For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

88 எம்எல்ஏக்களுக்கு கல்தா கொடுத்த ஜெ: 21அமைச்சர்களுக்கு மீண்டும் வாய்ப்பு

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

அதிமுக வேட்பாளர் பட்டியலில் 21 அமைச்சர்கள், 52 எம்எல்ஏக்களுக்கு மட்டுமேமீண்டும் போட்டியிடும் வாய்ப்பை பெற்றுள்ளனர். 119 புதுமுகங்களுக்கு வாய்ப்புகொடுக்கப்பட்டுள்ளது.

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட அதிமுக வேட்பாளர் பட்டியில் நேற்றுவெளியிடப்பட்டது.

இதில் அமைச்சர்கள் பன்னீர் செல்வம், ஜெயக்குமார், பொள்ளாச்சி ஜெயராமன்,ராமசாமி, விஜயலட்சுமி பழனிச்சாமி, தளவாய் சுந்தரம், சண்முகம், வளர்மதி,அன்பழகன், சோமசுந்தரம் கருப்புசாமி, நயினார் நாகேந்திரன், விஸ்வநாதன், மில்லர்,பாண்டுரங்கன், வேலுச்சாமி, தாமோதரன், வைத்தியலிங்கம், அனிதா ராதாகிருஷ்ணன்,ராமச்சந்திரன் ஆகியோருக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

Sasikala

வேட்பாளர் பட்டியலுடன் திருவொற்றியூர் வடிவுடை அம்மன் கோவிலில் இருந்துவெளியே வரும் சசி

இதில் அமைச்சர்கள் விஜயலட்சுமி பழனிச்சாமி வீரபாண்டி தொகுதியிலும், எஸ்.ராமச்சந்திரன் தண்டாரம்பட்டு தொகுதியிலும் மாற்றி போட்டியிடுகின்றனர். கடந்தமுறை விஜயலட்சுமி பனைமரத்துப் பட்டியிலும் ராமச்சந்திரன் கலசப்பாக்கத்திலும்போட்டியிட்டனர்.

மற்ற அமைச்சர்கள் தங்கள் பழைய தொகுதிகளிலேயே போட்டியிடுகின்றனர்.

அமைச்சர்கள் பொன்னையன், இன்பத்தமிழன், அண்ணாவி, துணை சபாநாயகர்வரகூர் அருணாச்சலம் உள்பட 88 எம்எல்ஏக்களுக்கு பேருக்கு மீண்டும் போட்டியிடவாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது.

இந்த 88 பேர் கடந்த முறை போட்டியிட்டு வென்ற இடங்களில் 16 இடங்கள்இம்முறை அதிமுக கூட்டணி கட்சிகளுக்கு ஓதுக்கப்பட்டுள்ளது.

கடந்த தேர்தலில் ஆட்சி அமைத்தவுடன் பதவி தரப்பட்டு மீண்டும் பதவிபறிக்கப்பட்ட முன்னாள் அமைச்சர்கள் செம்மலை, ஆர்.ஜீவானந்தம், சம்பத்,வ.து.நடராஜன், பாலசுப்பிரமணியன், விஸ்வநாதன், வளர்மதி ஜெபராஜ்ஆகியோருக்கும் சீட் கிடைக்கவில்லை.

அறிவிக்கப்பட்டுள்ள 182 வேட்பாளர்களில் 24 பேர் பெண் வேட்பாளர்கள் ஆவர்.

கடந்த தேர்தலில் 19 பெண்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டது. இம்முறை வாய்ப்புகிடைத்துள்ள 24 பேரில் 17 பேர் புதுமுகங்கள். பதர் சயீத் ஏற்கனவே நாடாளுமன்றத்தேர்தலில் போட்டியிட்டிருந்தாலும் கூட சட்டசபைத் தேர்தலில் போட்டியிடுவதுஇதுவே முதல் முறையாகும்.

