For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

விஜய்காந்துடன் கரம் கோர்க்கிறார் கார்த்திக்!?

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

விஜயகாந்த்தின் தேசிய முற்போக்கு திராவிட கழகமும், கார்த்திக்கின் பார்வர்ட் பிளாக்கட்சியும் கூட்டணி அமைக்க முடிவு செய்து அதற்கான முயற்சிகளில் இறங்கியுள்ளன.

மதுரையில் தேசிய முற்போக்கு திராவிட கழகத்தைத் தொடங்கிய விஜயகாந்த்ஆரம்பத்திலிருந்தே திமுகவை மிகக் கடுமையாக விமர்சித்து வந்த விஜய்காந்த்அதிமுக விஷயத்தில் சைலண்டாகவே இருந்தார்.

இதையடுத்து அவரை அதிமுக கூட்டணிக்கு இழுக்க முதல்வர் ஜெயலலிதாமுயன்றார். நடராஜன், சில மன்னார்குடியினர், சந்திரபாபு நாயுடு, தமிழகத்தின்முன்னணி பத்திரிக்கை அதிபர்கள் இருவர் என பல தரப்பினரின் உதவியுடனும்,விஜயகாந்தை இழுக்க ஜெயலலிதா முயன்றார்.

ஒரு கட்டத்தில் விஜய்காந்தும் கூட்டணிக்கு ரெடியானார். சசிகலாவும் விஜய்காந்தின்மனைவி பிரேமலதாவும் சந்தித்துப் பேசினர். அப்போது 40 சீட் கேட்டது கேப்டன்தரப்பு. ஆனால், 14 சீட் தான் தர முடியும் என்றது அதிமுக.

அடிமாட்டு ரேஞ்சுக்கு சீட் தருவதாக அதிமுக கூறியதால், கடுப்பாகிப் போனவிஜயகாந்த், ஆட்சியில் பங்கு தந்தால் தான் கூட்டணி இல்லாவிட்டால் கூட்டணிகிடையாது, 234 தொகுதிகளிலும் தனித்து போட்டி என்று திட்டவட்டமாகவேஅறிவித்தார். இதையடுத்து அவரிடம் இருந்து விலகிக் கொண்டது அதிமுக.

இதேபோல பார்வர்ட் பிளாக் கட்சியின் தலைவரான கார்த்திக்கும், அதிமுகவுடன்கூட்டணி அமைக்க மிகக் கடுமையாக முயன்றார்.

நடராஜனும் மதுரை ஆதீனமும் தான் இந்தக் கூட்டணிக்காக மிகவும் முயற்சித்தனர்.ஆனால், சந்தானத்தை மீண்டும் கட்சியில் சேர்த்துக் கொண்டு வந்தால் தான் சீட்டுஎன்று கூறிவிட்டார் ஜெயலலிதா.

இந் நிலையில் ஜெயலலிதா கூப்பிட்டார் என்று அவரைப் போய் பார்த்து அங்குசந்தானமும் வரவழைக்கப்படவே, அவமானப்பட்டுத் திரும்பினார் கார்த்திக்.

அந்த அவமானத்துக்குப் பின் 111 தொகுதிகளில் தனித்துப் போட்டி என்று அறிவித்து15 தொகுதிகளுக்கான வேட்பாளர்களையும் அறிவித்து விட்டார்.

திமுக மற்றும் அதிமுக கூட்டணிகள் படு வலுவாக இருப்பதால் தனித்துப்போட்டியிட்டால் ஏதும் மிஞ்சாது என்ற நிலையில் தான் விஜயகாந்த் கட்சியும்,கார்த்திக் கட்சியும் உள்ளன. எனவே இருவரும் சேர்ந்து கூட்டணி அமைத்தால் என்னஎன்ற எண்ணம் இரு தரப்பினருக்கும் தோன்றியுள்ளதாம்.

இவர்கள் இருவரையும் இணைத்து வைக்க சிலர் முயற்சி மேற்கொண்டுள்ளதாககூறப்படுகிறது. இரு கட்சிகளும் கூட்டணி அமைத்து அக்கூட்டணியில் வேறு சிலகட்சிகளையும் சேர்த்து 3வது அணி அமைத்தால் திமுக, அதிமுக கூட்டணிகளுக்குசரியான போட்டியாக அமையும் என்று இந்த மத்தியஸ்தர்கள் இரு நடிகர்களுக்கும்எடுத்துக் கூறியுள்ளனராம்.

விஜயகாந்த்துடன் கூட்டணி அமைப்பீர்களா என்று கார்த்திக்கிடம் செய்தியாளர்கள்கேட்டபோது, அரசியலில் எதுவும் நடக்கலாம் என பொத்தாம் பொதுவாக கூறினார்.விஜயகாந்த்தும், கார்த்திக்கும் கூட்டணி அமைத்தால் அதில் சேர பாஜக உள்ளிட்ட சிலகட்சிகள் ஆர்வமாக உள்ளன.

அதேபோல அதிமுகவால் நம்ப வைக்கப்பட்டு அரசியல் அநாதைகள் ஆக்கப்பட்டதிண்டிவனம் ராமர்த்தி, விஜய டி.ராஜேந்தர் உள்ளிட்டோரும் கூட்டணியில் சேரலாம்என்றும் பேச்சு அடிபடுகிறது.

3வது அணியை அமைத்து பொதுவான சின்னத்தில் போட்டி போடவும்பேச்சுவார்த்தை நடந்து வருகிறதாம். சூட்டிங்க்குப் போவது உள்பட எல்லாவற்றையும்கால தாமதமகாவே செய்து வரும் கார்த்திக், இந்த முயற்சியையாவது படு வேகமாகமுடித்தால்தான் 234 தொகுதிகளிலும் முழுமையாக பிரசாரம் செய்ய நேரம் இருக்கும்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X