For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஜெ எதிர்ப்புக்கு பணிந்தது தேர்தல் ஆணையம்!

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

முதல்வர் ஜெயலலிதாவின் கடும் எதிர்ப்பைத் தொடர்ந்து, சுனாமி, மழை, வெள்ளநிவாரண உதவிகளை வழங்க தமிழக அரசுக்கு எந்தத் தடையும் இல்லை என்றுதேர்தல் ஆணையம அறிவித்துள்ளது.

தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதால், சுனாமி, மழை, வெள்ள நிவாரணஉதவிகளை வழங்குவது, இலவச வேட்டி, சேலை வழங்குவது உள்ளிட்டவற்றுக்குதேர்தல் ஆணையம் தடை விதித்தது.

இதற்கு முதல்வர் ஜெயலலிதா கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தார். திமுக உள்ளிட்டகட்சிகளின் தூண்டுதலின் காரணமாகவே இவ்வாறு தேர்தல் ஆணையம் பாரபட்சமாகநடந்து கொள்வதாக அவர் குற்றம் சாட்டியிருந்தார்.

இந் நிலையில் நிவாரண உதவிகள் வழங்குவதற்கு விதிக்கப்பட்டிருந்த தடையைதேர்தல் ஆணையம் விலக்கிக் கொண்டுள்ளது.

இதுதொடர்பாக தலைமைத் தேர்தல் ஆணையர் பி.பி.டாண்டன் செயதியாளர்களிடம்பேசுகையில், மே 8ம் தேதி நடைபெறவுள்ள தேர்தல் தொடர்பாக தமிழகம் வந்துஅரசியல் கட்சிப் பிரதிநிதிகளுடன் ஆலோசனை நடத்தினோம்.

பல்வேறு பிரச்சினைகள் குறித்து அதிகாரிகளுடனும் ஆய்வு செய்தோம்.

அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளின் பிரதிநிதிகள் வாய் மொழியாகவும், எழுத்துப்பூர்வமாகவும் எங்களிடம் பல கோரிக்கைகளை வைத்துள்ளனர். அவற்றை கருத்தில்கொண்டுள்ளோம்.

தேர்தல் ஏற்பாடுகள் சிறப்பாக செய்யப்பட்டு வருகின்றன.

தமிழகத்தில் தற்போது 69 சதவீத வாக்காளர்களுக்கு அடையாள அட்டைகள்வழங்கப்பட்டு விட்டன. தேர்தலின்போது 52,255 வாக்குச் சாவடிகள்அமைக்கப்படவுள்ளன.

வயதானவர்கள், உடல் ஊனற்றவர்களுக்காக கீழ் தளத்தில் வாக்குச் சாவடிஅமைக்கப்படும். 65 மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள்பயன்படுத்தப்படவுள்ளன.

தமிழகத்தில் 284 தேர்தல் பார்வையாளர்கள் நியமிக்கப்படவுள்ளனர். ஒரு தொகுதிக்குஒரு பொதுப் பார்வையாளர் இருப்பார்.

இவர் தவிர ஐந்து அல்லது 6 தொகுதிகளுக்கு சேர்த்து ஒரு சிறப்புப் பார்வையாளர்இருப்பார்.

சுனாமி, மழை வெள்ள நிவாரண உதவிகளை வழங்கும் திட்டத்துக்கு தேர்தல்ஆணையம் தடை விதித்திருப்பதாக புகார் எழுந்துள்ளது. தேர்தல் தேதிஅறிவிக்கப்பட்ட நாளுக்கு (மார்ச் 1ம் தேதி) முன்பாக பாதிக்கப்பட்டோர் பட்டியலில்சேர்க்கப்பட்டுள்ள அனைவருக்கும் உதவிகளை வழங்கலாம்.

மார்ச் 1ம் தேதிக்குப் பிறகு எவரையும் பாதிக்கப்பட்டவராக அடையாளம்காட்டியிருந்தால் அவர்களுக்கு நிவாரணம் வழங்கக் கூடாது.

அதேபோல, உழவர் பாதுகாப்புத் திட்டத்திலும் பயனாளியாக மார்ச் 1ம் தேதிக்குமுன்பு அடையாளம் காணப்பட்டவர்களுக்கு உதவிகளைச் செய்ய அனுமதிக்கிறோம்.

இருப்பினும் பொங்கல் பண்டிகைக்கான இலவச வேட்டி, சேலைத் திடடத்தை நிறுத்திவைக்க உத்தரவிட்டுள்ளோம்.

சென்னை போலீஸ் கமிஷனர் மாற்றம் தொடர்பான வழக்கு நிலுவையில் இருப்பதால்அதுகுறித்து இப்போது ஏதும் கூற முடியாது.

அமைச்சர் ஜெயக்குமார் மீதான தேர்தல் விதி மீறல் புகார் குறித்து மாநகராட்சிஆணையர் விசாரணை நடத்தி வருகிறார் என்றார் டாண்டன். மற்ற தேர்தல்ஆணையர்களான கோபால்சாமி, நவீன் சாவ்லாவும் உடனிருந்தனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X