For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பரம்பரை எதிரி திமுக சந்திக்கும் கடைசி தேர்தல்: ஜெ

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

அதிமுகவின் பரம்பரை எதிரியான திமுக சந்திக்கும் கடைசித் தேர்தல் இது. வரும்காலங்களில் தேர்தல் களத்தில் திமுகவை சந்திக்க வேண்டிய நிலை அதிமுகவுக்குஏற்படாது என்று முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார்.

அதிமுக தலைமைக் கழகத்தில் இன்று தேர்தல் அறிக்கையை வெளியிட்ட ஜெயலலிதாபின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில்,

அதிமுக சார்பில் தேர்தலில் போட்டியிட சீட் கோரி 11,420 விண்ணப்பங்கள் வந்தன.இத்தனை விண்ணப்பங்கள் வந்தும் கூட என்னையும் சேர்த்து 182 பேருக்கு மட்டுமேவாய்ப்பு அளிக்க முடிந்தது.

அதிமுக வரலாற்றிலேயே அதிக தொகுதிகளில் முதல் முறையாக தற்போதுபோட்டியிடுகிறோம். இருப்பினும் 182 பேருக்கு மட்டுமே வாய்ப்பு அளிக்கமுடிந்தது.

இதனால் வாய்ப்பு கிடைக்காதவர்கள் தகுதி அற்றவர்கள் எனக் கூறி விட முடியாது.மீண்டும் வாய்ப்பு கிடைக்கும்போது அவர்களுக்கும் நிச்சயம் வாய்ப்புஅளிக்கப்படும்.

ஒவ்வொரு தொகுதியிலும் தகுதி படைத்த பலர் இருந்தாலும் கூட ஒருவருக்குமட்டுமே வாய்ப்பளிக்க முடியும். எனவே மற்றவர்கள் மனம் வருந்தக் கூடாது, மனம்தளரக் கூடாது.

வருகிற தேர்தலில் போட்டி அதிமுகவுக்கும், திமுகவுக்கும் இடையேதான்.அதிமுகவின் பரம்பரை எதிரி திமுக மட்டுமே. அரசியல் ரீதியாக நாங்கள் எதிரியாகப்பார்ப்பது திமுகவை மட்டுமே.

எனவே பரம்பரை எதிரியான திமுகவை, அதிமுக கடைசியாக சந்திக்கும் தேர்தல்இதுதான். வருகிற தேர்தல்களில் பரம்பரை எதிரியை சந்திக்க வேண்டிய சூழ்நிலைஇருக்காது.

வரும் தேர்தலில் ஜனநாயக மக்கள் கூட்டணி அமோக வெற்றி பெறும். அதில் எனக்குஎந்த சந்தேகமும் இல்லை. மக்கள் ஆதரவுடன், 234 தொகுதிகளில் பெரும்பாலானதொகுதிகளில் அதிமுக கூட்டணி வெற்றி பெறும். தனிப் பெரும்பான்மையுடன்அதிமுக மீண்டும் ஆட்சி அமைக்கும்.

அரசியல் எதிரிகளின் சதிச் செயலால், அரசியல் காழ்ப்புணர்ச்சியால் கொடுத்தபுகார்களின் காரணமாக மக்கள் நலத் திட்டங்களின் பலன்கள மக்களைச் சென்றடையமுடியாத வகையில், தேர்தல் ஆணையம் முட்டுக் கட்டை போட்டு வருகிறது.

பொதுவாக தேர்தல் நடைபெறும் மாநிலங்களில் புதிய திட்டத்தை அறிவிக்கக் கூடாது,புதிய திட்டங்களை செயல்படுத்தக் கூடாது என்று தேர்தல் நடத்தை விதிமுறைகூறுகிறது. ஆனால் ஏற்கனவே அறிவிக்கப்பட்டு, செயல்படுத்தப்பட்டு வரும்திட்டங்களை நிறுத்துவது என்பது இதுவரை நடந்திராத ஒன்று. ஆனால் தமிழகத்தில்அதுதான் நடந்து வருகிறது.

சுனாமியால் லட்சக்கணக்கான குடும்பங்கள் பாதிக்கப்பட்டன. சுனாமியால்பாதிக்கப்பட்ட மக்களுக்கு பல்வேறு நிவாரண உதவிகளை தமிழக அரசு வழங்கியது.வழங்கியும் வருகிறது. ஆனால் தற்போது அவற்றை நிறுத்துமாறு தேர்தல் ஆணையம்கூறியுள்ளது.

இதேபோல கன மழை பெய்து, பெரும் வெள்ளத்தில் சிக்கி லட்சக்கணக்கானோர்பாதிக்கப்பட்டனர். இதுவரை 38 லட்சம் குடும்பங்களுக்கு நிவாரண உதவிகள்வழங்கப்பட்டுள்ளன. இன்னும் நிறைய பேருக்கு தரப்பட வேண்டியுள்ளது. ஆனால்அந்தப் பணிகளையும் நிறுத்துமாறு தேர்தல் ஆணையம் கூறி விட்டது.

இதேபோல, பல ஆண்டுகளாக இலவச, வேட்டி சேலைத் திட்டம் அமலில் இருந்துவருகிறது. பழைய திடடமான இந்தத் திட்டத்தையும் தற்போது நிறுத்தி வைக்கஉத்தரவிட்டுள்ளார்கள். அதேபோல உழவர் பாதுகாப்புத் திட்டத்தையும் நிறுத்தச்சொல்லியுள்ளனர்.

இதுவரை எந்த மாநிலத்திலும் தேர்தல் ஆணையம் இதுபோல தலையிட்டதில்லை.ஆனால் தமிழத்தைப் பொருத்தவரையில் திமுக கூட்டணிக்கு உடந்தையாக தேர்தல்ஆணையம் நடந்து கொள்கிறது.

அரசியல் எதிரிகளின் காழ்ப்புணர்ச்சி காரணமாக செய்த புகாரின் பேரில்,லட்சக்கணக்கான ஏழை மக்களுக்குக் கிடைக்க வேண்டிய பலன்களை தடுத்துஉள்ளனர். இதுதொடர்பாக தமிழக அரசு உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளதுஎன்றார் ஜெயலலிதா.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X