For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஈழத் தமிழர்களுக்கு தமிழக கல்லூரிகளில் இட ஒதுக்கீடு: மதிமுக தேர்தல் அறிக்கை

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

இலங்கைத் தமிழர்களுக்கு தமிழக கல்லூரிகளில் இட ஒதுக்கீடு மீண்டும் கொண்டுவரப் பாடுபடுவோம், இலங்கைப் பிரச்சினையில் மத்திய அரசு தலையிட்டுபேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காண முயற்சிப்போம் என மதிமுக தேர்தல் அறிக்கையில்கூறப்பட்டுள்ளது.

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் தேர்தல் அறிக்கை சென்னையில் நடந்ததேர்தல் பிரகடன கூட்டத்தில் வெளியிடப்பட்டது.

வைகோ அறிக்கையை வெளியிட்டார்.

அதன் முக்கிய அம்சங்கள்:

- மதுரை, திருச்சி, நெல்லை, சேலம், தஞ்சையில் சாப்ட்வேர் பூங்காக்கள்நிறுவப்படும்.

- ாமக்கல்லில் முட்டை உற்பத்தியை பாதுகாக்க குளிர்பதன கிடங்குகளை அமைக்கநடவடிக்கை எடுப்போம்.

- சாயக் கழிவுகளை கடலில் கலக்கும் திட்டத்தினை உடனே நிறைவேற்றபாடுபடுவோம்.

- புதிய தொழிற் கொள்கை வகுக்கப்படும்.

- நெல்லையில் ஒருங்கிணைந்த ஜவுளிப் பூங்கா அமைக்கப்படும்.

- அனைத்து வீடுகளுக்கும் மின் இணைப்பு, இலவச மின்சாரத் திட்டம்.

- சென்னையைப் போல கோவையில் கம்ப்யூட்டர் தொழில்நுட்பப் பூங்கா (டைல்பார்க்) அமைக்கப்படும்.

- சென்னை, மதுரை, கோவையில் உயிரித் தொழில்நுட்ப களத்தை (பயோ டெக்பார்க்) அமைக்க பாடுபடுவோம்.

- நெய்வேலி மின்சாரத்தின் பெரும் பகுதியினை தமிழகத்திற்குக் கிடைக்கநடவடிக்கை.

- வேலை இல்லாதவர்களுக்கு மாதந்தோறும் ரூ. 500 உதவி.

- விசைத்தறி தொழிலாளர்களுக்கு நல வாரியம்.

- சென்னையைப் போல மதுரை, கோவை, திருச்சி, சேலம், நெல்லை மாநகராட்சிப்பகுதிகளில் மாநகர வளர்ச்சிக் குழுமம் ஏற்படுத்துதல்.

- இலங்கைத் தமிழர்களுக்கு தமிழக கல்லூரிகளில் இட ஒதுக்கீடு தரும் முறையைமீண்டும் அமல்படுத்துவோம்.

- இலங்கைத் தமிழர் பிரச்சினையில் மத்திய அரசு தலையிட்டு அமைதி தீர்வு ஏற்படஉதவ வேண்டும்.

- இலங்கையில் போர் மூளுமானால் சிங்கள ராணுவத்திற்கு இந்திய அரசு எந்தவிதஉதவிகளையும் செய்யாமல் தடுக்க நடவடிக்கை எடுப்போம்.

- கச்சத்தீவை இலங்கையிடமிருந்து திரும்பப் பெற மத்திய அரசு மூலம் நடவடிக்கைஎடுப்போம்.

- திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க மத்திய அரசை வற்புறுத்துவோம். -முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் தமிழகத்தின் நலனுக்காக குரல்கொடுப்போம்.

- பாலாற்றின் குறுக்கே அணை கட்டும் ஆந்திர அரசின் முயற்சிகளை தடுத்துநிறுத்துவோம்.

- கேபிள் கம்பிகளை தமிழகம் முழுவதும் கொண்டு செல்லும் உரிமையை தமிழகஅரசுக்கே கிடைக்க நடவடிக்கை எடுப்போம்.

-அரசு கேபிள் கழகம் உருவாக பாடுபடுவோம் என்பது உள்ளிட் பல்வேறு முக்கியஅம்சங்கள் தேர்தல் அறிக்கையில் இடம் பெற்றுள்ளன.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X