For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பொன்னையன், இன்பத்தமிழனுக்கு சீட் இல்லை: தப்பினார் வளர்மதி!

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

அமைச்சர்கள் பொன்னையன், இன்பத் தமிழன், அண்ணாவி, துணை சபாநாயகர் வரகூர் அருணாச்சலம்ஆகியோருக்கு முதல்வர் ஜெயலலிதா இந்த முறை சீட் தரவில்லை.

இந்த லிஸ்டில் சேர்ந்திருக்க வேண்டிய வளர்மதி தப்பிப் பிழைத்துள்ளார்.

சைதாப்பேட்டை தொகுதியின் தற்போதைய எம்.எல்.ஏவும், நடிகருமானராதாரவிக்கும் ஆப்பு வைக்கப்பட்டுள்ளது.

அமைச்சர்கள் பொன்னையன், இன்பத்தமிழன், வளர்மதி ஆகியோருக்கு இந்த முறை அதிமுகவில் சீட்மறுக்கப்படும் என்று கூறப்பட்டது.

தாமரைக்கனியை ஒடுக்க முதல்வர் ஜெயலலிதாவால் பயன்படுத்தப்பட்டவர் அவரது மகன் இன்பத் தமிழன்.இதனால் அவரது குடும்பத்தையே உடைத்தார் ஜெயலலிதா. இப்போது தாமரைக்கனி இறந்துவிட்ட நிலையில்இன்பத்தமிழனால் குறிப்பிட்ட பயன் ஏதும் இல்லை.

தனது அப்பாவின் இனிஷியலையே நீக்கி அம்மா ஜெயலலிதாவுக்கு தனது விசுவாசத்தைக் காட்டியஇன்பத்தமிழன் மீது போயஸ் கார்டன் சில காலமாகவே கோபத்தில் இருந்து வந்தது.

தனது மாவட்டத்தில் தனக்கென ஒரு கோஷ்டியை உருவாக்கிக் கொண்டார் இன்பா. அவரது எதிர் கோஷ்டினர்முதல்வர் படத்தக்கு செருப்பு மாலை போடும் அளவுக்கு கோஷ்டிப் பூசல் நடந்து வருகிறது. இதனால் இன்பா மீதுகடும் அதிருப்தியில் இருந்தார் ஜெயலலிதா.

இதனால் தனக்கு சீட் கிடைப்பது கஷ்டம் என்பதை உணர்ந்துவிட்ட இன்பா, வேறு வகைகளில் அதைப் பெறமுயன்றார். பிரபல தமிழ் நாளிதழின் உரிமையாளர் மூலம் அதிமுக தலைமையிடம் இன்பத்தமிழன் பேசிப்பார்த்தார். ஆனாலும் பலன் கிடைக்கவில்லை.

மேலும் கடந்த மக்களவைத் தேர்தலில் எதிரணியில் இருந்த மதிமுக, தற்போது அதிமுகவுடன் கைகோர்த்துள்ளது.கடந்த மக்களவைத் தேர்தலின்போது மதிமுக சார்பில் சிவகாசியில் போட்டியிட்ட சிப்பிப்பாறை ரவிச்சந்திரனைதுப்பாக்கியால் சுட்டதாக இன்பத்தமிழன் மீது வழக்கு உள்ளது.

இதனால் இன்பாவுக்கு சீட் கொடுக்கப்பட்டால் மதிமுகவினர், அதிமுகவுடன் இணைந்து தேர்தல்பணியாற்றுவார்களா என்பது கேள்விக்குறிதான். இதனால் இன்பாவுக்கு சீட் இல்லாமல் போய்விட்டது.

அதே போல தனக்கு கட்டாயம் சீட் இல்லை என்ற பெரும் நம்பிக்கையோடு

இருந்தார் நிதியமைச்சர் பொன்னையன். ஜெயலலிதாவுக்கு நெருக்கமாக இருந்த இவரை மன்னார்குடி தரப்புதிட்டம்போட்டு ஓய்த்துவிட்டது.

கடந்த சில மாதங்களாகவே பொன்னையன் அம்மாவின் அதிருப்திக்கு உள்ளாகி அதிமுக கூட்டங்களில்தலைகாட்டுவதில்லை.

இதனால் காசு வேஸ்ட் என்று நித்ைதாரோ என்னவோ, எந்த தொகுதியை கேட்டும் பொன்னையன் மனு கூடசெய்யவில்லை.

சமீபத்தில் முதல்வர் தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் நடந்தது. தேர்தல் விஷயங்களைப் பேசியஜெயலலிதா, பின்னர் அமைச்சர்களை தனித்தனியாகவும் அழைத்துப் பேசினார்.

ஆனால், பொன்னையன், இன்பத்தமிழன், வளர்மதி ஆகியோரை மட்டும் அழைக்கவில்லை.

இதனால் வளர்மதியும் போயஸ் தோட்டத்தின் அதிருப்தி பட்டியலில் இடம் பிடித்துவிட்டது உறுதியானது.சென்னையில் நட்சத்திர ஹோட்டல் கட்டும் அளவுக்கு வளர்மதியின் வளம் பெருகிவிட்டதை மன்னார்குடிவகையறாவால் பொறுக்க முடியவில்லை என்பதால் அவரையும் கட்ட முயன்றனர்.

