகள் துவக்கிவிட்டிருந்தனர்.இதையடுத்து தலைவர் சொல்வது போல கேட்போம் என்ற முடிவுக்கு நிர்வாகிகள்வந்தனர். ஆனாலும் கட்சியைத் துவக்கி விட்டது துவக்கியது தான். கொடியைஅறிமுகப்படுத்துவதை வேண்டுமானால் நிறுத்தி வைப்போம் என்று அதிமுகஆதரவாளர்கள் கூறினர்.

இதனால் பெரும் குழப்பங்களுடன் கூட்டம் முடிந்தது.

எப்படியிருப்பினும் அதிமுகவுக்கு ஆதரவாக செயல்படுவோம் என்ற வகையில்காரைக்குடிக்கு வந்திருந்த ரசிகர் மன்ற நிர்வாகிகள் தீர்மானமான முடிவுக்குவந்துவிட்டனர்.

கட்சி துவக்கிவிட்டாலும் கூட, ரஜினியே நேரில் தலையிட்டதால் கட்சிஆரம்பிக்கப்படுவதும் கொடியை அறிமுகப்படுத்துவதும் நிறுத்திவைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துவிட்டு கூட்டத்தை கலைத்தனர் காரைக்குடிநிர்வாகிகள்.

ரஜினி மன்றத்தின் சில மாவட்ட நிர்வாகிகளை வளைத்து காரைக்குடிக்கு வரவழைத்து,கூட்டம் போட வைத்து கட்சி ஆரம்பிக்க வைத்துள்ள ராமசாமி அம்பலம் மூலமாகத்தான்

சமீபத்தில் புதுவை ரஜினி மன்ற தலைவர் சங்கர், தஞ்சை மாவட்டத் தலைவர்ஹுமாயுன் ஆகியோர் முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்தனர் என்பதுகுறிப்பிடத்தக்கது.

மன்னார்குடி வகையறாவுக்கு மிக நெருக்கமான ராமசாமி அம்பலமும் நேற்றைகாரைக்குடி ரஜினி மன்ற கூட்டத்தில் கலந்து கொண்டார்.

இந்தக் கூட்டத்திற்கான ஏற்பாடுகள், செலவுகள், வாகன வசதி உள்ளிட்டவற்றையும்அம்பலமே (அதிமுக உதவியுடன்?) ஏற்றார் என்றும் கூறப்படுகிறது.

சத்ய நாராயண ராவ் விதித்த தடையையும் மீறி காரைக்குடியில் ரஜினி ரசிகர் மன்றக்கூட்டம் நடந்தது குறிப்பிடத்தக்கது.

முதலில் மன்ற நிர்வாகிகளை வளைப்பது, அவர்கள் மூலமாக ரஜினிக்கு பிரஷ்ஷர்தருவது, அவரை அதிமுகவை ஆதரிக்க வைப்பது என்ற உளவுப் பிரிவு போட்டுத்தந்த பிளானை அதிமுக தலைமை அமல்படுத்தி வருகிறது.

சிவாஜி படம் வெளியாக வேண்டிய நிலையில், படத்தை தூக்கி நிறுத்த உதவும்,ரசிகர்களை ரஜினி பகைத்துக் கொள்ள மாட்டார் என அதிமுக கருதுகிறது.

இதனால் எப்படியும் தங்களை ரஜினி ஆதரிப்பார் என நம்பும் அதிமுக தலைமைஅவருடன் சந்திப்புக்கு ஏற்பாடு செய்யும் வேலையை நடிகர் விஜய்குமாரிடம்தந்துள்ளது.

வழக்கமாகவே எதாவது சொல்லிக் குழப்புவார் ரஜினி.. இம்முறை அவர் அமைதியாகஇருப்பதை பயன்படுத்தி அவரது மன்றத்தினரைக் குழப்பிவிட்டு, ரஜினியை சுற்றி ஒருநெருக்கடியை ஏற்படுத்தி குளிர் காய நினைக்கிறது அதிமுக.

அதிமுகவின் இந்த சக்கர வியூகத்தில் ரஜினி சிக்குவாரா அல்லது பறந்து பறந்துவெளியே வந்துவிடுவாரா என்பதைப் பார்க்க வேண்டும்.

முதல்வர் ஜெயலலிதாவை சமீபத்தில் தைரியலட்சுமி என்று பாராட்டினார் ரஜினிஎன்பது குறிப்பிடத்தக்கது.

அதிமுக-மன்ற நிர்வாகிகளின் கூட்டணியை மதித்து (வேறு வழியில்லாததால்)ஜெயலலிதாவை ரஜினி ஆதரித்து அறிக்கை விட்டாலும் ஆச்சரியமில்லை.

உதயமானது ரஜினி மக்கள் கழகம்:
அதிமுகவுக்கு ஆதரவு

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X