For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

புரட்சிப் புயலின் 35 நாள் சூறாவளி பிரசாரம்

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, அதிமுக கூட்டணிக் கட்சி வேட்பாளர்களுக்காக35 நாள் தீவிர பிரசாரம் மேற்கொள்கிறார்.

முதல்வர் ஜெயலலிதாவின பிரசாரத் திட்டம் வகுக்கப்பட்டு வெளியிடப்படடுள்ளது.வருகிற 30ம் தேதி முதல் அவர் பிரசாரத்தைத் தொடங்குகிறார். தற்போதுவைகோவின் பிரசாரத் திட்டமும் அறிவிக்கப்பட்டுள்ளது.

நாளை முதல் வைகோவின் பிரசாரம் தொடங்குகிறது. நாளை மாலை சென்னைஅமைந்தகரையில் மதிமுக தேர்தல் பிரகடன கூட்டம் நடைபெறுகிறது. இதில்வேட்பாளர்களை அறிவித்து அறிமுகப்படுத்துகிறார் வைகோ.

31ம் தேதி தனது சொந்த ஊரான கலிங்கப்பட்டியிலிருந்து பிரசாரப் பயணததைத்தொடங்குகிறார். தூத்துக்குடியில் நடக்கும் பொதுக்கூட்டத்துடன் அன்றைய பிரசாரம்முடிகிறது. இடையில், சாத்தூர், கோவில்பட்டி ஆகிய இடங்களில் பொதுக்கூட்டத்தில்பேசுகிறார்.

ஏப்ரல் 1: ஆறுமுகநேரி தொடங்கி திருநெல்வேலி வரை. ஸ்ரீவைகுண்டம்,பாளையங்கோட்டை, மேலப்பாளையம், நெல்லையில் பொதுக் கூட்டங்கள்.

ஏப்ரல் 2: தேவர்குளம் தொடங்கி திருமங்கலம் வரை.

சஙகரன்கோவில, ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர், திருமங்கலத்தில் பொதுக் கூட்டம்.

ஏப்ரல் 3: செக்கானூரணியில் தொடங்கி திண்டுக்கல் வரை. உசிலம்பட்டி,திண்டுக்கல்லில் பொதுக்கூட்டம்.

ஏப்ரல் 4: ஒட்டன்சத்திரம், தாராபுரம், வெள்ளக்கோவிலில் பிரசாரம்.

ஏப்ரல் 5: அரவக்குறிச்சி, கரூரில் பிரசாரம்.

ஏப்ரல் 6: குளித்தலை தொடங்கி திருச்சி வரை. ஸ்ரீரங்கம், திருச்சியில் பொதுக்கூட்டம்.

ஏப்ரல் 8: கடலூரில் தொடங்கி ஆண்டிப்பட்டி வரை. கம்பம், பெரியகுளம்,ஆண்டிப்பட்டியில் பொதுக் கூட்டம்.

ஏப்ரல் 9: விளாத்திகுளம் தொடங்கி காரியாபட்டி வரை. அருப்புக்கோட்டை,விருதுநகர், காரியாபட்டியில் பொதுக் கூட்டம்.

ஏப்ரல் 10: புதுக்கோட்டை தொடங்கி பட்டுக்கோட்டை வரை. தஞ்சை, ஓரத்தநாடு,பட்டுக்கோட்டையில் பொதுக் கூட்டம்.

ஏப்ரல் 11: மதுக்கூர் தொடங்கி நாகை வரை. நாகையில் பொதுக் கூட்டம்.

ஏப்ரல் 12: நாகூர் தொடங்கி சிதம்பரம் வரை. மயிலாடுதுறை, சிதம்பரத்தில் பொதுக்கூட்டம்.

ஏப்ரல் 13: புவனகிரியில் தொடங்கி நெல்லிக்குப்பம் வரை. குறிஞ்சிப்பாடி, கடலூர்,நெல்லிக்குப்பத்தில் பொதுக் கூட்டம்.

ஏப்ரல் 14: நெய்வேலி தொடங்கி பெரம்பலூர் வரை. நெய்வேலி, பெரம்பலூரில்பொதுக் கூட்டம்.

ஏப்ரல் 15: உளுந்தூர்பேட்டை தொடங்கி திண்டிவனம் வரை. விழுப்புரம், செஞ்சி,திண்டிவனத்தில் பொதுக் கூட்டம்.

ஏப்ரல் 16: சென்னை வில்லிவாக்கம் தொடங்கி துறைமுகம் வரை.

ஏப்ரல் 17: மயிலாப்பூர் தொடங்கி ஆலந்தூர் வரை.

ஏப்ரல் 18: பூந்தமல்லி, தாம்பரம்.

ஏப்ரல் 19: ஆவடி தொடங்கி வேலூர் வரை. காஞ்சிபுரம், வேலூரில் பொதுக் கூட்டம்.

ஏப்ரல் 20: ஆம்பூர் முதல் தர்மபுரி வரை. திருப்பத்தூர், தர்மபுரியில் பொதுக் கூட்டம்.ஏப்ரல் 21: தாரமங்கலம், சேலம்.

ஏப்ரல் 22: திருச்செங்கோடு முதல் கபிலர்மலை வரை. கபிலர்மலையில் பொதுக்கூட்டம்.

ஏப்ரல் 24: கோபிச்செட்டிப்பாளையம் முதல் திருப்பூர் வரை. திருப்பூரில் பொதுக்கூட்டம்.

ஏப்ரல் 25: சென்னிமலையில் தொடங்கி பொள்ளாச்சி வரை. உடுமலைப்பேட்டை,பொள்ளாச்சியில் பொதுக் கூட்டம்.ட

ஏப்ரல் 26: தொண்டார்முத்தூர் முதல் சத்தியமங்கலம் வரை.பெரியநாயக்கன்பாளையம், சத்தியமங்கலத்தில் பொதுக் கூட்டம்.

ஏப்ரல் 27: சிவகாசி, விருதுநகர்.

ஏப்ரல் 28: வாசுதேவநல்லூர், கடையநல்லூர், தென்காசி.

ஏப்ரல் 29: நாசரேத் தொடங்கி அஞ்சுகிராமம் வரை. வள்ளியூர், அஞ்சு கிராமத்தில்பொதுக் கூட்டம்.

ஏப்ரல் 30: அகஸ்தீஸ்வரம் தொடங்கி நாகர்கோவில் வரை. மார்த்தாண்டம்,நாகர்கோவிலில் பொதுக் கூட்டம்.

மே 1: தாம்பரம், திருப்போரூர், புதுவை நிரவி.

மே 2: எழும்பூர், சேப்பாக்கம், ஆயிரம் விளக்கு, திருவல்லிக்கேணி.

மே 4 , 5: விருதுநகர் மாவட்டம்.

மே 6: ராயகிரி முதல் தென்காசி வரை. தென்காசி பொதுக் கூட்டத்துடன் பிரசாரம்நிறைவு பெறுகிறது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X