ஆனாலும் டான்சி வழக்குப் போட்ட திமுகவின் ஆர்.எஸ்.பாரதியையும் எம்ஜிஆர் நகர் திமுக கவுன்சிலர்தனசேகரன் ஆகியோரில் ஒருவர் ஆலந்தூரில் போட்டியிட்டால் அதை சமாளிக்க வளர்மதியே சரிப்படுவார்என்பதால் தப்பிப் பிழைத்துள்ளார் வளர்மதி.

அமைச்சர்களில் ஓ.பி தவிர ஜெயக்குமார், வளர்மதி, உடலை 180 டிகிரி வரை வளைந்து கும்பிடு போடுவதில்வல்லவரான பாண்டுரங்கன், விஜயலட்சுமி பழனிச்சாமி, ஜெயராமன், சண்முகம், நத்தம் விஸ்வநாதன், தளவாய்சுந்தரம், அனிதா ராதாகிருஷ்ணன், வேலுச்சாமி, நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோருக்கு மீண்டும் சீட்கிடைத்துள்ளது.

கடந்த மக்களவைத் தேர்தலில் தென் சென்னையில் போட்டியிட்டு படுதோல்வி அடைந்த ஜெயலலிதாவின்பள்ளித் தோழியும் வக்பு வாரியத் தலைவியுமான பதர் சயீதுக்கு திருவல்லிக்கேணி தொகுதியில்நிறுத்தப்பட்டுள்ளார். அதே தேர்தலில் மதுரையில் போட்டியிட்டுத் தோற்ற மதுரை நகர் மாவட்ட அதிமுகசெயலாளர் ஏ.கே.போஸ் திருப்பரங்குன்றம் தொகுதியில் நிறுத்தப்பட்டுள்ளார்.

திருச்சியில் தோற்ற பரஞ்சோதிக்கு ஸ்ரீரங்கம் தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது.

சசிகலா-நடராஜன் கோஷ்டிக்கு நெருக்கமான அக்ரி கிருஷ்ணமூர்த்திக்கு கலசப்பாக்கம்ஒதுக்கப்பட்டுள்ளது.

ஆசிரியை மீனாட்சி காணமல் போன வழக்கில் சந்தேகத்துக்குள்ளாகியுள்ள பாப்பாசுந்தரத்துக்கு மீண்டும் குளித்தலை தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது.

மத்திய அமைச்சர் மணிசங்கர அய்யரை ஆள் வைத்து நையப்புடைத்தவரும் சசிவகையறாவுக்கு வேண்டியருமான ஓ.எஸ்.மணியன் வேதாரண்யம் தொகுதியில்போட்டியிடுகிறார்.

வானளாவிய அதிகாரம் கொண்டவராகக் கூறிக் கொண்ட மாஜி சபா பி.எச்.பாண்டியனின் மகன் மனோஜ் பாண்டியனுக்கு மீண்டும் சேரன்மாதேவிஒதுக்கப்பட்டுள்ளது.

அதிமுக வேட்பாளர்கள் தேர்வில் உளவுப் பிரிவின் பங்கு பெருமளவில் உள்ளதாகசொல்கிறார்கள்.

வரும் சட்டசபைத் தேர்தலில் அதிமுக 182 தொகுதிகளில் போட்டியிடுகிறது. இதில்ஒவ்வொரு தொகுதிக்கும் 3 பேரைத் தேர்வு செய்து அதிலிருந்து ஒருவரைவேட்பாளராக ஜெயலலிதா செலக்ட் செய்தார்.

உளவுப் பிரிவினர் கொடுத்த பீட்-பேக்கை வைத்து ஒவ்வொரு வேட்பாளரும் இறுதிசெய்யப்பட்டனர்.

இந்த வேட்பாளர் பட்டிலுடன் முன்பே கோவில்களுக்குச் சென்று சிறப்புப்பூஜைகளையும் நடத்திவிட்டு வந்துவிட்டார் சசிகலா.

இந் நிலையில் அதிமுக மாவட்டச் செயலாளர்கள் ஜெயலலிதாவை சந்திப்பதற்காகஞாயிற்றுக்கிழமை சென்னைக்கு வரவழைக்கப்பட்டனர்.

காலையில் வந்த அவர்கள் மாலை வரை அதிமுக தலைமைக் கழகத்திலேயே உட்காரவைக்கப்பட்டனர். ஒரு வழியாக மாலையில் அனைவரும் போயஸ் தோட்டஇல்லத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

அங்கு வேட்பாளர்களாக இறுதி செய்யப்பட்ட 182 பேரும் கொண்டுவரப்பட்டிருந்ததாகத் தெரிகிறது. பின்னர் அந்த வேட்பாளர்கள் குறித்து மாவட்டச்செயலாளர்களின் கருத்துக்களை ஜெயலலிதா கேட்டறிந்தார்.

(வழக்கமாக மாவட்டத் தலைவர்களுடன் பேசித் தான் வேட்பாளர்கள் இறுதிசெய்யப்படுவார்கள். இங்கு உளவுத்துறை உதவியுடன் அம்மாவே வேட்பாளர்களைஇறுதி செய்துவிட்டு மா.செக்களுக்கு தகவல் மட்டும் கொடுக்கப்பட்டுள்ளது.)

இந் நிலையில் 27ம் தேதியான (ஜெயலலிதாவுக்கு ராசியான கூட்டுத் தொகை 9!)இன்று வேட்பாளர்களின் பட்டியலை ஜெயலலிதா வெளியிட்டார்.

வரும் 31ம் தேதி முதல் ஜெயலலிதா தீவிர தேர்தல் பிரசாரத்தை தொடங்கவுள்ளார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X