இந்த 24 பேரில் ஜெயலலிதாவைத் தவிர மற்ற அனைவரும் திருமணமானவர்கள்.இவர்களில் பதர் சயீத், லட்சுமி, சந்திரா சேட்டு, சசிகலா ரவி, ஞான புனிதா, உமாதேவி ஆகியோர் பட்டதாரிகள். தமிழ்மொழி ராஜதத்தன் ஆசிரியை ஆவார். பதர் சயீத்மற்றும் லட்சுமி ஆகியோர் வழக்கறிஞர்கள். இதில் ஜெயலலிதா உட்பட வளர்மதி, மைதிலி திருநாவுக்கரசு, விஜயலட்சுமிபழனிச்சாமி, சிவகாசி வின்சென்ட், தமிழ்மொழி ராஜதத்தன், சகிகலா ஆகிய 7 பேர்மீண்டும் தேர்தலில் போட்டியிடுகின்றனர்.

பெண்களில் 16 பேர் தனித்தொகுதிகளில் போட்டியிடுகின்றனர். அதிமுக பெண்வேட்பாளர்கள் மொத்தம் 18 மாவட்டங்களில் போட்டியிடுவது குறிப்பிடத்தக்கது.

அதிகபட்சமாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஆலந்தூர், அச்சிரப்பாக்கம், காஞ்சிபுரம் 3தொகுதிகளிலும், சேலம், நாமக்கல், கோவை, திண்டுக்கல் மாவட்டங்களில் தலா 2தொகுதிகளிலும் பெண்கள் போட்டியிடுகின்றனர்.

இவர்களில் 2 பேர் வழக்கறிஞர்கள். 3 பேர் பட்டதாரிகள், ஒருவர் ஆசிரியர் பயிற்சிமுடித்தவர்.

முன்னாள் சபாநாயகர் காளிமுத்து திருமங்கலம் தொகுதியிலிருந்து மாறி மதுரைமத்திய தொகுதியில் போட்டியிடுகிறார்.

கடந்த தேர்தலில் தாமக சார்பில் போட்டியிட்டு வென்று, பின்னர் காங்கிரசில் தாமகஇணைந்தபோது அதை எதிர்த்து வெளியேறிய 4 குமாரதாஸ், ஹக்கீம், மணி நாடார்,ஈஸ்வரன் ஆகிய எம்எல்ஏக்களும் ஜெயலலிதாவை ஆதரித்தனர். சட்டசபையில்அதிமுக ஜால்ராக்களாக செயல்பட்ட இவர்களில் குமாரதாசுக்கு மட்டுமே சீட்தந்துள்ளார் ஜெயலலிதா.

முதலில் ஜனதாளம் பின்னர் காங்கிரஸ் என கட்சி மாறி வந்த குமாரதாஸ் இம்முறைதான் முதன்முறையாக அதிமுக சார்பில் அதே தொகுதியில் கிள்ளியூர் தொகுதியில்போட்டியிடுகிறார்.

ஓவராக ஜால்ரா போட்ட மதுரை எம்எல்ஏவான ஹக்கீமுக்கு சீட் தரப்படவில்லை.

அதே போல சிவகாமி வின்சென்ட், முருகவேல் ராஜன், கிருஷ்ணன் ஆகியோர்சமீபத்தில் பாமகவில் இருந்து விலகி அதிமுகவில் சேர்ந்தனர். இதில் சிவகாமிக்குமட்டும் சீட் தந்துள்ள ஜெயலலிதா மற்ற இருவரையும் கைகழுவி விட்டார்.

அறிவிக்கப்பட்டுள்ள அதிமுக வேட்பாளர்களில் 24 பேர் சட்டம் படித்தவர்கள், 64பேர் பட்டதாரிகள், 2 பேர் எம்.பி.பி.எஸ் பட்டம் பெற்ற டாக்டர்கள், குமாரதாஸ் சித்தமருத்தவர் என்பது குறிப்பிடதக்கது.

வேட்பாளர் பட்டியலை ஜெயலலிதா வெளியிடுவதற்கு முன், அவரது தோழி சசிகலா,திருவொற்றியூர் வடிவுடை அம்மன் கோவிலுக்கு வேட்பாளர் பட்டியலுடன் சென்றுசிறப்பு பூஜைகள் செய்தார். அதன் பின்னரே ஜெயலலிதா வேட்பாளர் பட்டியலைவெளியிட்டார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X