For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

திமுக தேர்தல் அறிக்கை:ரூ2க்கு அரிசி- கலர் டிவி எரிவாயு அடுப்பு- இளைஞர்களுக்கு உதவித் தொகை

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

திமுக தேர்தல் அறிக்கையை கட்சித் தலைவர் கருணாநதி இன்று வெளியிட்டார்.

அதில் விவசாயிகள் நலனுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. தேர்தல்அறிக்கையின் முக்கிய அம்சங்கள்:

- காலியாக உளள ஆசிரியர் பணியிடங்கள் உடனடியாக நிரப்பப்படும்.

- மாவட்டத்திற்கு ஒரு மருத்துவக் கல்லூரி அமைக்கப்படும்.

- கிலோ 2 ரூபாய்க்கு தரமான அரிசி வழங்கப்படும்.

- வீடு தோறும் வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டிகள் கிடைக்க வகை செய்யப்படும்.

- ஏழை, எளிய தாய்மார்களுக்கு எரி வாயு அடுப்பு இலவசமாக வழங்கப்படும்.

- சிறு குறு விவசாயிகளின் கூட்டுறவுக் கடன் முழுமையாக தள்ளுபடி செய்யப்படும்.

- விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் தொடர்ந்து வளங்கப்படும்.

- நிலமற்ற ஏழை விவசாயிகளுககு 2 ஏக்கர் நிலம் வழங்கப்படும்.

- விவசாயிகளுக்கு ஒருங்கிணைந்த பயிர் காப்பீட்டுத் திட்டம் அமல்படுத்தப்படும்.

- வேலையற்ற இளைஞர்களுக்கு மாதம் ரூ. 300 உதவித் தொகை.

- கிராமப்புற இளைஞர்களுக்கு இலவச கம்ப்யூட்டர் பயிற்சி.

- 3 லட்சம் இளைஞர்களுக்கு அரசுப் பணிகள்.

- கர்ப்பிணிகளுக்கு மாதம் ரூ. 1,000 வீதம் 6 மாதஙகளுக்கு உதவி.

- காவலர் குறை தீர்க்க 3வது போலீஸ் கமிஷன் அமைக்கப்படும்.

- அரசு ஊழியர்களுக்கு பறிக்கப்பட்ட சலுகைகள் மீண்டும் வழங்கப்படும்.

- அரசு பணிகளில் ஒப்பந்த நியமன முறை அறவே ரத்து செய்யப்படும்.

- இஸ்லாமியர், கிறிஸ்தவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க சட்டம்.

- முதியோர் உதவித் தொகை ரூ. 400 ஆகவும், ஊனற்றோர் உதவித் தொகை ரூ. 500ஆகவும் உயர்த்தப்படும்.

- அர்ச்சகராக பயிற்சி பெற்ற அனைத்து சமூகத்தினருக்கும் ஆலயங்களில் பணியாற்றவாய்ப்பு.

- அதிமுக ஆட்சியில் ஏற்றப்பட்ட பேருந்துக் கட்டணம் குறைக்கப்படும்.

- சத்துணவில், வாரம் 2 முறை முட்டை வழங்கப்படும்.

- காமராஜர் பிறந்த நாளை கல்விக் கண் திறந்த நாளாக அறிவித்து விழாஎடுக்கப்படும்.

- விமான நிலைய அறிவிப்புகளை தமிழில் இருக்க வேண்டும் என வலிறுத்துவோம்.

- மத்திய அரசின் விருதுகளுக்கு தமிழ் பெயர் வைக்க வலியுறுத்துவோம்.

- திருக்குறளை தேசிய நூலக அறிவிக்க வலியுறுத்துவோம்.

- கரும்பு விவசாயிகளின் லாரி வாடகையை நிர்வாகம் செலுத்த வகை செய்வோம்.

- முல்லைப்பெரியாறு அணை 152 அடியாக உயர்த்தப்படும்.

- கூட்டுறவு வங்கிகளில் வாராந்திர கடன்கள் வழங்கப்படும்.

- பொறியியல், மருத்துவ கல்லூரிகளில் படிக்கும் ஏழை மாணவர்களுக்கு அரசேதேர்வு கட்டணங்களை செலுத்தும்.

- முக்கிய நகரங்களில் தொழில்நுட்ப பூங்காங்கள் ஏற்படுத்தப்படும்

- 60 வயதுக்கு மேற்பட்ட அமைப்பு சார தொழிலாளர்களுக்கு மாதம் ரூ.300வழங்கப்படும்.

- நகர் பகுதியில் அனுமதியில்லாமல் கட்டப்பட்ட வீடுகளுக்கு அங்கீகாரம்தருவோம்.

- சென்னை புறநகர் பகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள் செயல்படுத்தப்படும்.

- இருவழிச்சாலைகள் நான்கு, ஆறுவழிச்சாலைகளாக மாற்றப்படும், சென்னையில்புதிய மேம்பாலங்கள் அமைக்கப்படும். போக்கவரத்து சீர் செய்யப்படும். புதியசுரங்கப்பாதைகள், ரயில்கள் அறிமுகப்படுத்தப்படும்.

- ஆதி திராவிடர்களுக்கு வழங்கப்படும் சலுகைகள், அனைத்து மற்றமதங்களில்உள்ளவர்களுக்கும் வழங்கப்படும்.

- தஞ்சாவூர் ராணுவ தளத்தை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வருவோம்.

- மதமாற்ற தடை சட்டத்தை நீக்குவோம்.

- கிழக்கு கடற்கரைச்சாலை கன்னியாகுமரி வரை நீட்டிக்கப்படும்.

- வெளிப்புற படபிடிப்பு கட்டணங்களை குறைப்போம்.

- கண்ணகி சிலையை கடற்கரைச்சாலையில் மீண்டும் நிறுவுவோம்.

- எம்ஜிஆர் திரைப்பட நகரை மீண்டும் உருவாக்குவோம்.

- சிவாஜிக்கு சிலையும், மணி மண்டபமும் அமைப்போம்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X